search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதை விற்பனை நிலையங்களில் இணை இயக்குனர் திடீர் ஆய்வு
    X

    விதை விற்பனை நிலையங்களில் இணை இயக்குனர் திடீர் ஆய்வு

    • விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், விதை ஆய்வு இணை இயக்குநர் செல்வமணி திடீர் ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது விதை ஆய்வாளர் சரண்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், விதை ஆய்வு இணை இயக்குநர் செல்வமணி திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது அரசு மற்றும் தனியார் விதை விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் விதைகளுக்கு உரிய கொள்முதல் பட்டியல்கள் மற்றும் விற்பனைப் பட்டியல்கள் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

    முளைப்புத்திறன் ஆய்வறிக்கை இல்லாமல் விதைகளை விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தினார். விதை விற்பனையாளர்கள் இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல்கள், முளைப்பு திறன் அறிக்கைகள், விதைகளின் இருப்பு விபரம் மற்றும் விற்பனை விலை பலகை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    விவசாயிகள் விதைகள் வாங்கும் போது, லைசென்ஸ் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே விதை வாங்க வேண்டும். அதற்கான பில்களை கேட்டுப்பெற வேண்டும். விற்பனை பட்டியலில் விதைக் குவியல் எண் மற்றும் காலாவதி தேதியை உறுதி செய்தல் வேண்டும். மேலும் விதை விற்பனையாளர்களிடம் முளைப்புத்திறன் ஆய்வறிக்கையை சரிபார்க்க வேண்டும். இந்த நடைமுறைகளை கடைபிடிக்கும்போது விவசாயிகள் விதைகளின் தரத்தினை உறுதி செய்துகொள்ளலாம் என அவர் கூறினார்.

    உரிய ஆவணங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட விதைக் குவியல்களுக்கு விதைகள் சட்டம் மற்றும் விதைக்கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் விதைகளின் தரத்தினை உறுதிப்படுத்த விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. ஆய்வின்போது விதை ஆய்வாளர் சரண்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×