search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old lady"

    • பாம்பு கடித்து மூதாட்டி இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    கள்ளிக்குடி அருகே உள்ள உலகாணி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கண்னையா. இவரது மனைவி சக்கம்மாள்(58) அதிகாலை வீட்டு வாசல் தெளிக்க வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சக்கம்மாள் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் அந்த பகுதியில் உள்ள செல்லாயி வீட்டுக்கு சென்றனர்.
    • வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 12 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ராசாம்பாளையம் ரோடு, எஸ்.எஸ்.பி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் ஒரு வீட்டில் செல்லாயி (58) என்ற மூதாட்டி பல வருடங்களாக வீட்டில் வைத்து மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவர் வீட்டுக்கு மது அருந்த வருபவர்களால் அப்பகுதி மக்கள் பல்வேறு அவதிக்கு உள்ளாகினர்.

    மது குடிக்க வரும் குடிமகன்களால் அப்பகுதி பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்பட்ட னர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே ஈரோடு கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படு கிறது.

    இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு மது விற்பனையை தடுத்து நிறுத்த கோரி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது வீரப்ப ன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் பொதுமக்களி டம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். நிச்சயமாக மது விற்பனையில் ஈடுபடு பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் சண்முகம் உறுதி அளித்தார்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள செல்லாயி வீட்டுக்கு சென்றனர். அங்கு செல்லாயிடம் விசாரணை நடத்தினர். வீட்டில் விற்ப னை க்காக வைக்கப்பட்டி ருந்த 12 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லாயியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த மது விற்பனையில் தொடர்பு டைய அவருடைய உறவி னர்களையும் தேடி வருகின்றனர்.

    • மகனிடம் இருந்து வீட்டை மீட்டுத்தர வேண்டும் என்று கலெக்டரிடம் மூதாட்டி மனு அளித்தார்.
    • மகள் மற்றும் மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் தவசி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது80). இவர்களுக்கு 4 மகன்கள், 1 மகள் உள்ளனர். மகள் மற்றும் மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    தவசி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். செல்லம்மாள் சொத்துக்களை மகன்களுக்கு பிரித்து கொடுத்தார்.

    தான் வசித்து வரும் வீட்டையும் மகன்க ளுக்கு தானமாக பத்திரப் பதிவு செய்து கொடுத்தார்.

    இந்தநிலையில் மூத்த மகன் பொன்மாடசாமி, தாய் செல்லம்மாளை வீட்டை விட்டு வெளியேறு மாறு அடித்து துன்புறுத்தி உள்ளார். இது குறித்து செல்லம்மாள் ஸ்ரீவில்லி புத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் ஜெயசீலனிடம் புகார்் செய்தார். அந்த மனுவில் மகன் தன்னை அடித்து விரட்டுவதால் வீட்டை தானமாக வழங்கிய பத்திரத்தை ரத்து செய்து வீட்டை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • 2 மூதாட்டிகளிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்தது.
    • மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    அவனியாபுரம், முத்துக்குமார் தெருவை சேர்ந்தவர் கனகவள்ளி (65). இவர் சித்திரை திருவிழா எதிர்சேவை பார்ப்பதற்காக ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு கும்பல் கனகவள்ளி அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பரவை பவர் ஹவுஸ் சாலை ஆர்.ஜே.டி. நகரை சேர்ந்தவர் சுந்தரி (60). இவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். விளாங்குடி கொண்டை மாரியம்மன் கோவில் அருகே ஒரு மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்தது. அதில் 2 பேர் இருந்தனர். அந்த கும்பல் சுந்தரி அணிந்திருந்த 12 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    ஆனையூர் காமராஜர் நகரை சேர்ந்த பிரேம்குமார் மனைவி கமலலலிதா(56). நேற்று இவர் கள்ளழகர் சப்பரம் பார்ப்பதற்காக, கலைஞர் நகருக்கு வந்தார். மீனாட்சி குடியிருப்பு அருகே கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்த கமலலலிதாவிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள முத்துசாமிபட்டியை சேர்ந்தவர் சரத்குமார். இவர் மேலூர் யூனியன் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் மேலூர் யூனியன் அலுவல வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவைத்து விட்டு பணிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்அலை. யாரோ மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து மேலூர் போலீஸ் நிலையத்தில் சரத்குமார் கொடுத்த புகாரின் பேரில் மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதரவின்றி தவித்த மூதாட்டியை போலீஸ் சூப்பிரண்டு மீட்டனர்.
    • கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 80 வயதுடைய மூதாட்டி ஆதரவின்றி சுற்றி வந்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 80 வயதுடைய மூதாட்டி ஆதரவின்றி சுற்றி வந்தார். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமானது. மேலும் உணவு கிடைக்காமல் உயிருக்கு போராடிய அந்த மூதாட்டி ஒரே இடத்தில் கிடந்தார்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று பார்த்து மூதாட்டியின் நிலைகுறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து ஆம்புலன்சு மூலம் மூதாட்டியை மீட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவருக்கு உதவியாக ஒரு பெண் போலீசையும் நியமித்து உத்தரவிட்டார்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாள் கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் வயது மூப்பு காரணமாக மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் அவரை பார்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன். ெதாடர்ந்து அவரை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக களத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததை பொதுமக்கள் பாராட்டினர்.

    • மகள் வீட்டுக்கு சென்றதும் பார்த்தபோது ரூ. 80 ஆயிரம் இருந்த பணப்பை மாயமாகி இருந்தது.
    • விசாரணையில் அந்த பணப்பை மும்தாஜ் தவற விட்டு இருப்பது தெரியவந்தது.

    திருவொற்றியூர்:

    ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் மும்தாஜ் பேகம் (வயது 67). இவர்,சேக் மேஸ்திரி பகுதியில் உள்ள மகள் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றார்.

    அப்போது ரூ.80 ஆயிரம் ரொக்கத்தையும் எடுத்து சென்றார்.

    மகள் வீட்டுக்கு சென்றதும் பார்த்தபோது ரூ. 80 ஆயிரம் இருந்த பணப்பை மாயமாகி இருந்தது. அதனை ஆட்டோவிலேயே தவறவிட்டது தெரியவந்தது.

    இது குறித்து ராயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே திருவொற்றியூர் டோல்கேட் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ் (35) என்பவர் தனது ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டி ஒருவர் ரூ.80 ஆயிரம் பணப்பையை தவற விட்டுவிட்டதாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    விசாரணையில் அந்த பணப்பை மும்தாஜ் தவற விட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மும்தாஜை போலீசார் வரவழைத்து ரூ.80ஆயிரத்தை ஒப்படைத்தனர். மேலும் பயணி தவறவிட்ட பணத்தை நேர்மையாக போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் பிரகாசை ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமணன், இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

    • மூதாட்டி கிணற்றில் பிணமாக மிதந்தார்.
    • இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, தாதம்பட்டி நகர்ப்புற சாலையில் பக்கத்தில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரங்கள் தெரியவில்லை. இது குறித்து தாதம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    சரியான முகவரி தெரியாததால் ஆறுமுத்தாம்பாளையம் பள்ளி முன்பு அமர்ந்துள்ளார்.

    பல்லடம்:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்துரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மனைவி பொன்னம்மாள்(வயது 82). இவரது கணவர் பழனிச்சாமி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில், கோவிலில் தங்கி அங்கு தூய்மை பணியாளராக பணியாற்றி, வந்த அவரிடம் அவரது சகோதரி 25 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாகவும், தற்போது பணம் தேவைப்படுவதால், பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் வசிக்கும் அவரது சகோதரியை தேடி வந்துள்ளார்.

    இந்த நிலையில், சரியான முகவரி தெரியாததால் ஆறுமுத்தாம்பாளையம் பள்ளி முன்பு அமர்ந்துள்ளார். நீண்ட நேரமாக மூதாட்டி ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்ட அந்த வழியே சென்ற கவுன்சிலர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள் மூதாட்டியிடம் விசாரித்துள்ளனர். அவர்களிடம் சகோதரியை தேடி வந்தது குறித்து கூறியுள்ளார்.

    இதையடுத்து பொன்னம்மாளை அவரது சகோதரி வீட்டிற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவருக்கு உணவும், பணம் ரூ.2 ஆயிரமும் அவரது சகோதரி வழங்கியுள்ளார். அதனை பெற்றுக் கொண்டு மனிதாபிமானத்துடன் உதவிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.

    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் எதிரில் உள்ள தனியார் வங்கி முன்பு சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார்.
    • மூதாட்டியை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த மூதாட்டி 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    சேலம்:

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் எதிரில் உள்ள தனியார் வங்கி முன்பு சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார்.

    இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மயங்கி கிடந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி கடந்த 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    மேலும், இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே மானத்தி அருந்ததியர் தெருவை சேர்ந்த மூதாட்டி தீயில் கருகி பலியானார்.
    • பலத்த காயம் ஏற்பட்ட நல்லம்மாளை அவரது உறவினர்கள் அங்கிருந்து எளையாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே மானத்தி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 85 ). கூலி தொழிலாளி. இவர் கூப்பிட்டாம் பாளையம் பகுதியில் உள்ள தனது அண்ணன் மகன் வீட்டில் வசித்து வந்தார் .

    இந்நிலையில் கடந்த கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றும் போது சேலையில் தீப்பிடித்ததில் அவரது இடுப்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பலத்த காயம் ஏற்பட்ட நல்லம்மாளை அவரது உறவினர்கள் அங்கிருந்து எளையாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிரவாதி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து நல்ல மாளின் மகள் பெருமாயி ( 51) வேல கவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • வீட்டில் துளசியம்மாள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் கதிரம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் துளசியம்மாள் (68). இவரது மகன் திருநாவுக்கரசு நசியனூர் கலவை ஓரம் தெரு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    துளசியம்மாள் தினமும் மகன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு பின்னர் இரவில் கதிரம்பட்டியில் உள்ள தனது வீட்டில் தூங்க சென்று விடுவார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக துளசியம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் மகன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு இரவில் தனது வீட்டிற்கு தூங்க சென்று விட்டார்.

    காலை திருநாவுக்கரசு தனது தாயை பார்ப்ப தற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள அறையில் துளசியம்மாள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் உடல்நிலை குறைவால் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×