search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Officers"

    • பள்ளி வகுப்பறை கட்டிடம் உள்பட 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
    • இத்திட்டப்பணிகளை குறித்து நேரில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பள்ளி வகுப்பறை கட்டிடம் உள்பட 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், சாலியமங்களம் ஊராட்சிமன்ற தலைவர் சக்திசிவக்குமார், துணைதலைவர் செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு, ஒப்பந்ததாரர் சண்.சரவணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் துணைத்தலைவர் ஜெயமுருகன் தலைமையில் நடந்தது. மாநிலசெயற்குழு உறுப்பினர் பிரகாஷ்பாபு தீர்மானத்தை முன் மொழிந்தார். ஒடிசா ரெயில் விபத்தில் பலியான பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கடந்தகால நடவடிக்கைகள் குறித்து மாவட்டச்செயலாளர் சோமசுந்தர், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினார். வரவு-செலவு அறிக்கை குறித்து மாவட்டப் பொருளாளர் விஜயகுமார் அறிக்கை சமர்பித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தாசில்தார் மூர்த்தி முன்னிலை வகித்தார்.

    வாடிப்பட்டி

    திருச்சியில் வருவாய் ஆய்வாளர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும், ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கிளை தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத் துணைத் தலைவர் துரைப்பாண்டி, மாவட்ட இணை செயலாளர் இங்கர்சால், வட்டத் தலைவர் சுப்புலட்சுமி, வட்ட மூத்த உறுப்பினர் கிருபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரவை நல்லார் மாரியம்மன் கோவில் முதல் தெற்குபொய்கை நல்லூர் வரை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • சாலையின் நீளம், அகலம் மற்றும் கனம் உள்ளிட்டவற்றை அளவீடுகள் மூலம் ஆய்வு செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை துறையில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளின் தரம் மற்றும் கட்டுமானம் குறித்து ஆண்டுதோறும் தணிக்கை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி இந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறை தஞ்சாவூர் வட்ட கண்காணிப்பு பொறியாளர் (திட்டங்கள்) கிருஷ்ணசாமி தலைமையில் என்ஜினீயர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    இதில் நாகை அருகே பரவை நல்லார் மாரியம்மன் கோவில் முதல் தெற்குபொய்கை நல்லூர் வரை சாலையின் தரம் உயர்த்தும் பணியினை தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது சாலையின் நீளம், அகலம் மற்றும் கனம் உள்ளிட்டவற்றை அளவீடுகள் மூலம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது திருச்சி நெடுஞ்சாலை துறை (திட்டங்கள்) கோட்ட பொறியாளர் முருகானந்தம், நாகை நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் சிவக்குமார் உள்பட நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் உடன் இருந்தனர்.

    • விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், விதை ஆய்வு இணை இயக்குநர் செல்வமணி திடீர் ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது விதை ஆய்வாளர் சரண்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், விதை ஆய்வு இணை இயக்குநர் செல்வமணி திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது அரசு மற்றும் தனியார் விதை விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் விதைகளுக்கு உரிய கொள்முதல் பட்டியல்கள் மற்றும் விற்பனைப் பட்டியல்கள் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

    முளைப்புத்திறன் ஆய்வறிக்கை இல்லாமல் விதைகளை விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தினார். விதை விற்பனையாளர்கள் இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல்கள், முளைப்பு திறன் அறிக்கைகள், விதைகளின் இருப்பு விபரம் மற்றும் விற்பனை விலை பலகை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    விவசாயிகள் விதைகள் வாங்கும் போது, லைசென்ஸ் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே விதை வாங்க வேண்டும். அதற்கான பில்களை கேட்டுப்பெற வேண்டும். விற்பனை பட்டியலில் விதைக் குவியல் எண் மற்றும் காலாவதி தேதியை உறுதி செய்தல் வேண்டும். மேலும் விதை விற்பனையாளர்களிடம் முளைப்புத்திறன் ஆய்வறிக்கையை சரிபார்க்க வேண்டும். இந்த நடைமுறைகளை கடைபிடிக்கும்போது விவசாயிகள் விதைகளின் தரத்தினை உறுதி செய்துகொள்ளலாம் என அவர் கூறினார்.

    உரிய ஆவணங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட விதைக் குவியல்களுக்கு விதைகள் சட்டம் மற்றும் விதைக்கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் விதைகளின் தரத்தினை உறுதிப்படுத்த விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. ஆய்வின்போது விதை ஆய்வாளர் சரண்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் அருள்மொழி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • தார் கலவை, சாலையின் தடிமன், பயன்படுத்தும் பொருட்களின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.

    ராசிபுரம்:

    தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை அலகில் செயல்பட்டு வரும் திட்டப்பணிகளை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம், ராசிபுரம் உட்கோட்டத்தைச் சேர்ந்த மல்லியக்கரை- ராசிபுரம்- திருச்செங்கோடு- ஈரோடு சாலை அகலப்படுத்தும் பணிகளை சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் அருள்மொழி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது, நாமக்கல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் கோட்ட பொறியாளர் குணா, சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் நெடுஞ்சாலை அலகின் உதவி கோட்ட பொறியாளர் பரிமளா, நாமக்கல் நெடுஞ்சாலை தரக் கட்டுப்பாடு உட்கோட்ட அலகின் உதவி கோட்ட பொறியாளர் சோமேஸ்வரி, ராசிபுரம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். தார் கலவை, சாலையின் தடிமன், பயன்படுத்தும் பொருட்களின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.

    • சட்ட விரோதமாக நடைபெற்ற மணல் கடத்தலை தடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.
    • கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிசை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    நாமக்கல்:

    தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் தாலுகா, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அப்பகுதியில் சட்ட விரோதமாக நடைபெற்ற மணல் கடத்தலை தடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

    அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிசை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    இந்த கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் நாமக்கல் மாவட்ட வி.ஏ.ஓ.க்கள் சங்கம் சார்பில், நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகி லட்சுமிநரசிம்மன் உள்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், தூத்துக்குடியில் வி.ஏ.ஓ.வை தாக்கியவர்களை உடனடியாக கொலை குற்ற வழக்கில் கைது செய்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும். தமிழக அரசு பணி பாதுகாப்பு சட்டத்தினை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி னார்கள்.

    • விருதுநகரில் சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் பரிசு வழங்கினார்.
    • விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மார்ச் மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான மார்ச் மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில், சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசனுக்கு முதல் பரிசும், ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு 2-ம் பரிசும், வெம்பக்கோட்டை வட்டா ட்சியர் ரங்கநாதனுக்கு 3-ம் பரிசும்ட வழங்கப்பட்டது.

    சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் ராம்தாசுக்கு முதல் பரிசும், சாத்தூர் தனி வட்டாட்சியர் சீதாலட்சுமிக்கு 2-ம் பரிசும், ராஜபாளையம் தனி வட்டாட்சியர் சரசுவஸ்வதிக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிக ளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சி யர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமாருக்கு முதல் பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜா மணிக்கு 2-ம் பரிசும், காரியாபட்டி மண்டல துணை வட்டாட்சியர் அழகுப் பிள்ளைக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது. உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் வெம்பக்கோட்டை வட்டத்துணை ஆய்வாளர் மாரிமுத்துவுக்கு முதல் பரிசும், விருதுநகர் வட்டத்துணை ஆய்வாளர் அரவிந்தனுக்கு 2-ம் பரிசும், சாத்தூர் வட்டத்துணை ஆய்வாளர் தங்கப்பாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத் துணை ஆய்வாளர் ராமசுப்பு ஆகியோருக்கு 3-ம் பரிசும், வழங்கப்பட்டது.

    அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் சிவகாசி வட்ட சார்ஆய்வாளர் சுரேசுக்கு முதல் பரிசும், விருதுநகர் வட்ட குறுவட்ட அளவர் பாண்டிச்செல்விக்கு 2-ம் பரிசும், விருதுநகர் வட்ட சார் ஆய்வாளர் முத்து மாரிக்கு 3-ம் பரிசையும் கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சிவகாசி கோட்டாட்சியர் விசுவ நாதன், சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளழகா் ஆற்றில் இறங்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • ராமராயர் மண்டகப்படி, தீர்த்தவாரி நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோவில் சித்திரைத் திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத் துடன் தொடங்குகிறது.

    விழாவைத்தொடா்ந்து, முக்கிய விழாவான பட்டாபிஷேகம் வருகிற 30-ந்தேதியும், திக்குவிஜயம் மே 1-ந்தேதியும், திருக்கல்யா ணம் மே 2-ந்தேதியும், தேரோட்டம் மே 3-ந்தேதி யும், கள்ளழகருக்கு எதிர் சேவை மே 4-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து, மே 5-ந்தேதி அதிகாலை கள்ள ழகா் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடை பெற உள்ளது.

    வைகையாற்றில் கள்ளழகா் இறங்கும் இடமான ஆழ்வாா்புரம் பகுதியில் செய்யப்ப உள்ள தூய்மைப்பணிகள், முன்னேற்பாட்டு பணிகள், பந்தல் அமைத்தல், மணல் திட்டு ஏற்படுத்துதல், தண்ணீா் நிரப்புதல், கேலரிகள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதனை கள்ளழகர் கோவில் நிர்வாகத்தினர் இன்று ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் கள்ளழகர் கோவில் இணை ஆணையர் ராமசாமி மற்றும் அற நிலையத்துறை, கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராமராயர் மண்டகப்படி, தீர்த்தவாரி நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தனர்.

    • ஈரோடு மாநகராட்சியில் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • ஜானகி ரவீந்திரன் ஈரோடு மாநகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    சூரம்பட்டி:

    ஈரோடு மாநகராட்சியில் அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டு ள்ளனர்.

    அதன்படி ஈரோடு மாநகராட்சி கமிஷனராக இருந்த சிவகுமார் கோவை மாநகராட்சி துணை கமிஷன ராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    இவருக்கு பதில் தஞ்சை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக பணியாற்றிய ஜானகி ரவீந்திரன் பதவி உயர்வு பெற்று ஈரோடு மாநகராட்சி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    இவர் நாளை (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்கிறார். இதேபோல் ஈரோடு மாநகராட்சி மாநகர என்ஜினீயராக பணியாற்றிய மதுரம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

    இவருக்கு பதில் ஈரோடு மாநகராட்சி செயற்பொறி யாளராக பணியாற்றிய விஜய குமார் ஈரோடு மாநகராட்சி மாநகர என்ஜினீய ராக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்று கொண்டார்.

    ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டல உதவி செயற்பொறி யாளராக பணியாற்றிய சண்முக வடிவு ஈரோடு மாநகராட்சி செயற்பொறி யாளராக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்று கொண்டார்.

    • கீரம்பூர் அருகே ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை கடத்தப்படுகிறதா‌ என‌‌ வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • கீரம்பூர், டோல்கேட் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் லாரி மற்றும் கனரக வாக–னங்களை ஆய்வு செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் கீரம்பூர் அருகே ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை கடத்தப்படுகிறதா என வாகன சோதனை மேற்கொண்டனர்.

    கீரம்பூர், டோல்கேட் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் லாரி மற்றும் கனரக வாக–னங்களை ஆய்வு செய்தனர்.

    தமிழக அரசு சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்–படும் ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவை கடத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்ப–டையில் அவ்வழியாக வந்த லாரி, சரக்கு ஆட்டோ மற்றும் கனரக வாகனங்–களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் ரேஷன் அரிசி மற்றும் மண் எண்ணை எதுவும் பிடிபட–வில்லை எனவும் தொடர்ந்து வாகன சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறையினர் தெரிவித்தனர்.

    வழியாக வந்தால் அனைத்து வாகனங்க–ளையும் நிறுத்தி சோதனை செய்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • தற்காலிகமாக இயங்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென்று பார்வையிட்டர்.
    • அலுவலகத்தில் இருந்த தன்பதிவேடு, வருகை பதிவேடு, ரொக்கப் பதிவேடு, வைப்புத் தொகை, இருப்பு பதிவேடு, உள்ளிட்ட பார்வையிட்டர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் தற்காலிகமாக இயங்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அலுவலகத்தில் இருந்த தன்பதிவேடு, வருகை பதிவேடு, ரொக்கப் பதிவேடு, வைப்புத் தொகை, இருப்பு பதிவேடு, உள்ளிட்ட கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் அங்கிருந்த அதிகாரிகள் மத்தியில் ஆலோசனை கூறினார்.

    இந்த ஆய்வில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கமலராஜன், சாந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×