என் மலர்

  நீங்கள் தேடியது "Shivan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அபிசேக பூஜை, சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
  • அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.

  பல்லடம் :

  பல்லடம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன .பிரதோசத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.

  இதேபோல பல்லடம் கோட்டைவிநாயகர்கோவில், பொங்காளியம்மன் கோவில், அருளானந்த ஈஸ்வரர்கோவில்,சித்தம்பலம் நவகிரக கோட்டை உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
  • ஈசனிடம் காரைக்கால் அம்மையார் மாங்கனி பெற்ற நிகழ்ச்சி மாங்கனி திருவிழாவாக கொண்டாடப்பட்டது.

  ஆறுமுகநேரி:

  ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு குரு பூர்ணிமா மற்றும் மாங்கனி திருவிழா நடைபெற்றது. விழாவில் சுவாமி, அம்பாள் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஈசனிடம் காரைக்கால் அம்மையார் மாங்கனி பெற்ற நிகழ்ச்சி மாங்கனி திருவிழாவாக கொண்டாடப்பட்டது.

  சடங்கு வைபவங்களை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர் நடத்தினார். இரவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

  நிகழ்ச்சிகளில் பக்த ஜன சபை சார்பில் தெரிசை அய்யப்பன், மண்டகப்படிதாரரான ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரசெல்வன் மற்றும் திருமுறை பண்ணிசை குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா செய்திருந்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிதாக 40 ராக்கெட்டுகள் உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். #ISRO
  நாகர்கோவில்:

  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சிவன், தனது சொந்த ஊரான குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளைக்கு நேற்று வந்தார். பின்னர், அவர் படித்த சரக்கல்விளை அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையில் வகுப்பறை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

  இந்த கட்டுமான பணிகளை இஸ்ரோ தலைவர் சிவன் பார்வையிட்டார். எவ்வளவு பணிகள் நிறைவடைந்து இருக்கிறது? இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் என்னென்ன? என்பது பற்றி சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  மத்திய அரசு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக இஸ்ரோவும் முன்னேற்றம் கண்டு வருகிறது. உதாரணமாக செயற்கை கோள்களுக்கு தேவையான சோலார் செல்களை இந்தியாவிலேயே உருவாக்கி இந்திய செயற்கை கோள்களில் உபயோகப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிதாக 40 ராக்கெட்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

  அதாவது 30 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளும், 10 ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டுகளும் உருவாக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. ராக்கெட்டுகள் உருவாக்கப்படுவதன் மூலம் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

  இஸ்ரோ மூலமாக மாணவ-மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சரக்கல் விளையில் நான் படித்த பள்ளிக்கூடத்தில் புதிதாக ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கிராமப்புற மாணவ-மாணவிகள் கல்வி கற்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

  இஸ்ரோ தலைவர் சிவன் படித்த சரக்கல் விளை அரசு பள்ளி இஸ்ரோவுக்கு கீழ் செயல்படும் ஒரு தனியார் அமைப்பு மூலம் ரூ.40 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பள்ளியில் 4 வகுப்புகளுக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஸ்மார்ட் வகுப்பறையும் அடங்கும். இதற்காக பள்ளி வளாகத்தில் இருந்த பழைய ஓட்டு கட்டிடத்தை இடித்து அகற்றி அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.

  மேலும் கழிவறைகள், பள்ளியை சுற்றிலும் காம்பவுண்டு சுவர், மின் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. #ISRO #Tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்மூர்த்திகளான பிரம்மா - விஷ்ணு - மகேஸ்வரன் ஆகியவர்களில் ஒருவரான சிவபெருமான் கோவில் கொண்ட 12 சிவாலயங்களை இங்கே பார்க்கலாம்.
  சிவபெருமான் கோவில் கொண்ட 12 சிவாலயங்களை இங்கே பார்க்கலாம்.

  * தத்புருஷ பீடம்- ராஜ மாதங்கி சமேத மதங்கீஸ்வரர் கோவில், திருநாங்கூர்.

  * அகோரபீடம்- அகிலாண்ட நாயகி சமேத ஆரண்யேஸ்வரர் கோவில், கீழைத் திருக்காட்டுப்பள்ளி.

  * வாமதேவ பீடம் - திருயோகீஸ்வரம் யோகாம்பாள் சமேத யோகநாதர் ஆலயம், கீழ் சட்டநாதபுரம்.

  * சத்யோஜாத பீடம்- சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவில், காத்திருப்பு.

  * சோம பீடம்- அமிர்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருநாங்கூர்.

  * சார்வ பீடம்- நாகநாதர் ஆலயம், அல்லிவிளாகம் செம்பதனிருப்பு.

  * மகாதேவ பீடம்- பக்தவத்சலாம்பிகை சமேத நம்புவார்க்கன்பர் ஆலயம், திருநாங்கூர்.

  * பீமபீடம்- கயிலாசநாத சுவாமி ஆலயம், திருநாங்கூர்.

  * பவபீடம்- சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில், திருநாங்கூர்.

  * பிராண பீடம்- அதுல்ய குஜாம்பாள் சமேத ஐராவதேஸ்வரர் கோவில், அத்தீஸ்வரம் பெருந்தோட்டம்.

  * ருத்ரபீடம்- சுந்தராம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம், அன்னப்பன் பேட்டை.

  * பாசுபத பீடம்- நயனவரதேஸ்வர சுவாமி திருக்கோவில், மேல்நாங்கூர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதோஷ தினமான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள சிவனுக்கு உகந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் முன்னேற்றங்களை காணலாம்.
  பஞ்சவக்த்ரம் மஹாபாஹூம் தஸபாஹூம் த்ரிலோசனம்
  பீஷணம் பாஸ்கரம் ருத்ரம் பிங்கப்ரூஸ்மஸ்ருமூர்தஜம்
  கட்க கேடக நாராச தநுஸ்ஸர கமண்டலூந்
  சக்திம் சூலம்ச பரஸூம் ப்ரஹ்மதண்டம் கராக்ரகைஹ
  பிப்ராணம் ஸ்படிகாத்ர்யாபம் நாகாபரணபூஷிதம்
  சர்வாஸ்த்ரேஸம் பசூபதிம் சர்வரக்ஷாகரம் ஸ்மரேத்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவபெருமானை பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். அத்தகைய பிரதோஷத்தின் வகைகளை தெரிந்து கொள்வோம்.
  சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். அத்தகைய பிரதோஷத்தின் வகைகளை தெரிந்து கொள்வோம்.

  நித்திய பிரதோஷ விரதம் - தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைகள் முன்னர், நட்சத்திரங்கள் உதயமாகும் வரை உள்ள நேரம் நித்திய பிரதோஷமாகும்.

  திவ்ய பிரதோஷ விரதம் - பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும்.

  தீப பிரதோஷ விரதம் (மகா பிரதோஷம்) - தேய்பிறை சனிக்கிழமைகளில் வரும் மாத பிரதோஷம் மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனப்படும். இது மிகவும் சிறப்பானது.

  சப்தரிஷி பிரதோஷ விரதம் - பிரதோஷ காலத்தில் பூஜைகளை முடித்து வானத்தில் சப்த ரிஷி மண்டலம் என்னும் நட்சத்திர கூட்டத்தை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும்.

  ஏகாட்ச்சர பிரதோஷ விரதம் - வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷம் ஏகாட்ச்சர பிரதோஷம் எனப்படும்.

  அர்த்தநாரி பிரதோஷ விரதம் - வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால், அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.

  திரிகரண பிரதோஷ விரதம் - வருடத்திற்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள்.

  பிரம்ம பிரதோஷ விரதம் - இந்த பிரதோஷத்தை கடைபிடித்தால் முன்னோர் சாபம், முன் வினை பாவம் விலகிவிடும்.

  ஆட்சரப பிரதோஷ விரதம் - வருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது ஆட்சரப பிரதோஷம்.

  கந்த பிரதோஷ விரதம் - சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர்.

  சட்ஜ பிரபா பிரதோஷ விரதம் - வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைப்பிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.

  அஷ்டதிக் பிரதோஷ விரதம் - வருடத்தில் எட்டு மகா பிரதோஷத்தை கடைப்பிடித்தால் அஷ்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.

  நவகிரக பிரதோஷ விரதம்
  - வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷமாகும்.

  துத்த பிரதோஷ விரதம் - வருடத்தில் வரும் பத்து மகா பிரதோஷத்தையும் கடைபிடிப்பது துத்த பிரதோஷம் எனப்படும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தன்னை வணங்கும் பக்தர்களின் வியாதிகளை படிப்படியாகக் குறைத்து, அவர்கள் பரிபூரண குணம் பெற மருந்தீஸ்வரர் அருள்புரியக் கூடியவர் என்பதில் சந்தேகமே இல்லை.
  ‘ஔஷதம்’ என்பதற்கு மருந்து என்று பொருள். நோய் தீர்க்கும் மருந்தின் பெயரால் ஒரு இறைவன் அழைக்கப்படுகிறார். ‘ஒளஷதபுரீஸ்வரர்’, ‘மருந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் இந்த இறைவன் அருள்பாலிக்கும் ஆலயம் மருங்கபள்ளம் என்ற ஊரில் உள்ளது.

  ஆலயம் பல நூறு ஆண்டுகள் பழமையானது. கருவறையில் மருந்தீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

  தன்னை வணங்கும் பக்தர்களின் வியாதிகளை படிப்படியாகக் குறைத்து, அவர்கள் பரிபூரண குணம் பெற இத்தல இறைவன் மருந்தீஸ்வரர் அருள்புரியக் கூடியவர் என்பதில் சந்தேகமே இல்லை.

  தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கபள்ளம். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவபெருமான் அபிஷேக பிரியர். சிவபெருமானுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  அருகம்புல் சாறு கொண்டு சிவனை அபிஷேகித்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

  பசும் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

  தயிரால் ஈசனை அபிஷேகித்தால் உடல் பலம், ஆரோக்கியம் பெறுவீர்கள்.

  பசு நெய்யால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வரியம் சேரும்.

  கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் தன விருத்தி ஏற்படும்.

  தேன் கொண்டு அபிஷேகித்தால் தேகம் பொலிவு பெறும்.

  மிருதுவான சர்க்கரையைக் கொண்டு அபிஷேகம் செய்தால் துக்கம் விலகும்.

  புஷ்பங்களைக் கொண்டு அபிஷேகம் செய்தால் பூலோக பாவம் அகலும்.  இளநீரால் ஈசனை அபிஷேகித்தால், சகல சம்பத்துகளும் வாய்க்கப்பெறுவீர்கள்.

  ருத்திராட்சம் கொண்டு அபிஷேகம் செய்தால் ஆனந்த வாழ்வு அமையும்.

  அரைத்து எடுத்த சந்தனத்தால் அபிஷேகித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

  சுத்தமான நீரினால் ஈசனை அபிஷேகம் செய்தால் இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

  வில்வத்தால் அபிஷேகம் செய்தால் போக பாக்கியங்கள் வந்து சேரும்.

  அன்னத்தால் அபிஷேகித்தால் அதிகாரம், தீர்க்காயுள், மோட்சம் கிடைக்கும்.

  திராட்சைச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

  பேரீச்சம்பழம் கொண்டு அபிஷேகம் செய்தால் எதிரிகள் விலகுவார்கள்.

  மாம்பழத்தால் அபிஷேகித்தால் தீராத வியாதிகள் நீங்கும்.

  மஞ்சள் கலந்த நீரினால் அபிஷேகம் செய்தால் மங்கலம் உண்டாகும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விளம்பி வருடத்தில் (2018 - 2019) ஒவ்வொரு மாதமும் வரும் சிவனுக்கு உகந்த மாத சிவராத்திரி விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  சித்திரை 30 (13.5.2018) ஞாயிறு
  வைகாசி 29 (12.6.2018) செவ்வாய்
  ஆனி 27 (11.7.2018) புதன்
  ஆடி 24 (9.8.2018) வியாழன்
  ஆவணி 23 (8.9.2018) சனி
  புரட்டாசி 21 (7.10.2018) ஞாயிறு
  ஐப்பசி 19 (5.11.2018) திங்கள்
  கார்த்திகை 19 (5.11.2018) புதன்
  மார்கழி 20 (4.1.2019) வெள்ளி
  தை 19 (2.2.2019) சனி
  மாசி 20 (4.3.2019) திங்கள்
  பங்குனி 20 (3.4.2019) புதன்

  ×