search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nipah virus"

    • கோழிக்கோடு நகரில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
    • நோயாளிகளுக்குத் தேவைப்படும் தடுப்பு மருந்தை வழங்க தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சலைத் தொடா்ந்து 2 போ் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, அவா்களுடன் தொடர்பில் இருந்த உறவினா்கள் 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களின் ரத்த மாதிரிகள், நிபா தொற்று பரிசோதனைக்காக புனேவில் அமைந்துள்ள தேசிய தீநுண்மியியல் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பரிசோதனையின் முடிவில், உயிரிழந்த 2 பேருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் தெரிவித்தாா். உயிரிழந்தவா் ஒருவரின் 9 வயது மகன் மற்றும் உறவினா் என 2 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கோழிக்கோடு நகரில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

    கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நிபா தொற்று பாதிப்பு தொடா்பாக பேரவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

    அதற்கு பதிலளித்துப் பேசிய மாநில சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜாா்ஜ், 'மாநிலத்தில் பரவும் நிபா வைரசானது அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட வங்கதேச வகையைச் சாா்ந்தது. ஆனால், தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது.

    தேசிய தீநுண்மியியல் கழகத்தின் (என்.ஐ.வி.) தொற்றுநோயியல் நிபுணா்கள் சென்னையில் இருந்து கேரளாவுக்கு வந்து தொற்று பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்வா். நிபா தொற்று பாதித்த நோயாளிகளுக்குத் தேவைப்படும் தடுப்பு மருந்தை வழங்க தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளது.

    கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் தற்காலிக ஆய்வகம் அமைத்து நிபா தொற்றைப் பரிசோதிக்கவும் மாநிலத்தில் வௌவால்கள் குறித்து கணக்கெடுத்து ஆய்வு நடத்தவும் புனே என்.ஐ.வி. குழு வருகின்றனா்.

    கண்காணிப்பு, மாதிரி பரிசோதனை, ஆராய்ச்சி மேலாண்மை, தொடா்பு கண்டறிதல், நோயாளிகளின் போக்குவரத்து மேலாண்மை மற்றும் பிற பணிகளுக்காக 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று பரவலைத் தடுப் பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப் பட்டு வருகிறது' என்றாா்.

    தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள கோழிக்கோடு மாவட்டத்தின் ஆத்தஞ்சேரி, மருதோங்கரா, திருவள்ளூா், குட்டியாடி, காயக்கொடி, வில்லியப்பள்ளி, கவிலும்பாறை ஆகிய 7 கிராமங்கள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர புறமேரி கிராமப் பஞ்சாயத்தில் ஒரு வாா்டு கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுவை சுகாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
    • ஒருவேளை வைரஸ் பரவும் சூழ்நிலை வந்தால் நிச்சயமாக புதுவை பிராந்தியமான மாகியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் கேரளா மாநிலத்தையொட்டி உள்ள புதுவை பிராந்தியமான மாகியில் புதுவை சுகாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

    இந்த வைரஸ் பற்றி மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. புதுவையில் யாருக்கும் நிபா வைரஸ் அறிகுறிகள் இல்லை. அதேநேரத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    கேரளாவில் இருந்து வரும் ரெயிலை நிறுத்துவது ஊரடங்கு பிறப்பிப்பது போன்ற அவசரகால சூழ்நிலைகள் இப்போது எழவில்லை. அந்தளவுக்கு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கேரளத்தில் பரவும் வைரஸ் என்ன? என கண்டறிந்துள்ளனர். அது பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை வைரஸ் பரவும் சூழ்நிலை வந்தால் நிச்சயமாக புதுவை பிராந்தியமான மாகியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கேரளாவில் இருந்து வருவோரை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை இப்போது இல்லை. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், பரிசோதனை செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் புதுவை சுகாதாரத்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் புதுவை பிராந்தியமான மாகியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி-கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
    • மருத்துவ உபகரணங்களை தொடர்ச்சியாக கிருமி நீக்கம் செய்து பயன்படுத்துவது அவசியம்.

    கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

    நோயுற்ற, வைரஸ் அறிகுறி உள்ளவர்களை கையாண்ட பின் 20 நொடிகள் சோப்பினால் கை கழுவிய பின் மற்ற பணிகளை சுகாதார ஊழியர்கள் செய்ய வேண்டும்.

    மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரத் துறை ஊழியர்கள் பிபிஇ கிட், முகக்கவசம், கையுறை அணிவது அவசியம்.

    மருத்துவ உபகரணங்களை தொடர்ச்சியாக கிருமி நீக்கம் செய்து பயன்படுத்துவது அவசியம்.

    நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச் மற்றும் ஊசி போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்துவது அவசியம்.

    நிபா வைரஸ் காய்ச்சல் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் பிரிவில், பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கோழிக்கோடு மாவட்டத்தில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
    • நிபா வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோழிக்கோடு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதன் முதலாக நிபா வைரஸ் பரவியது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் அதிகமாக காணப்பட்டது. நிபா வைரஸ் தாக்குதலுக்கு 17 பேர் வரை பலியானார்கள்.

    அதன் பிறகு 2021-ம் ஆண்டும் நிபா வைரஸ் பரவி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் தற்போது நிபா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. கோழிக்கோடு மாவட்டம் மருதோன்கரை மற்றும் அயன்சேரி பகுதியைச் சேர்ந்த இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதித்து உயிர் இழந்தனர்.

    ஒரு நபர் தனியார் மருத்துவமனையிலும், மற்றொருவர் அரசு ஆஸ்பத்திரியிலும் அடுத்தடுத்து இறந்தனர். மேலும் அவர்களது குடும்பத்தினரும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகினர். இதனால் காய்ச்சல் பாதித்து இறந்தவர்களுக்கு நிபா வைரஸ் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.

    அதன் அடிப்படையில் இறந்த 2 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் காய்ச்சலால் இறந்த 2 பேருக்கும் நிபா வைரஸ் பாதித்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டது. சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கோழிக்கோடு மாவட்டத்தில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டது.

    நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான 2 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட முதல் நபரின் குடும்பத்தினர், உறவினர்கள், பக்கத்து வீட்டினர் என தொடர்பில் இருந்தவர்கள் 158 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

    அவர்களில் 31 பேர் மட்டுமே குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஆவர். மீதமுள்ள 127 பேரும் பலியானவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் ஆவர்.

    அதேபோல் பாதிக்கப்பட்ட 2-ம் நபரின் தொடர்பு பட்டியலில் 100 பேர் உள்ளனர். அவர்களில் 10 பேர் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியான 2 பேரின் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 168 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நிபா வைரசுக்கு பலியானவர்களில் ஒருவரான மருதோன்கரையைச் சேர்ந்தவரின் மனைவி, 2 குழந்தைகள், மைத்துனர் மற்றும் 10 மாத கைக்குழந்தை ஆகிய 5 பேரின் மாதிரி சோதனைக்காக புனே ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 3 பேருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களுக்கு, தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    நிபா வைரஸ் தொற்று பாதித்து இறந்தவர்கள் வசித்த பகுதி மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் இருக்கும் இடங்கள் முழுமையாக சுகாதாரத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கோழிக்கோடு மாவட்டத்தில் அயஞ்சேரி, மருதோன் கரை, திருவள்ளூர், குட்டியாடி, காயக்குடி, வில்லியம் பள்ளி, கவிழும்பாறை ஆகிய 7 ஊராட்சிகளில் 47 வார்டுகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    அந்த பகுதிகளுக்கு வேறு நபர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அந்த பகுதிகளில் மருந்து கடைகள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யக்கூடிய கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    அங்கு செயல்படும் வங்கிகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கக்கூடிய மக்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்கவும், முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நிபா வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோழிக்கோடு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து கருவிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

    • வாளையாறு சோதனைச்சாவடி வழியாக உள்ளூருக்கு வரும் தமிழக வாகனங்களும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
    • நீலகிரி மாவட்டத்தில் சோலாடி, பாட்டவயல், நம்பியார் குன்னு உள்ளிட்ட 7 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவை:

    கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலியானதை தொடர்ந்து தமிழகம்-கேரள எல்லைகளில் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் யாராவது காய்ச்சலுடன் வருகிறார்களா? என்பது தொடர்பாக மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.

    கேரளா மாநிலத்தின் எல்லைப்பகுதியில் கோவை, நீலகிரி மாவட்டங்கள் அமைந்து உள்ளன. எனவே இரு மாவட்டங்களிலும் உள்ள எல்லையோர சோதனைச்சாவடிகளில் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் வாளையாறு சோதனைச்சாவடி, ஆனைமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி உள்பட 13 பகுதிகள் கேரள மாநிலத்தின் எல்லையோரம் அமைந்து உள்ளன.

    நீலகிரி மாவட்டத்தில் நாடுகாணியில் சோதனைச்சாவடி உள்ளது. இதன் வழியாக கேரள வாகனங்கள் தமிழகத்துக்கு வந்து செல்கின்றன. எனவே நீலகிரியின் நாடுகாணி, கோவையின் வாளையாறு ஆகிய சோதனைச்சாவடிகளில் மருத்துவ அதிகாரிகள் குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஒரு டாக்டர் தலைமையில் மருத்துவ பணியாளர்கள், 24 மணி நேரமும் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கேரளா மாநிலத்தில் இருந்து வாளையாறு சோதனைச்சாவடிக்கு வரும் வாகனங்களில் தீவிர விசாரணை நடத்தும் மருத்துவ குழுவினர், வண்டியில் இருக்கும் எவருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதனை செய்து உறுதிப்படுத்துகின்றனர். அதன்பிறகுதான் சம்பந்தப்பட்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    யாருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவரை உடனடியாக திருப்பி அனுப்பும் பணிகளும் நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தை சேர்ந்த வாகனங்கள் வாளையாறு சோதனை சாவடிக்கு வரும்போது அதில் பயணிப்போருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

    மேலும் சம்பந்தப்பட்டவரின் வீட்டு முகவரி மற்றும் செல்போன் எண்களும் பதிவு செய்யப்படுகின்றன. பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு உடல்நிலை மேம்பாடு பற்றிய விவரங்களை அறியவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா கூறுகையில், கேரள மாநிலத்தின் எல்லையோர பகுதியில் அமைந்து உள்ள வாளையாறு சோதனைச்சாவடியில் மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு 3 ஷிப்ட்டுகளிலும் மருத்துவ ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களில் பயணிப்போருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கேரளாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

    வாளையாறு சோதனைச்சாவடி வழியாக உள்ளூருக்கு வரும் தமிழக வாகனங்களும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

    வாகனத்தில் இருக்கும் எவருக்கேனும் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால், சம்பந்தப்பட்டவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    கேரளாவில் நிபா வைரஸ் பரவலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள மேலும் 13 எல்லையோர பகுதிகளில் சுகாதாரத்துறை மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் சோலாடி, பாட்டவயல், நம்பியார் குன்னு உள்ளிட்ட 7 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தில் 19 பகுதிகளில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகின்றன.
    • கூடலூரில் அமைய உள்ள மாவட்ட மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன ஆஸ்பத்திரி அமைக்கப்பட உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரி ரூ.31 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது.

    விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. எனவே யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. கேரள மாநிலத்தின் அண்டை மாவட்டங்களாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரளாவின் எல்லையோர பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவ அதிகாரிகள் அந்த வழியாக செல்லும் வாகனங்களை கண்காணித்து காய்ச்சல் அறிகுறியுடன் எவரேனும் உள்ளனரா என்பது குறித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு இருப்போருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கூடலூர் தாலுகா அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இதன்படி அந்த மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் ரூ.31 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளார்.

    தமிழகத்தில் 19 பகுதிகளில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் மாநில அளவில் மேலும் 6 புதிய மாவட்ட மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.1100 கோடி மதிப்பில் கட்டிடப்பணிகள் நடந்து வருகின்றன.

    கூடலூரில் அமைய உள்ள மாவட்ட மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன ஆஸ்பத்திரி அமைக்கப்பட உள்ளது. மேலும் 7 படுக்கைகளுடன் டயாலிசிஸ் மையமும், 10 படுக்கைகளுடன் மனநல மருத்துவ மையமும், அவசர சிகிச்சை மையமும், 14 படுக்கைகளுடன் எலும்பு முறிவு சிகிச்சை மையமும் அமைய உள்ளது. இதுதவிர கண் சிகிச்சை, அறுவை சிகிச்சை, மகப்பேறு மையம் மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரிவு ஆகியவை தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிபா வைரஸை கட்டுப்படுத்த கேரளா அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • கார்களில் வரும் பொதுமக்களையும் சுகாதாரத்துறையினர் தடுத்து சோதனை நடத்தினார்கள்.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நிபா வைரசுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். நிபா வைரஸை கட்டுப்படுத்த கேரளா அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்தநிலையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள 4 சோதனை சாவடிகளில் சோதனை நடந்து வருகிறது. களியக்காவிளை, கோழிவிளை, நெட்டா, பளுகல் சோதனை சாவடிகளில் போலீசாருடன் இணைந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வரும் பஸ்களை தடுத்து நிறுத்தி பஸ் பயணிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் கார்களில் வரும் பொதுமக்களையும் சுகாதாரத்துறையினர் தடுத்து சோதனை நடத்தினார்கள். மருத்துவ குழுவினர் அங்கேயே முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன பணிகளை குமரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கலெக்டர் ஸ்ரீதர் சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

    கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதிப்புடன் குமரி மாவட்டத்திற்கு வருபவர்கள் உடனடியாக அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மேலும் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் தொழிலாளர்களும் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • நிபா வைரஸ் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

    உடுமலை:

    நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் நோய் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இதையொட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள ஒன்பதாறு சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எந்த இடத்திலும் இல்லை. ஆனாலும் தமிழக-கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நிபா வைரஸ் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றனர்.

    • கோழிக்கோட்டில் நிபா வைரசால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • இது குறித்து மாநில அரசு மிகவும் தீவிரமாகக் கவனித்து வருகிறது என முதல் மந்திரி தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் 2 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் இறந்ததற்கு காரணம் நிபா வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இந்த நிபா வைரஸ் தொற்று காரணமாக, இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது.

    இருவரும் உயிரிழந்ததற்கு நிபா வைரஸ் தான் காரணம் என்பதை உறுதி செய்யும் வரை காத்திருக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில், கோழிக்கோட்டில் பதிவான இரண்டு மரணங்களை மாநில அரசு மிகவும் தீவிரமாகக் கவனித்து வருவதாகவும், சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பேஸ்புக் பக்கத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவனமாக இருப்பது நிலைமையைச் சமாளிக்கத் தேவையான வழியாகும். சுகாதாரத்துறை தயாரித்துள்ள செயல் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    கேரளாவில் நிபா வைரஸ் முதன்முதலாக கடந்த 2018-ம் ஆண்டு பதிவானது. அப்போது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பாதித்து இருவர் உயிரிழப்பு.
    • மத்திய சுகாதாரத்துறை மந்திரி நிபா வைரஸ் பாதிப்பை உறுதிப்படுத்தியது.

    கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    இதுதவிர கேரளா மாநிலத்திற்கு இரண்டு பேர் அடங்கிய சுகாதார குழுவினரை அனுப்பி வைத்துள்ளார். இந்த குழு கேரளா மாநிலத்தில் நிலவும் சூழல் பற்றி ஆய்வு செய்ய உள்ளது.

    மேலும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை தொடர்ந்து, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கேரளா மாநில சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. இதோடு மாவட்டம் முழுக்க எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.

    நிபா வைரஸ் மூலம் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

    • பாதிப்பு ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
    • கேரளாவில் நிபா வைரஸ் முதன்முதலாக கடந்த 2018-ம் ஆண்டு பதிவானது.

    திருவனந்தபுரம்:

    கொரோனா பரவத்தொடங்கியபோது இந்திய அளவில் கேரள மாநிலத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவ தொடங்கியது.

    இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவியது. காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகிய ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சில மாவட்டங்களில் உயிர் பலியும் ஏற்பட்டது.

    பின்பு கேரளாவில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அங்கு நிபா வைரஸ் தொற்று பரவுவதாகவும், அந்த தொற்று பாதித்து 2 பேர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கத் தக்க ஒரு நபர் கடந்த மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு எந்தவித காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்தது என்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்துள்ளது.

    இந்நிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக காதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    4 மற்றும் 9 வயதுடைய 2குழந்தைகள், 25 மதிக்கத்தக்க ஒருவர் என 3பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அவர்களிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது.

    அதேபோல் வடகரை அருகே உள்ள திருவள்ளூரை சேர்ந்த 40வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காய்ச்சல் பாதித்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் சிகச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இறந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களாக கண்டறியப்பட்டவர்களிடம் சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகள் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருககிறது. அந்த பரிசோதனை முடிவு வந்தபிறகே, இறந்தவர்கள் 2 பேரும் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்தார்களா? என்பது தெரியவரும்.

    கோழிக்கோடு பகுதியில் 2 பேர் காய்ச்சல் பாதித்து இறந்திருக்கும் சம்பவம் குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அவரச உயர்மட்ட கூட்டத்தை கூட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    கோழிக்கோட்டில் இறந்த 2பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. சுகாதாரத்துறையின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கேரளாவில் நிபா வைரஸ் முதன்முதலாக கடந்த 2018-ம் ஆண்டு பதிவானது. அப்போது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நிபா வைரசை தொடர்ந்து கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு இதுவரை 2 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். #shigellavirus
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிபா வைரஸ் பரவியது. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வேகமாக பரவியதால் மாநிலம் முழுவதும் ஏராளமான பொது மக்கள் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

    நிபா வைரஸ் தாக்குதலுக்கு நர்சு உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அது கட்டுப்படுத்தப்பட்டது. இதன்பிறகே கேரள மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.

    இந்த நிலையில் நிபா வைரசை தொடர்ந்து கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பதால் இதுவும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ஷிகெல்லா வைரசால் பாதிக்கப்பட்ட 2 பேர் ஏற்கனவே உயிரிழந்து இருந்தனர். இந்த நிலையில் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜியான் என்ற 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. மேலும் 2 குழந்தைகள் இந்த பாதிப்பு காரணமாக அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டாக்டர்கள் குழு அந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.



    இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் கேரளாவில் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. கொசுக்கள் மூலம் பரவும் இந்த காய்ச்சலுக்கு இதுவரை 2,564 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 15 பேர் உயிரிழந்து உள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரளாவில் கனமழை பெய்து வரும் சூழ்நிலையில் ஷிகெல்லா வைரஸ், டெங்கு காய்ச்சல் பரவி வருவது பொது மக்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது. #shigellavirus
    ×