search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலாதேவி விவகாரம்- கருப்பசாமி ஜாமீன் மனு தள்ளிவைப்பு
    X

    நிர்மலாதேவி விவகாரம்- கருப்பசாமி ஜாமீன் மனு தள்ளிவைப்பு

    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக கைதான கருப்பசாமியின் ஜாமீன் மனுவை வருகிற 11-ந்தேதிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது.
    மதுரை:

    கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

    இவருக்கு உடந்தையாக இருந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 3 பேரும் ஜாமீன் கேட்டு மாவட்ட நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் வழக்கின் தீவிரம் கருதி ஜாமீன் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி ஜாமீன் கேட்டு 2-வது முறையாக மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மீதான குற்றச்சாட்டு ஆவணங்களை தாக்கல் செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை 11-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். #NirmalaDevi #NirmalaDeviCase
    Next Story
    ×