என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி- தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
- மருத்துவ உபகரணங்களை தொடர்ச்சியாக கிருமி நீக்கம் செய்து பயன்படுத்துவது அவசியம்.
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
நோயுற்ற, வைரஸ் அறிகுறி உள்ளவர்களை கையாண்ட பின் 20 நொடிகள் சோப்பினால் கை கழுவிய பின் மற்ற பணிகளை சுகாதார ஊழியர்கள் செய்ய வேண்டும்.
மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரத் துறை ஊழியர்கள் பிபிஇ கிட், முகக்கவசம், கையுறை அணிவது அவசியம்.
மருத்துவ உபகரணங்களை தொடர்ச்சியாக கிருமி நீக்கம் செய்து பயன்படுத்துவது அவசியம்.
நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச் மற்றும் ஊசி போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்துவது அவசியம்.
நிபா வைரஸ் காய்ச்சல் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் பிரிவில், பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.






