என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stabbing Case"

    • வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவரை தானேயில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

    மும்பை:

    பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான் மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் 11-வது மாடியில் வசித்து வருகிறார்.

    கடந்த ஜனவரி 16-ந்தேதி அதிகாலை அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கில் வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவரை தானேயில் வைத்து போலீசார் கைது செய்தனர். சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய அவர் தனது பெயரை மாற்றிக்கொண்டு சுற்றியது தெரிய வந்தது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை பாந்த்ரா கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில், குற்றவாளி மீதான பல ஆதாரங்கள் உள்பட 1000 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளதாக பாந்த்ரா போலீசார் தெரிவித்தனர்.

    இந்த குற்றப்பத்திரிகையில் தடயவியல் ஆய்வகத்தின் அறிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலும், சைஃப் அலி கான் உடலில் இருந்து மீட்கப்பட்ட கத்தி துண்டுகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் கைரேகை அறிக்கை உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×