என் மலர்
நீங்கள் தேடியது "பித்ரு வழிபாடு"
- நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
- பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன.
இந்த உலகில் இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆத்மாவும் வலிமை உள்ளவையே. அதுவே உங்கள் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி என்றால் அவர்களை நீங்கள் முறையாக வழிபாடு செய்தால் அவர்களின் அத்தனை சக்தியும் உங்கள் முன்னேற்றத்திற்கு கிடைக்க அவர்கள் முழு ஆசீர்வாதம் கிடைக்கும்.
உங்கள் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம்.
நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அவர்களை நமது சாதாரணக் கண் கொண்டு அடையாளம் தெரிந்து ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கிட இயலாது என்பதால்தான் அவர்களுக்காக ஹோமம் வளர்த்து யாகம் அனுசரித்து பஞ்ச பூதங்களையும் முன்நிறுத்தி உரிய மந்திரங்களோடு வணங்குகிறோம். இதுவே பித்ரு ஹோமம்.
சிருஷ்டியின் போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியை தொடங்குகிறாரோ அதே போன்று பித்ருக்களின் ஜீவசக்தி அமுதகலசமாக உருவகிக்கும் இடமே சோமாதித்ய மண்டலமாகக் கருதப்படுகிறது.
புரட்டாசி மாத மகாளயபட்ச அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும் ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், சமுத்திரங்களிலும் காசி, ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.
நமது மூதாதையர்களுக்கே உரித்தான இந்தத் தர்ப்பண பூஜையானது பித்ருக்களுக்கு மட்டுமின்றி, வம்சா வளியிலுள்ள நமக்கும் தான் பெரிதும் பயன் தருவதாய் உள்ளது. இதனாலேயே மகாளயபட்சத்தில் கொடுக்கப்படும் பெற்றோருக்கான அல்லது முன்னோருக்கான திதி வழிபாடு மிகவும் சிறப்புடையதாய் விளங்குகிறது. பொதுவாக வலது ஆள் காட்டி (குரு விரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிரவிரல்) இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன.
இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள பித்ரு லோகத்தை அடைகின்றது. சாதாரணமாக, அமாவாசையன்று கீழிருந்து மேல் செல்வதே பித்ரு லோக அந்தர ஆக்ரஷன சக்தியின் தெய்வீகத் தன்மையாகும்.
மகாளயபட்ச அமாவாசையன்று இச்சக்தியானது மிகவும் அபரிமிதமாகப் பெருகுகின்றது.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது பசு தயிர் கொண்டு தர்ப்பணம் செய்வது திருப்தியளிப்பதாய் கருதப்படுகிறது. பித்ரு லோகத்தில் உள்ள மூலிகையாய் விளங்குவது புடலங்காயே, இதன் நிழலில் தான் பித்ருட தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம்.
ஆக, அதி அற்புதமான தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து பல்லாயிரக் கணக்கான நம் கர்ம வினைகளுக்குப் பரிகாரம் தரும் மகாளயபட்ச தர்ப்பண தர்மங்களை நிறைவேற்றி நல்வழி காண்போமாக.
- பகவானை கண்டதும் ஹரிதாசர் தன் பணிவிடையை நிறுத்தவில்லை.
- எந்த மாதம் சிரார்த்தம் செய்ய வேண்டியது உள்ளதோ அந்த மாதம் மற்ற சுப நிகழ்ச்சிகள் இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
பித்ரு வழிபாடு செய்யும் போது சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம்.
கடவுளுக்கு முதலில் பூஜை, வழிபாடுகள் செய்ய வேண்டுமா? அல்லது நம் முன்னோர்களுக்கு முதலில் பூஜை செய்து வழிபட வேண்டுமா? என்பதே அது.
முதலில் பித்ருக்களைதான் வணங்க வேண்டும். அதன் பிறகே தெய்வ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு புராண உதாரணமும் இருக்கிறது.
பகவான் பாண்டுரங்கன் ஒரு தடவை தன் பக்தன் ஹரிதாசரைப் பார்க்க சென்றார். அப்போது ஹரிதாசர் வயதான தன் பெற்றோருக்கு பணி விடைகள் செய்து கொண்டிருந்தார்.
பகவானை கண்டதும் ஹரிதாசர் தன் பணிவிடையை நிறுத்தவில்லை. பகவானை பார்த்து, 'சிறிது நேரம் காத்திருங்கள் நான் என் பணி விடைகளை முடித்து விட்டு வருகிறேன்' என்று கூறி ஒரு செங்கலை சுட்டிக் காட்டினாராம்.
உடனே பகவான் பாண்டுரங்கன் அந்த செங்கல் மீது ஏறி நின்று கொண்டார். ஹரிதாசர் பணி விடைகளை முடித்துவிட்டு வந்த பிறகு அவருக்கு பகவான் ஆசி வழங்கினாராம்.
எனவே நம் வீட்டு பெரியவர்களுக்கே முதலில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. பெற்ற தாய்-தந்தையை பட்டிப்போட்டு விட்டு கோவிலுக்கு சென்று அபிஷேகம், அன்னதானம் என்று செய்தால் ஒரு புண்ணியமும் கிடைக்காது என்பதை உணர வேண்டும்.
ஆகையால் நீங்கள் எந்த மாதம் சிரார்த்தம் செய்ய வேண்டியது உள்ளதோ அந்த மாதம் மற்ற சுப நிகழ்ச்சிகள் இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல சிரார்த்தம் செய்யும் மாதங்களில் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சங்கல்பம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
- ஸ்ரீமந் நாராயணனே, ராம மற்றும் கிருஷ்ண அவதாரத்தின் போது பித்ரு பூஜை செய்ததாக கூறப்படுகிறது
- மகாளயபட்சத்தின் 15 நாட்களும் தம் முன்னோர்களின் ஆன்மாவை கண்ணால் காணும் பாக்கியத்தை பெற்று இருந்தார்களாம்.
பித்ரு வழிபாடு
ஒருவர் மரணம் அடைந்த பிறகு, அவர் ஆத்மா என்ன ஆகிறது? எங்கு போகிறது? எப்போது மறுபிறப்பு எடுக்கிறது? இந்த கேள்விகளுக்கு உலகம் முழுவதும் மாறுபட்ட, முரண்பட்ட தகவல்களே பதில்களாக உள்ளன. ஆன்மா மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அவற்றை கண்டு கொள்வதில்லை.
ஆன்மா மீது முழு நம்பிக்கை வைத்திருப்பவர்கள், மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்று அழைத்து உரிய மரியாதை, பூஜை செய்து வழிபடுகிறார்கள். உலகில் பெரும்பாலான மக்களிடம் பித்ருக்கள் மீதான நம்பிக்கை இருக்கிறது.சங்க காலத்துக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், பித்ரு வழிபாடு செய்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பித்ரு வழிபாட்டை ஆதி தமிழர்கள் இறை வழிபாட்டுக்கு நிகராக கடை பிடித்தனர்.
ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம் (15 நாட்கள்), வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என பல விதமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டு, மிக, மிக துல்லியமாக பித்ரு வழிபாடு செய்தனர். ஒவ்வொரு மாதமும் நாள், ராசி, திதி ஆகியவை ஒன்று சேருவதை கணக்கிட்டு பூஜைகள், விரதங்களை மேற்கொண்டனர்.
அவர்களது இத்தகைய துல்லியமான கணக்கீடுதான் அவர்களுக்கு 100 சதவீதம் முழுமையான பலன்களைப் பெற்று கொடுத்தது. அந்த வரிசையில்தான் ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும் மாதமாகிய புரட்டாசியில் மகாளய பட்ச அமாவாசை தர்ப்பண வழிபாட்டை ஏற்படுத்தியிருந்தனர்.
மகாளய பட்சத்தின் 15 நாட்களும் மறைந்த முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வருவதை கணக்கிட்டு பித்ருக்கள் பசியாற தர்ப்பணம் கொடுக்கும் நடைமுறையை ஏற்படுத்தினார்கள். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் பித்ரு பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக மகாளய பட்சத்தின் சிறப்புப் பற்றி கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
அது மட்டுமின்றி ஸ்ரீமந் நாராயணனே, ராம அவதாரத்தின் போதும், கிருஷ்ண அவதாரத்தின் போதும் பித்ரு பூஜை செய்ததாக புராணங்களில் தெரிவித்துள்ளனர். ஆனால் நாம் இவற்றையெல்லாம் மறந்து விட்டோம். முந்தைய யுகங்களில் வாழ்ந்தவர்கள், மிக சரியான முறையின் பித்ரு வழிபாடுகளை செய்ததால், மகாளயபட்சத்தின் 15 நாட்களும் தம் முன்னோர்களின் ஆன்மாவை கண்ணால் காணும் பாக்கியத்தை பெற்று இருந்தார்களாம். தற்போதைய கலியுகத்தில் அவை சாத்தியம் இல்லாமல் போய் விட்டது என்கிறார்கள்.
என்றாலும் நம் முன்னோர்கள் காட்டிய வழியில் மகாளய பட்ச பித்ரு தர்ப்பண வழிபாடுகளை செய்ய வேண்டியது நமது முக்கியமான கடமையாகும்.
- அவர்களுடைய ஆசியால் தான் நாம் இப்பூவுலகில் அமைதியாக வாழ முடிகின்றது.
- நாம் காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனீஸ்வர பகவானின் பூரண அருளையும் பெறலாம்.
நாம் தினமும் சாப்பிடும் முன் காகத்ததிற்கு ஒருபிடி உணவாவது வைத்தல் வேண்டும்.
ஏனெனில் நம்முடைய முன்னோர்களும், பித்ருக்களும், பித்ரு தேவதைகளுமே காகத்தின் வடிவில் வருவதாக ஐதீகம்.
அவர்களுடைய ஆசியால் தான் நாம் இப்பூவுலகில் அமைதியாக வாழ முடிகின்றது.
எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காகத்திற்கு தினந்தோறும் உணவு வைப்பது அவசியமாகும்.
மேலும் காகத்திற்கு உணவிடும் நல்ல பழக்கத்தினால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவ வழி ஏற்படுகிறது.
மற்றும் காகம் ஸ்ரீசனீஸ்வர பகவானின் பிரியமான வாகனம் என்பதால் நாம் காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனீஸ்வரரின் தீய பலன்களில் இருந்து விடுபடலாம்.
அது மட்டுமின்றி, பகவானின் பூரண அருளையும் பெறலாம்.






