search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாளையாறு சோதனைச்சாவடி"

    • வாளையாறு சோதனைச்சாவடி வழியாக உள்ளூருக்கு வரும் தமிழக வாகனங்களும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
    • நீலகிரி மாவட்டத்தில் சோலாடி, பாட்டவயல், நம்பியார் குன்னு உள்ளிட்ட 7 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவை:

    கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலியானதை தொடர்ந்து தமிழகம்-கேரள எல்லைகளில் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் யாராவது காய்ச்சலுடன் வருகிறார்களா? என்பது தொடர்பாக மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.

    கேரளா மாநிலத்தின் எல்லைப்பகுதியில் கோவை, நீலகிரி மாவட்டங்கள் அமைந்து உள்ளன. எனவே இரு மாவட்டங்களிலும் உள்ள எல்லையோர சோதனைச்சாவடிகளில் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் வாளையாறு சோதனைச்சாவடி, ஆனைமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி உள்பட 13 பகுதிகள் கேரள மாநிலத்தின் எல்லையோரம் அமைந்து உள்ளன.

    நீலகிரி மாவட்டத்தில் நாடுகாணியில் சோதனைச்சாவடி உள்ளது. இதன் வழியாக கேரள வாகனங்கள் தமிழகத்துக்கு வந்து செல்கின்றன. எனவே நீலகிரியின் நாடுகாணி, கோவையின் வாளையாறு ஆகிய சோதனைச்சாவடிகளில் மருத்துவ அதிகாரிகள் குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஒரு டாக்டர் தலைமையில் மருத்துவ பணியாளர்கள், 24 மணி நேரமும் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கேரளா மாநிலத்தில் இருந்து வாளையாறு சோதனைச்சாவடிக்கு வரும் வாகனங்களில் தீவிர விசாரணை நடத்தும் மருத்துவ குழுவினர், வண்டியில் இருக்கும் எவருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதனை செய்து உறுதிப்படுத்துகின்றனர். அதன்பிறகுதான் சம்பந்தப்பட்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    யாருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவரை உடனடியாக திருப்பி அனுப்பும் பணிகளும் நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தை சேர்ந்த வாகனங்கள் வாளையாறு சோதனை சாவடிக்கு வரும்போது அதில் பயணிப்போருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

    மேலும் சம்பந்தப்பட்டவரின் வீட்டு முகவரி மற்றும் செல்போன் எண்களும் பதிவு செய்யப்படுகின்றன. பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு உடல்நிலை மேம்பாடு பற்றிய விவரங்களை அறியவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா கூறுகையில், கேரள மாநிலத்தின் எல்லையோர பகுதியில் அமைந்து உள்ள வாளையாறு சோதனைச்சாவடியில் மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு 3 ஷிப்ட்டுகளிலும் மருத்துவ ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களில் பயணிப்போருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கேரளாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

    வாளையாறு சோதனைச்சாவடி வழியாக உள்ளூருக்கு வரும் தமிழக வாகனங்களும் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

    வாகனத்தில் இருக்கும் எவருக்கேனும் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால், சம்பந்தப்பட்டவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    கேரளாவில் நிபா வைரஸ் பரவலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள மேலும் 13 எல்லையோர பகுதிகளில் சுகாதாரத்துறை மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் சோலாடி, பாட்டவயல், நம்பியார் குன்னு உள்ளிட்ட 7 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ×