search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாசரேத்தில் பைக் விபத்தில் முதியவர் பலி
    X

    நாசரேத்தில் பைக் விபத்தில் முதியவர் பலி

    பைக் விபத்தில் பலத்த காயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து நாசரேத் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாசரேத்:

    சாத்தான்குளம் அருகே உள்ள குறுகால்பேரியை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 87). இவருக்கு 4 மகன்கள் மற்றும்3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

    இந்நிலையில் பால்ராஜ் பொருட்கள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் இரவு நாசரேத்திற்கு வந்து பொருட்கள் வாங்கிவிட்டு பின்னர் மீண்டும் சாத்தான்குளம் சென்று கொண்டிருந்தார். அவர் வாலசுப்பிரமணியபுரம்- சின்னமாடன்குடியிருப்பு பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள தடுப்பில் பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாசரேத் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் விரைந்து வந்து பால்ராஜ் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×