search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navagragam"

    • பிருகு முனிவருக்கும் புலோமசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன்.
    • இவன் காசியில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டான்.

    பிருகு முனிவருக்கும் புலோமசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன்.

    இவன் காசியில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டான்.

    இவனது வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் இறந்தவர்களை எழுப்பும் 'அமிர்த சங்சீவினி' மந்திரத்தை இவனுக்கு உபதேசித்தருளினார்.

    சுக்கிரனுக்கு மனைவியர் பலர் உண்டு என சோதிட நூல் கூறும்.

    சுக்கிரன் வழிபட்ட சிவாலயம்:

    கஞ்சனூர்

    • இவன் ஆங்கீரச ரிஷிக்கும், சிரத்தாதேவிக்கும் மகனாய்த் தோன்றியவன்.
    • தாரை, சங்கினி எனும் இரு மனைவியரை உடையவன்.

    இவன் ஆங்கீரச ரிஷிக்கும், சிரத்தாதேவிக்கும் மகனாய்த் தோன்றியவன்.

    தாரை, சங்கினி எனும் இரு மனைவியரை உடையவன்.

    இவன் சிவபெருமானை வழிபட்டு தேவர்களுக்கு குருவாக விளங்கவும், கிரகபதத்தில் வீற்றிருக்கும் பேறு பெற்றான்.

    குரு வழிபட்ட சிவாலயங்கள்:

    தேவூர்,

    திருவான்மியூர்,

    சீர்காழி,

    குடந்தைக்காரோணம்,

    தென்குடித்திட்டை,

    திருவலிதாயம் முதலியனவாகும்.

    • சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாகத் தோன்றியவன்.
    • இவனுக்கு ஞானதேவி, பிரசங்கி, அப்ரசிங்கி எனும் மனைவியர் உண்டு

    சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாகத் தோன்றியவன்.

    இவனுக்கு ஞானதேவி, பிரசங்கி, அப்ரசிங்கி எனும் மனைவியர் உண்டு என சிந்தாத்த சேகரம் எனும் நூல் கூறுகிறது.

    இவன் சிவபெருமானைக் கருதி கிரகபதவி பெற்றான்.

    புதன் வழிபட்ட சிவாலயம்:

    திருவெண்காடு

    • பாரத்துவாச முனிவரின் மகன் அங்காரகன்
    • இவன் மாலினி, சுசீனி எனும் இருவரை மனைவியராகக் கொண்டவன்.

    பாரத்துவாச முனிவரின் மகன் அங்காரகன். இவன் மாலினி, சுசீனி எனும் இருவரை மனைவியராகக் கொண்டவன்.

    இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்தான். அதன் பயனால் கிரகபதவி பெற்றான்.

    அங்காரகன் வழிபட்ட சிவாலயங்கள்:

    திருகடம்பூர்,

    வைத்தீஸ்வரன் கோவில்,

    சிறுகுடி

    • சந்திரன் அத்திரி முனிவரின் புதல்வனாவார்.
    • இவர் தட்சனின் புதல்வியர்கள் 27 பேர்களை மணந்து கொண்டார்.

    சந்திரன் அத்திரி முனிவரின் புதல்வனாவான். இவன் தட்சனின் புதல்வியர்கள் 27 பேர்களை மணந்து கொண்டான்.

    அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அன்பாயிருந்தமையால், தட்சனால் சபிக்கப்பட்டான்.

    இதைத் தொடர்ந்து சிவபெருமானை பலதலங்களில் சென்று வழிபட்டு துன்பத்திலிருந்து விடுபட்டான்.

    பிறகு தேவகுருவாகிய பிரகஸ்பதியினால் சபிக்கப் பெற்று சயரோக நோயினால் வருந்தினான்.

    இதற்காக சிவபெருமானை சரண் அடைந்து நோய் நீங்கப் பெற்றான்.

    அதுமட்டுமின்றி, சிவபெருமானது இடது கண்ணாகவும், திருமுடியில் திகழவும் பேறு பெற்றான்.

    சந்திரன் வழிபட்ட சிவாலயங்கள்:

    திருவெண்காடு,

    மாந்துறை,

    திருவாரூர்,

    நெல்லிக்கா,

    திருவலிதாயம்,

    திருப்பழுவூர்,

    திருப்புனவாயில்,

    குடந்தைக் காரோணம்,

    திங்களூர்,

    மயேந்திரப்பள்ளி,

    திருப்பனந்தாள்,

    சீர்காழி,

    திலதைப்பதி

    • புதன் கிரகம் விதியால் துதிக்கப்படுகிறது. எனவே விதியை வெல்ல புதனை துதிக்கலாம்.
    • புதனை வணங்குவதால் இந்திரனும் திருப்தியடைவார்.

    1. பித்தளை, உலோகம் புதனுக்குரியது.

    2. கிரஹபதி, ஞானி, புத்திதாதா, தனப்ரதன் என்ற விசேஷப் பெயர்கள் புதனுக்கு உண்டு.

    3. ஜோதிடக்கலை புதனுக்குரியது.

    4. வாணிஜ்ய நிபுணன் (வியாபாரத்தில் சமர்த்தன்) என்ற திருநாமம் புதனைக் குறிக்கும்.

    எனவே வியாபாரிகள் புதனை வழிபடப் பெரும்பேறு அடைவர்.

    5. முத்துசுவாமி தீட்சிதர் தம் நவக்கிரக கீத்தனையில் புதனை கவி பாடும் திறன் அளிப்பவர் என்றும்,

    செவ்வாய்க்குப் பகைவர் என்றும், சுத்த சத்வ சதானந்த ரூபம் உடையவர் என்றும்

    பல சிறப்பு செய்திகளை கூறுகிறார்.

    புதனுக்கு அதிதேவதை விஷ்ணு, பிரத்யதி தேவதை நாராயணர். புதன் விஷ்ணுவைப் போல் தோற்றமுள்ளவர்.

    6. புதன் கிரகம் விதியால் துதிக்கப்படுகிறது. எனவே விதியை வெல்ல புதனை துதிக்கலாம்.

    7. புதனை வணங்குவதால் இந்திரனும் திருப்தியடைவார்.

    8. சரத்ருதுவிற்கும் அதர்வண வேதத்திற்கும் புதனே உரியவர்.

    9. கல்விக்கும், அறிவிற்கும் உரிய புத்திரகாரகன் புதன்.

    கவி ஆற்றல், கணிதம், தர்க்கம், வைத்திய அறிவு, நாடகம், நாட்டியத்திறன், புத்தகம் எழுதுதல்,

    உச்சரிப்பு ஆகியவற்றுக்கு புதன் உச்சத்தில் இருப்பதே காரணமாகும்.

    10. நவக்கிரக மண்டலத்தில் சூரியனுக்கு வடகிழக்கே அமர்பவன் புதன். புதனுக்குரியது கல்கி அவதாரம்.

    11. ஆயுர்வேதத்திற்கு உரியவரும், மஹா விஷ்ணுவின் அவதாரமானவரும், பாற்கடலில் தோன்றியவரும்,

    அமுத கலசத்தை கையில் ஏந்தியவருமான தன்வந்திரி பகவானைத் துதித்தால் புதன் மகிழ்ச்சியடைவார்.

    12. புதனுக்கு வேம்பு இலையில் சர்க்கரையும், நெய்யும், பாலும் கலந்த சோற்றை வடதிசையில்

    கிரக பலியாகக் கொடுக்க புத பகவான் திருப்தியடைவார்.

    13. புலமைக்கும், வணிகத்திற்கும் உரிய கடவுளாக புதனை பண்டைய கிரேக்கர் வழிபட்டனர்.

    14. புதன் பொன்னிறமானவன். 'கோங்கு' என்ற மலரின் நிறமுடையவன். மஞ்சள் நிற ஆடை புனைந்தவன்.

    மஞ்சள் நிறக் குடையும், கொடியும் உடையவன். மஞ்சள், சந்தனம் தரிப்பவன்.

    15. நல்லோரது நட்பு, தாய்மாமனின் நிதி நிலைமை, நம் கல்வி, புத்தி, அமைதி, ராஜசன்மானம், விவேகம்

    ஆகியவற்றை புதன் நிர்ணயிப்பார்.

    16. கல்வித்தடை, புத்தி மந்தம், வாக்கு நாணயம் தவறுதல், நரம்புத் தளர்ச்சி, மனதில் பீதி, கிலேசம்,

    வியாபார நஷ்டம், பிறதேச வாசம், விபரீத ஞானம் ஆகியவை புதனால் வரும் அசுப பலன்களாகும்.

    17. புதனால் வரும் துன்பங்கள் விலக ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் ௩௫ வது சருக்கம் ராம வருண சம்வாதம் பாராயணம் செய்யலாம்.

    • தூபதீப நைவேத்தியம் கொடுத்துப் பிரார்த்தனை செய்து கொள்ளவும். கற்பூர ஆரத்தி எடுக்கவும்.
    • அரிசி மாவினால் புதனுக்குரிய இந்தக் கோலத்தை புதன் கிழமை தோறும் பூஜை அறையில் போடவும்.

    புத பகவானுக்கு புதன் கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம், மரகதமணி, வெண்தாமரை

    இவற்றால் அலங்காரம் செய்து, புதனைப் பற்றிய ஸ்தோத்திரங்களை ஓதி, நாயுருவி சமித்தால் யாகத் தீ எழுப்பவும்.

    பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி செய்து, தீபாராதனை செய்து, அர்ச்சனை செய்யவும்.

    தூபதீப நைவேத்தியம் கொடுத்துப் பிரார்த்தனை செய்து கொள்ளவும். கற்பூர ஆரத்தி எடுக்கவும்.

    புத பகவானை வழிபடும்போது ராகம் தெரிந்தவர்கள் நாட்டக் குறச்சி ராகத்தில் கீர்த்தனைகளைப் பாடுவது மிகுந்த சிறப்பாகும்.

    புதனுக்கான கோலம்

    அரிசி மாவினால் புதனுக்குரிய இந்தக் கோலத்தை புதன் கிழமை தோறும் பூஜை அறையில் போடவும்.

    விளக்கேற்றி வைத்து புதனுக்குரிய பாடல்களை, தியான சுலோகங்களைச் சொல்லி வழிபடவும்.

    • மிதுனம், கன்னிராசிகளின் அதிபதி புதன்.
    • புதனின் நட்பு வீடுகள் : ரிஷபம், சிம்மம், துலாம்.

    மிதுனம், கன்னிராசிகளின் அதிபதி புதன்.

    அறிவைக் கொடுக்கும் புதன், கன்னிராசிக்கு வரும் சமயம் உச்சம் பெறும், மீனராசிக்கு வரும் சமயம் நீச்சமடையும்.

    புதனின் நட்பு வீடுகள் : ரிஷபம், சிம்மம், துலாம்.

    பகை வீடுகள் : கடகம், விருச்சிகம்

    ஒருவர் ராசிக்கு வந்து புதன் தங்கியிருக்கும் போது குடும்பம் அமைதியையும் சுகத்தையும் இழக்க நேரிடும்.

    குடும்பத்தில் இருந்து பிரிந்திருக்க நேரிடலாம். சுபக்கிரகப் பார்வை ஏற்படுமானால் தீய பலன் மாறி நற்பலன் ஏற்படும்.

    புதன், ராசிக்கு 2ல் வரும் சமயம் செல்வாக்கு குறையலாம். புதன் வலிமை பெற்றால் நற்பலனே விளையும்.

    புதன், ராசிக்கு 3ல் வரும்போது எதிரிகளால் தொந்தரவு இருக்கலாம்.

    சுபர்களின் பார்வை படுமானால் நல்ல பலன்களே உண்டாகும்.

    ராசிக்கு 4ல் புதன் தங்கும்போது நல்ல பலன்கள் உண்டாகும்.

    பொருள் வசதிகள் பெருகும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.

    ராசிக்கு 5ல் வரும்போது சிரமம்தான்.

    மற்றக் கிரகங்ளின் வலிமையால் நன்மையை உண்டாகும்.

    புதன் ராசிக்கு 6ல் வரும்போது நன்மையே நடக்கும்.

    எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்.

    மற்றவர்களிடையே மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

    குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதனால் செலவுகள் வரும்.

    ராசிக்கு 7ல் புதன் வரும்போது அமைதி குறையலாம்.

    ஆனாலும் விரைவில் நன்மையாகும்.

    ராசிக்கு 8ல் வரும்போது, பலன்கள் நன்றாக இருக்கும்.

    குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும். பொருளாதார வசதி பெருகும்.

    எல்லா முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும்.

    புதன் 9ல் வரும்போது தெய்வபக்தியால் சிரமங்களைப் போக்கிக் கொள்ளலாம்.

    புதன், ராசிக்கு 10ல் வரும் சமயம் பணவசதியும், உற்சாகமும், கணவன் மனைவி உறவு சந்தோஷமாகவும் இருக்கும்.

    ராசிக்கு 11ல் வரும்போதும் நன்றாக இருக்கும். கவலை ஏதும் இருக்காது.

    புதன் ராசிக்கு 12ல் நிற்கும்போது சிரமமான நேரம்தான்.

    ஆரோக்கியக் குறைவு, பண நெருக்கடி, மனக்குழப்பம் இருக்கும்.

    கிரக சஞ்சாரத்தில் மாற்றங்கள் ஏற்படும்போது நற்செலவுகள் ஏற்பட்டு நல்ல காரியங்கள் நடக்கும்.

    • புத தசை 17 ஆண்டுகள்.
    • வாக்கு சாதுர்யம், பண்டிதர்களின் நட்பு, புகழ் முதலியவை கிடைக்கும்.

    புத தசை 17 ஆண்டுகள்.

    புதன் ஒவ்வொரு ராசியையும் கடக்க 30 நாட்களாகும்.

    கன்னி ராசியில் 1 மிதுன ராசியில் 1, ரிஷபம், சிம்மம், துலாம் ராசிகளில் மேஷம்,விருச்சிகம், தனுசு,

    கும்ப ராசிகளில் கடக ராசியில் மீன ராசியில் 1/8 பங்கு வீதம் பலனைத் தரும்.

    புதன் தரும் பலன்களை ஆனி, புரட்டாசி மாதங்களிலும், மிதுனம், கன்னி ராசிகளில் வரும்போதும் காணலாம்.

    புதன் சுப பலன்களாக ஒருவர் மேற்கொண்டிருக்கும் படிப்பு, தொழில், கலை முதலியவற்றில் மகா பாண்டித்யமும் ஞானமும் அருளுவார்.

    வாக்கு சாதுர்யம், பண்டிதர்களின் நட்பு, புகழ் முதலியவை கிடைக்கும்.

    புதன் அசுப பலன் தரும்போது தொழிலில் அல்லது கலைகளில் வீழ்ச்சி, புத்தி தடுமாற்றம், வாக்கு மீறுதல், சச்சரவு, சொந்த ஊரைவிட்டுப் போகுதல் முதலியவை உண்டாகும்.

    12 தல ஈசன்கள் மகாமகம் குளத்துக்கு வந்து தீர்த்தமாடுவார்கள்.

    மகாமகம் தினத்தன்று

    ஆதிகும்பேஸ்வரர்,

    காசி விசுவநாதர்,

    அபி முகேஸ்வரர்,

    கவுதமேஸ்வரர்,

    ஏகாம் பரேஸ்வரர்,

    நாகேஸ்வரர்,

    சோமேஸ்வரர்,

    ஆதிகம்பட்ட விசுவநாதர்,

    கோடீஸ்வரர்,

    காளஹஸ்தீஸ்வரர்,

    பாணபுரீஸ்வரர்,

    அமிர்தகவசநாதர்

    ஆகிய 12 தல ஈசன்கள் மகாமகம் குளத்துக்கு வந்து தீர்த்தமாடுவார்கள்.

    நவக்கிரக தலங்கள்

    கும்ப கோணத்தில் உள்ள சிவாலயங்களில் 8 ஆலயங்கள் நவக்கிரகங்களுக்குரிய தலங்களாக உள்ளன.

    அந்த தலங்கள் விவரம் வருமாறு:

    சூரியன் - நாகேஸ்வரர் கோவில்

    சந்திரன் - ஆதிகும்பேஸ்வரர் கோவில்

    செவ்வாய் - பாணபுரீஸ்வரர் கோவில்

    புதன் - கவுதமேஸ்வரர் ஆலயம்

    வியாழன் - சோமேஸ்வரர் ஆலயம்

    சுக்கிரன் - காசி, விசுவநாதர் ஆலயம்

    சனி - அபிமுகேஸ்வரர் கோவில்

    ராகு, கேது - காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்

    • அக்காரவடிசலுக்கு அலங்காரமே அதில் மினுமினுக்கும் நெய்தான்.
    • அக்காரை என்றால் சர்க்கரை. அடிசல் என்பது குழைய வெந்த சாதம்.

    ''மாதவா, என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வந்தால் நூறு அண்டா வெண்ணையும்,

    நூறு அண்டா அக்காரவடிசலும் உனக்கு நிவேதனமாகத் தருகிறேன்...''

    திருமாலிருஞ்சோலை அழகரிடம் ஆண்டாள் இப்படி வேண்டிக் கொண்டாள்.

    அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூடி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்.

    ஆண்டாள், தான் வேண்டியபடி நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் பகவானுக்குக் கொடுத்தாளா, இல்லையா...? சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் ராமானுஜருக்கு வந்தது.

    உடனே அந்த மகான் என்ன செய்தார் தெரியுமா?

    நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதனை செய்தார்.

    ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார்.

    அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள்.

    இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உத்சவமாக கொண்டாடுகிறார்கள்.

    அன்று அக்காரஅடிசல் பிரசாதமும் உண்டு.

    அக்காரை என்றால் சர்க்கரை. அடிசல் என்பது குழைய வெந்த சாதம்.

    பார்க்க சர்க்கரைப் பொங்கல் போல இருந்தாலும் சர்க்கரைப் பொங்கலுக்கு இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

    புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்காரவடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.

    அக்காரவடிசல் எப்படி செய்வது?

    தேவையானவை: பச்சரிசி கால் கிலோ, பச்சைப் பருப்பு-100 கிராம், வெல்லம் ஒன்றரைக் கிலோ (ஒரு பங்கு அரிசிக்கு ஆறு பங்கு வெல்லம்) ஏலக்காய் தூள்- 2 ஸ்பூன்.

    இவை தவிர, நிறைய பால், நிறைய நெய், அரிசி, வெல்லம் அளவுக்கு குறைந்தது நான்கு லிட்டர் பால் சேர்க்கலாம், ஒன்றரைக் கிலோ நெய் ஊற்றலாம்.

    அக்காரவடிசலுக்கு நெய்யும் பாலும் விடுவதில் தயக்கமோ கஞ்சத்தனமோ கூடவே கூடாது.

    கைவலித்தாலும் நிறுத்தாமல் கிண்ட வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் அடிப்படித்துவிடும்.

    அக்காரவடிசலில் முந்திரி, திராட்சை போன்றவற்றை பகட்டுக்காகவோ, ருசிக்காகவோ போடக்கூடாது.

    செய்முறை:

    அரிசியையும் பாசிப்பருப்பையும் கல், தூசி இல்லாமல் சுத்தம் செய்து களைந்து கழுவி, தண்ணீரை வடித்து கொஞ்சநேரம் நிழலில் காயவையுங்கள்.

    பிறகு ஒரு வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு அரிசி, பருப்பைப் போட்டு லேசாக வறுங்கள்.

    அரிசி ஒருபங்குக்கு ஐந்து பங்கு பால் சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள்.

    எவ்வளவு குழைகிறதோ அவ்வளவு ருசி கிடைக்கும். எனவே நன்கு குழையவிட்டு இறக்குங்கள்.

    வெல்லத்தைத் தூளாக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டியபின் ஒரு வாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றி அடுப்பில் வையுங்கள்.

    கொஞ்சம் சூடானதும், குழைய வெந்த அரிசி பருப்புக் கலவையை வெல்லக் கரைசலில் போடுங்கள்.

    ஒரு லிட்டர் பாலை சேர்த்து, கிளற ஆரம்பியுங்கள்.

    இறுக இறுக பால் சேர்த்து கிளறுங்கள்.

    பால் தீர்ந்ததும், நெய் சேர்த்துக் கிளறுங்கள்.

    இறுகும் போதெல்லாம் வழிய வழிய நெய் விடுங்கள்.

    அக்காரவடிசலுக்கு அலங்காரமே அதில் மினுமினுக்கும் நெய்தான்.

    எனவே உங்களால் முடிந்த அளவுக்கு நெய்யை ஊற்றுங்கள்.

    கடைசியாக சிறிது ஏலப்பொடி, பச்சைக் கற்பூரப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வையுங்கள்.

    நிவேதனம் செய்து அரங்கனை வணங்கிவிட்டு சாப்பிடுங்கள்.

    சூப்பராக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஒருதடவை செய்து பாருங்களேன்.

    • அதனால் அவன் 'திரிபுரன்' எனப்பெயர் பெற்றான்.
    • விநாயகர் இவ்வரங்களைக் கொடுத்தபோது ஒரு நிபந்தனையையும் அவனுக்கு அளித்தார்.

    கிருச்சமத முனிவரின் மகன் பலி தனது தந்தையின் சொல்படி ஆனைமுகம் கடவுளை பல்லாண்டுகள் கடுமையாக தவம் செய்தான்.

    அவனது தவத்தை மெச்சிய விநாயகர் அவன் வேண்டிக் கொண்டபடி, 'மூவுலகத்தாரும் அவனுடைய ஆணைப்படி நடப்பார்கள்' என்றருளியதோடு

    அவன் நினைக்கும் இடமெல்லாம் சென்று வர இரும்பு, வெள்ளி மற்றும் தங்கத்தாலான மூன்று கோட்டை நகரங்களையும் கொடுத்தார்.

    அதனால் அவன் 'திரிபுரன்' எனப்பெயர் பெற்றான்.

    ஆனைமுகக் கடவுள் இவ்வரங்களைக் கொடுத்தபோது ஒரு நிபந்தனையையும் அவனுக்கு அளித்தார்.

    அதாவது அவன் ஏதாவது தவறான காரியங்கள் செய்தால் அவனது முப்பட்டணங்களும் அழிவதோடு,

    அவனும் சிவபிரானால் அழிவான் எனவும் கூறினார்.

    விநாயகரின் வரத்தைப் பெற்ற பலி நாட்கள் செல்ல செல்ல,

    உலகங்களையும் ஆட்டிப் படைத்து தேவர்கள் முதலிய எல்லோருக்கும் பல தொல்லைகளைத் தொடர்ந்து கொடுத்தான்.

    இதற்கு நிவாரணம் பெற தேவர்கள் அனைவரும் சிவபிரானை வேண்டி கொள்ள,

    அவர் பலியுடன் போரிட்டு அவரது திரி சூலத்தால் அவனை அழிக்கும்போது அவன் அவரது திருப்பாதங்களைப் பற்றியதால் அவருடன் ஒன்றிப் போனான்.

    பலியை (திரிபுரன்) சிவபிரான் அழித்ததால் அவருக்கு திரிபுராரி எனப் பெயர் வந்தது.

    சிவனது பலி வதம் முருகனின் சூரசம்ஹாரம் மற்றும் கிருஷ்ணரது நரகாசுரவதம் போன்றது என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள்.

    ஆம், வதைபடும் நேரத்தில் வீடு பேறு பெற்றான் பலி.

    இறையருளால் பலி வீடுபேறு பெற்ற நாள் ஒரு புரட்டாசி பவுர்ணமியாகியப் புனித நாளாகும்.

    இத்திருநாளில் சிவபிரானுக்கு திருவிழா வழிபாடு செய்தாலும் நெய் அல்லது எண்ணை திருவிளக்கு ஏற்றினாலும் எக்காலத்திலும் தீவினை அணுகாது நலம் பெறலாம்.

    அன்று விரதமிருந்து, ஆலயம் சென்று வில்வார்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி சிவதரிசனம் பெற்று வருவதோடு,

    சிவபுராணம், திருவாசகம், தேவாரப் பாடல்களைப் பாடி வீட்டிலும் சிவ பெருமானை தியானித்து வழிபட்டால்,

    இல்லத்தில் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.

    புரட்டாசி பவுணர்மியன்று சிவபிரானை (வருடம் தோறும்) காலையில் வழிபட்டால் முற்பிறப்பு தீவினைகள் எல்லாம் ஒழியும்.

    மதியம் வழிபட்டால் முற்பிறவியோடு இப்பிறப்பு தீவினைகளும் ஒழியும்.

    மாலையில் வழிபட்டால் ஏழு பிறவிகள் தோறும் முற்றிய தீவினைகள் எல்லாம் ஒழிவதோடல்லாமல் விரும்பியன எல்லாம் வந்து சேரும்.

    ×