என் மலர்

  நீங்கள் தேடியது "Bail Petition Postponed"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குட்கா ஊழல் வழக்கில் கைதான மாதவராவ் உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #Gutkhascam #MadhavaRao
  சென்னை:

  தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டன. இதற்காக அமைச்சர்கள், டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சம் கொடுக்கப்பட்டது.

  இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது. இதனடிப்படையில், குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன் கைது செய்யப்பட்டனர்.  இதையடுத்து கடந்த மாதம் 25-ந்தேதி, சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமாரை, சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது சிறையில் இருக்கும் சிவக்குமார், தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

  அதேபோல, ஏற்கனவே கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் எல்லாம் நீதிபதி வசந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர், ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். #Gutkhascam #MadhavaRao

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனுவை 24-ந்தேதிக்கு தள்ளிவைத்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NirmalaDevi #NirmalaDeviCase
  மதுரை:

  கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டையை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால், கடந்த ஏப்ரல் 17-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

  அதைத்தொடர்ந்து அதே வழக்கில் ஏப்ரல் 23-ந் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் சரண் அடைந்தனர். அவர்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

  அவர்கள் 3 பேரும் கைதாகி 140 நாட்களுக்கும் மேலான நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

  அந்த மனுக்கள் தொடர்ந்து விசாரணையில் இருந்த நிலையில் இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வக்கீல் கால அவகாசம் கோரியதையடுத்து ஜாமீன் மனுக்கள் மீதான விசார ணையை வருகிற 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். #NirmalaDevi #NirmalaDeviCase
  ×