என் மலர்

  நீங்கள் தேடியது "Chargesheet"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #KeralaNun #FrancoMulakkal
  திருவனந்தபுரம்:

  பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக இருந்தவர் பிராங்கோ. இவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயம் குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி தன்னை பி‌ஷப் பிராங்கோ மிரட்டி கற்பழித்து விட்டதாக பரபரப்பு புகார் கூறினார்.

  மேலும் பிராங்கோவை கைது செய்ய கோரி அந்த மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரிகளும் போராட்டத்தில் குதித்தனர். இதைத்தொடர்ந்து பி‌ஷப் பிராங்கோ கடந்த அக்டோபர் மாதம் 24-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

  24 நாள் சிறைவாசத்திற்கு பிறகு பிராங்கோ தற்போது ஜாமீனில் வெளிவந்து உள்ளார். ஆனாலும் அவர் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில் போலீசார் தாமதம் செய்வதாக கூறி மீண்டும் கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த நிலையில் பி‌ஷப் பிராங்கோ மீது பாலா முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1400 பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 83 சாட்சியங்களும் இணைக்கப்பட்டு உள்ளது.

  இயற்கைக்கு மாறான உறவு, சிறை வைத்து மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் பிராங்கோ மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பிராங்கோவுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.  #KeralaNun #FrancoMulakkal
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்தை கைதுசெய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #CBI #NaliniChidambaram
  சென்னை:

  கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி உள்ளன.

  இதற்கிடையே, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

  இந்நிலையில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் நளினி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.

  மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் நளினி சிதம்பரத்தை கைதுசெய்ய தடை விதித்துள்ளது. #CBI #NaliniChidambaram
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #CBI #NaliniChidambaram #Chargesheet
  கொல்கத்தா:

  கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். 

  இதுதொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதற்கிடையே, ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி உள்ளன.

  இந்நிலையில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது. #CBI #NaliniChidambaram #Chargesheet
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. நிறுவனம் மூலம் அரசுக்கு ரூ.546 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #Granitescam
  மேலூர்:

  மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் எடுத்த நடவடிக்கையில் கிரானைட் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது.

  இது தொடர்பாக பி.ஆர்.பி. நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு மேலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

  மேலூர் அருகே கீழையூர் பகுதியில் உள்ள செக்கியேந்தல் கண்மாய் மற்றும் அரசு இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ், அதன் உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி மற்றும் 36 பேர் மீதான வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

  இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக அரசு வக்கீல் ஷீலா இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் மேலூர் கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் மாஜிஸ்திரேட் பழனிவேலிடம் 3,186 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.


  அதில், பி.ஆர்.பி. நிறுவனம் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்ததன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.546 கோடியே 10 லட்சத்து 59 ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்பட்டு உள்ளது.

  மேலூர் நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட கிரானைட் முறைகேடு வழக்குகள் நடந்து வருகிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Granitescam

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா நில ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக முன்னாள் முதல் மந்திரி பூபிந்த சிங் ஹூடா, மோதிலால் வோரா ஆகியோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. #Panchkulaplot #BhupinderSinghHooda
  சண்டிகர்:

  அரியானா மாநிலம், பஞ்ச்குலா பகுதியில் 3,360 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பத்திரிகையாளருக்கு முறைகேடாக ஒதுக்கி பணப்பலன் அடைந்ததாக அரியானா மாநில முன்னாள் முதல் மந்திரி பூப்பிந்தர் சிங் ஹூடா மற்றும் சில அதிகாரிகள் மீது பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.


  இந்நிலையில், இதுதொடர்பாக  முன்னாள் முதல் மந்திரி பூப்பிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா மற்றும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிட்டர் என்னும் பத்திரிகை நிறுவத்தின்மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #Panchkulaplot #CBI #CBIchargesheet #formerHaryanaCM #BhupinderSinghHooda  
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குற்றப்பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் நிற்க தடையில்லை என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளதால் வழக்கு பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் நிம்மதி அடைத்துள்ளனர். #SupremeCourt #Lawmakers


  இந்தியா முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மொத்தம் 4 ஆயிரத்து 896 பேர் உள்ளனர்.

  இவர்களில் 1765 பேர் கிரிமினல் குற்றப்பின்னணி உடையவர்கள் ஆவார்கள். அதாவது மொத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் 36 சதவீதம் பேர் கிரிமினல் குற்ற வழக்குகளை எதிர் கொண்டுள்ளனர்.

  அவர்கள் மீதான கிரிமினல் குற்ற வழக்குகள் நாடு முழுவதும் பல்வேறு கோர்ட்டுகளில் நடந்து வருகின்றன. இந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது மொத்தம் 3,045 கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டாலே எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்க செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இன்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்று இருந்தால் இந்த 1,765 பேரின் பதவி ஆட்டம் கண்டு இருக்கும். பதவி தப்பியதால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

  கிரிமினல் குற்றச்சாட்டுகளுடன் இருக்கும் எம்.எல். ஏ.க்களில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். அங்கு மொத்தம் உள்ள 539 எம்.எல்.ஏ.க்களில் 248 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுகளுடன் இருக்கிறார்கள்.

  கிரிமினல் அரசியல்வாதிகளில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள 234 எம்.எல். ஏ.க்களில் 178 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  பீகாரில் 147 எம்.எல்.ஏ.க்களும், மேங்கு வங்கத்தில் 139 எம்.எல்.ஏ.க்களும், ஆந்திராவில் 132 எம்.எல்.ஏ.க்களும், கேரளா 84 எம்.எல்.ஏ.க்களும், கர்நாடகாவில் 82 எம்.எல். ஏ.க்களும் கிரிமினல் குற்ற வழக்குகளுடன் இருக்கிறார்கள்.

  எம்.பி.க்களில் 543 பேரில் 228 பேர் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டு உள்ளனர். #SupremeCourt #Lawmakers

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அயனாவரம் சிறுமியை கற்பழித்த வழக்கில் 17 பேருக்கும் மத்திய அரசின் புதிய அவசர சட்டத்தின்படி தூக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. #ChennaiGirlHarassment #POCSOAct
  சென்னை:

  சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  சிறுமி கற்பழிப்பு தொடர்பாக அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாரன் மற்றும் ஏரோல் பிராஸ், முருகேசன், பரமசிவம், சுரேஷ், ராஜசேகர், தீன தயாளன், குணசேகரன், பாபு, பழனி, ராஜா, சூர்யா, ஜெயகணேஷ், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதானார்கள்.

  இந்த வழக்கில் கைதான 17 பேரும் ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  17 பேரும் ஜாமீன் கோரி இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் மனு தாக்கல் செய்தனர். மகளிர் கோர்ட்டு அவர்களது மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

  17 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையின் அடிப்படையில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் குண்டர் சட்டத்தின் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

  இதன்படி கடந்த 5-ந்தேதி 17 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனது விசாரணையை முடித்துள்ளார்.

  இதையடுத்து மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 300 பக்கங்களை கொண்டதாக இருந்தது.

  அந்த சிறுமியை 17 பேரும் 7 மாதங்களாக மாறிமாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

  சிறுமியை கற்பழித்த வழக்கில் 17 பேருக்கும் மத்திய அரசின் புதிய அவசர சட்டத்தின்படி தூக்கு தண்டனை கிடைக்கலாம்.

  12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யபட்டால் ஆயுள் முழுவதும் சிறைத்தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் புதிய கிரிமினல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. போக்சோ சட்டம் ஏற்கனவே இருக்கிறது. இதில் 376 ஏ.பி. மற்றும் 376 டி.பி. ஆகிய 2 சட்ட பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி 17 பேருக்கும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கிடைக்கலாம்.  #ChennaiGirlHarassment #POCSOAct
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அயனாவரத்தில் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கை 3 மாதத்தில் நடத்தி முடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஒரு மாதத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
  சென்னை:

  அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி 17 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இது தொடர்பாக வேப்பேரி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கைதான 17 பேரிடமும் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

  இந்த கொடூர சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட உடனேயே தாமதமின்றி உரிய நடவடிக்கைக்கு கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன் மேற்பார்வையில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 50 போலீசார் விசாரணை நடத்தினர்.

  இதன் காரணமாகவே சிறுமியை சீரழித்த 17 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  சிறுமி கற்பழிப்பு வழக்கை 3 மாதத்தில் நடத்தி முடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

  ஒரு மாதத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி ஹாசினி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியான வாலிபர் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுத்தது போல 17 பேருக்கும் தூக்கு தண்டனை வாங்கி கொடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். #ChennaiGirlHarassment #POCSOAct
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று தாக்கல் செய்தனர்
  விருதுநகர்:

  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவி மற்றும் உடந்தையாக இருந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர். நிர்மலா தேவி குரல் மாதிரி பரிசோதனை சென்னையில் நடத்தப்பட்டது.

  சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி உள்பட 3 பேரும் பலமுறை மாவட்ட மற்றும் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஜாமீன் வழங்கப்படவில்லை.

  இந்த நிலையில் நிர்மலா தேவி வழக்கை வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு, விருதுநகர் மாவட்ட கோர்ட்டுக்கு கெடு விதித்தது.

  சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வந்த காட்சி.

  இந்த நிலையில் நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விருதுநகர் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரியிடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 1160 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப்பத்திரிகையில் பேராசிரியை நிர்மலா தேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் ஆகிய 3 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம், விபசார தடுப்புச்சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும் வழக்கின் தன்மை குறித்து முழுமையான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. #NirmalaDevi #NirmalaDeviCase
  ×