search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nirmala devi"

    நிர்மலா தேவி வழக்கின் விசாரணை மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக கூறிய நீதிபதி முத்து சாரதா விசாரணையை வருகிற 3-ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தார். #NirmalaDevi #NirmalaDeviAudioCase
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.

    இந்த வழக்கு விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கைதான 3 பேர் மீதும் 1360 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    மேலும் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில் வழக்கு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நீதிபதி முத்து சாரதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதற்காக நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அப்போது இந்த வழக்கின் விசாரணை மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக கூறிய நீதிபதி முத்து சாரதா விசாரணையை வருகிற 3-ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து நிர்மலாதேவி உள்பட 3 பேரும் மதுரை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். #NirmalaDevi #NirmalaDeviAudioCase
    வெளியே இருப்பவர்களின் தூண்டுதலால் சிறை காவலர்கள், கைதிகளால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதியிடம் நிர்மலாதேவி முறையிட்டார். #NirmalaDevi #NirmaladeviAudio
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த மாதம் 13-ந் தேதி 1160 பக்கங்களை கொண்ட முதல் கட்ட குற்றப்பத்திரிகையையும், கடந்த 7-ந்தேதி 200 பக்கம் கொண்ட 2-வது குற்றப்பத்திரிகையையும் விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    இந்த குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொள்ள நிர்மலாதேவி உள்பட 3 பேரும் நேற்று விருதுநகர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து குற்றப்பத்திரிகை நிர்மலா தேவி உள்பட 3 பேரிடம் நீதிபதி முன்னிலையில் வழங்கப்பட்டது.

    அப்போது நிர்மலாதேவி நீதிபதியிடம், வெளியே இருப்பவர்களின் தூண்டுதலால் சிறை காவலர்கள், கைதிகளால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே என்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதை கேட்ட நீதிபதி கோரிக்கை தொடர்பாக மனு அளிக்குமாறு கூறினார். விசாரணை 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து 3 பேரும் மதுரை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். #NirmalaDevi #NirmaladeviAudio
    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனுவை 24-ந்தேதிக்கு தள்ளிவைத்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NirmalaDevi #NirmalaDeviCase
    மதுரை:

    கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டையை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால், கடந்த ஏப்ரல் 17-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    அதைத்தொடர்ந்து அதே வழக்கில் ஏப்ரல் 23-ந் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் சரண் அடைந்தனர். அவர்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் 3 பேரும் கைதாகி 140 நாட்களுக்கும் மேலான நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுக்கள் தொடர்ந்து விசாரணையில் இருந்த நிலையில் இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வக்கீல் கால அவகாசம் கோரியதையடுத்து ஜாமீன் மனுக்கள் மீதான விசார ணையை வருகிற 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். #NirmalaDevi #NirmalaDeviCase
    விருதுநகர் மாவட்ட 2-வது கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா, இன்று நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். #NirmalaDevi #NirmalaDeviCase
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலாதேவியை கைது செய்தனர்.

    அவர் கொடுத்த தகவலின் படி ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    கைதான 3 பேரும் விருதுநகர் மாவட்ட கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு பல முறை மனுத்தாக்கல் செய்தனர்.

    குற்றவாளிகளை ஜாமீனில் விடுவித்தால் விசாரணை பாதிக்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்ததால் இதுவரை அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் 1,160 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி இறுதி குற்றப்பத்திரிகையை வருகிற 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி இன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா, விருதுநகர் மாவட்ட 2-வது கோர்ட்டில் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். #NirmalaDevi #NirmalaDeviCase
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீன் மனுவை வருகிற 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. #NirmalaDevi
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில் காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டனர்.

    நிர்மலாதேவி ஜாமீன் வழங்கக்கோரி சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுகளில் மனுத்தாக்கல் செய்தார். இதுவரை 6 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

    இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதை தொடர்ந்து மனு மீதான விசாரணை செப்டம்பர் 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    நேற்று இதே வழக்கில் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் செப்டம்பர் 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #NirmalaDevi
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவிக்கு வருகிற 14-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. #NirmalaDevi #NirmalaDeviCase
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை அதே கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை நிர்மலா தேவி பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களின் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் இன்று விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அவர்கள் 3 பேருக்கும் வருகிற 14-ந்தேதி வரை காவலை நீடித்து மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார்.

    அதைத் தொடர்ந்து 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். #NirmalaDevi #NirmalaDeviCase
    கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த உதவி பேராசிரியை நிர்மலா தேவியை போல, கோவையில் விடுதி மாணவிகளை தவறான பாதைக்கு பெண் வார்டன் அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஜெகநாதன்(வயது 48). இவர் ஹோப் கல்லூரி ஜீவா வீதியில் ‘தர்‌ஷனா’ என்ற பெயரில் பெண்களுக்கான விடுதி நடத்தி வருகிறார். இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள், ஐ.டி. மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள் என 180 பேர் தங்கி உள்ளனர்.

    கோவை தண்ணீர்பந்தல் ரோட்டை சேர்ந்த புனிதா(32) என்பவர் வார்டனாக இருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு புனிதா விடுதியில் தங்கி உள்ள 5 மாணவிகளிடம், விடுதி உரிமையாளரின் பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சி ஆர்.எஸ். புரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. அங்கு செல்லலாம் என அழைத்து சென்றார்.

    அங்கு சென்றதும் புனிதா, மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து குடிக்க வற்புறுத்தினார். உணவு மட்டும் சாப்பிட்ட அவர்கள் மதுகுடிக்க மறுத்து விட்டனர். அப்போது புனிதா, விடுதி உரிமையாளரின் செல்போனில் வாட்ஸ்- அப் வீடியோ அழைப்பில் பேச சொல்லி வற்புறுத்தி உள்ளார்.

    ‘விடுதி உரிமையாளர் ஜாலியானவர், அவருடன் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், நீங்கள் அவருடன் ஜாலியாக இருந்தால் விடுதி கட்டணம் எதுவும் கட்ட வேண்டாம். அவர் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவார்’ என கூறி மாணவிகளை தவறான பாதைக்கு புனிதா அழைத்துள்ளார்.

    அதிர்ச்சியடைந்த மாணவிகள் மறுத்து விட்டு விடுதிக்கு திரும்பினர். விடுதிக்கு சென்ற புனிதா ஓட்டலில் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உங்களை கொன்று விடுவோம் என மிரட்டி உள்ளார். இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த மாணவிகள் நடந்த சம்பவம் குறித்து விடுதியில் சக மாணவிகளிடம் கூறினர்.

    ஜெகநாதன் - புனிதா

    இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறினர். அதிர்ந்து போன 50-க்கும் மேற்பட்ட பெற்றோர் விடுதியை முற்றுகையிட்டனர்.

    சம்பவஇடத்துக்கு பீளமேடு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வார்டன் புனிதா, விடுதி உரிமையாளர் ஜெகநாதன் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து ஜெகநாதன், புனிதா ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    தலைமறைவான ஜெகநாதன், புனிதா ஆகியோரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இருவரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். அவர்களின் செல்போனில் கடைசியாக பேசிய அழைப்புகள் பட்டியல் சேகரித்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று தாக்கல் செய்தனர்
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவி மற்றும் உடந்தையாக இருந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர். நிர்மலா தேவி குரல் மாதிரி பரிசோதனை சென்னையில் நடத்தப்பட்டது.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி உள்பட 3 பேரும் பலமுறை மாவட்ட மற்றும் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஜாமீன் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் நிர்மலா தேவி வழக்கை வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு, விருதுநகர் மாவட்ட கோர்ட்டுக்கு கெடு விதித்தது.

    சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வந்த காட்சி.

    இந்த நிலையில் நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விருதுநகர் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரியிடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 1160 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப்பத்திரிகையில் பேராசிரியை நிர்மலா தேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் ஆகிய 3 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம், விபசார தடுப்புச்சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் வழக்கின் தன்மை குறித்து முழுமையான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. #NirmalaDevi #NirmalaDeviCase
    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான நிர்மலா தேவியின் ஜாமீன் மனு இன்று, 7-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. #Nirmaladevi
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அந்த கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

    இந்த விவகாரத்தில் அவருடன் தொடர்பு உடையதாக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் பேராசிரியை நிர்மலாதேவி தனக்கு ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    கடந்த 6 முறையும் அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் அவர் 7-வது முறையாக ஜாமீன் கேட்டு மனு செய்தார்.

    இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    மேலும் வழக்கு விசாரணையை நீதிபதி, வருகிற 16-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். #Nirmaladevi
    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக கைதான கருப்பசாமியின் ஜாமீன் மனுவை வருகிற 11-ந்தேதிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது.
    மதுரை:

    கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

    இவருக்கு உடந்தையாக இருந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 3 பேரும் ஜாமீன் கேட்டு மாவட்ட நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் வழக்கின் தீவிரம் கருதி ஜாமீன் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி ஜாமீன் கேட்டு 2-வது முறையாக மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மீதான குற்றச்சாட்டு ஆவணங்களை தாக்கல் செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை 11-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். #NirmalaDevi #NirmalaDeviCase
    பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ஆடியோவில் உள்ள குரல் அவருடையதுதானா? என்று அறிவதற்காக குரல் பரிசோதனைக்காக நேற்று அவர் சென்னை அழைத்துவரப்பட்டார். #NirmalaDevei
    சென்னை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அதே கல்லூரியை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16-ந் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ‘செல்போன்’ உரையாடல் அவருடைய குரல் தானா? என்று பரிசோதனை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி நிர்மலாதேவிக்கு சென்னை தடய அறிவியல் அலுவலகத்தில் குரல் பரிசோதனை செய்வதற்காக ஐகோர்ட்டு மதுரை கிளையில் போலீசார் அனுமதி பெற்றனர். இதற்காக நிர்மலாதேவியை ஜூன் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் சென்னை அழைத்துச்செல்வதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதையடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலாதேவியை தனி வேன் மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மாலை சென்னை அழைத்துவந்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே உள்ள தடயவியல் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட உள்ளார். அங்கு அவருடைய குரல் பரிசோதனை நடைபெற உள்ளது. அப்போது அவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தபோது, என்ன பேசினாரோ? அதை அப்படியே சிலமுறை பேசச்சொல்லி, தடய அறிவியல் நிபுணர்கள் ஆடியோவில் பதிவு செய்வார்கள்.

    அதன்பின்னர் நிர்மலாதேவி ஏற்கனவே பேசி வெளியான செல்போன் உரையாடலுடன், தற்போது பதிவு செய்யப்பட்ட உரையாடலை ஒப்பிட்டுப்பார்த்து சோதனை மேற்கொள்ளப்படும்.

    இந்த சோதனை முடிந்தவுடன் நிர்மலாதேவியை மீண்டும் தனி வேன் மூலம் மதுரை மத்திய சிறைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து செல்ல உள்ளனர்.  #NirmalaDevei
    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #NirmalaDevi
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் படித்த 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

    இவர் கொடுத்த தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் கருப்பசாமி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான வக்கீல், கருப்பசாமிக்கும் இந்த வழக்கில் தொடர்புடைய முதல் குற்றவாளிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதற்கான ஆதாரங்களும் உள்ளன. எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.

    அதைத் தொடர்ந்து கருப்பசாமி சார்பில் ஆஜரான வக்கீல் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்றார்.

    இதைத் தொடர்ந்து கருப்பசாமியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை 19-ந்தேதிக்கு (நாளை) ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். #NirmalaDevi #NirmalaDeviCase
    ×