search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crow"

    • சிறுமி தாய் கூறியதை கவனிக்காமல் தங்க வளையலை அங்கேயே வைத்துவிட்டார்.
    • 10 நாட்களுக்கு பிறகு உறவினரின் வீட்டுக்கு செல்ல நசீரின் குடும்பத்தினர் புறப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு காப்பட் பகுதியை சேர்ந்த தம்பதி நசீர்-ஷரீபா. சம்பவத்தன்று இவர்கள் தங்களின் உறவினர் ஒருவரது திருமணத்துக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது நசீரின் மகளான ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி பாத்திமா ஹைபா தங்க நகைகள் அணிந்திருந்தார்.

    திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்ததும் அணிந்திருந்த நகைகளை சிறுமி கழற்றினார். அவற்றில் 6 கிராம் எடையுள்ள தங்க வளையலை பேப்பரில் சுற்றி ஒரு பையின் மீது வைத்துள்ளார். நகையை பத்திரமாக வைக்குமாறு சிறுமியிடம் அவரது தாய் கூறியிருக்கிறார்.

    ஆனால் சிறுமி தாய் கூறியதை கவனிக்காமல் தங்க வளையலை அங்கேயே வைத்துவிட்டார். இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு உறவினரின் வீட்டுக்கு செல்ல நசீரின் குடும்பத்தினர் புறப்பட்டனர். அப்போது சிறுமியின் தங்க வளையல் இல்லாதததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    சிறுமியிடம் கேட்டபோது பேப்பரில் சுற்றி பையின் மீது வைத்ததாக கூறியிருக்கிறார். ஆனால் சிறுமி கூறிய இடத்தில் தங்க வளையல் இல்லை. தங்க வளையல் மாயமானதால் சிறுமியின் குடும்பத்தினர் வேதனையடைந்தனர்.

    இந்நிலையில் ஷரீபாவின் உறவினரான சுலைகா மற்றும் பக்கத்து வீட்டு பெண் சாந்தா ஆகியோர் காகம் ஒன்று பிளாஸ்டிக் வளையலை தூக்கிச் சென்றதை பார்த்தனர். அது குறித்து ஷரிபாவிடம் தெரிவித்தனர். ஆகவே தங்களது தங்க வளையலையும் காகம் தூக்கிச் சென்றிருக்கக்கூடும் என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது.

    இதையடுத்து அவரது உறவினர் அகமது கோயா என்பவர், காகம் கூடு கட்டியிருந்த தென்னை மரத்தில் ஏறி பார்த்தார். அப்போது காக்கை கூட்டுக்குள் சிறுமியின் தங்க வளையல் இருந்தது. அதனை அவர் எடுத்து வந்து சிறுமியின் தாயிடம் கொடுத்தார்.

    காணாமல் போன தங்க வளையல் கிடைத்ததால் சிறுமியின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

    • அவர்களுடைய ஆசியால் தான் நாம் இப்பூவுலகில் அமைதியாக வாழ முடிகின்றது.
    • நாம் காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனீஸ்வர பகவானின் பூரண அருளையும் பெறலாம்.

    நாம் தினமும் சாப்பிடும் முன் காகத்ததிற்கு ஒருபிடி உணவாவது வைத்தல் வேண்டும்.

    ஏனெனில் நம்முடைய முன்னோர்களும், பித்ருக்களும், பித்ரு தேவதைகளுமே காகத்தின் வடிவில் வருவதாக ஐதீகம்.

    அவர்களுடைய ஆசியால் தான் நாம் இப்பூவுலகில் அமைதியாக வாழ முடிகின்றது.

    எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காகத்திற்கு தினந்தோறும் உணவு வைப்பது அவசியமாகும்.

    மேலும் காகத்திற்கு உணவிடும் நல்ல பழக்கத்தினால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவ வழி ஏற்படுகிறது.

    மற்றும் காகம் ஸ்ரீசனீஸ்வர பகவானின் பிரியமான வாகனம் என்பதால் நாம் காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனீஸ்வரரின் தீய பலன்களில் இருந்து விடுபடலாம்.

    அது மட்டுமின்றி, பகவானின் பூரண அருளையும் பெறலாம்.

    • நீண்ட நேர முயற்சிக்கு பிறகு தான், கரையும் காகத்தின் கால்களில் கயிறு சுற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
    • தீயணைப்பு வீரர்கள், பெரும் முயற்சி எடுத்து காகத்தின் கால்களில் இருந்த நைலான் கயிற்றை அகற்றினர்.

    நாகர்கோவில்:

    குழந்தைகள் முதல் சிறுவர்-சிறுமிகள் வரை பலரும் காற்று காலத்தில் பட்டம் விட்டு விளையாடுவது வழக்கம். ஆனால் இந்த விளையாட்டு சில நேரங்களில் வினையாக மாறி உயிர்ப்பலியும் வாங்கி வருகிறது. குறிப்பாக பட்டம் உயரத்தில் பறக்க சிலர் பயன்படுத்தும் மாஞ்சா கயிறு தான் உயிர்பலிக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

    மனிதர்கள் மட்டுமே, பட்டம் விடும் நூலால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், காகம் ஒன்றும் அதில் சிக்கி பறக்க முடியாமல் தவிப்புக்கு உள்ளானது. மரக்கிளையில் நின்று கொண்டு அது கரைந்து கொண்டே இருப்பதை பார்த்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து காகத்தை மீட்டனர். இது நடந்திருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் தான்.

    இந்த மாவட்டத்தில் மரங்கள் நிறைந்த இயற்கை எழில் சார்ந்த பகுதிகள் ஏராளமாக உள்ளன. இதனால் பறவை இனங்கள் அதிகமாக காணப்படுகின்றன. நாகர்கோவில் வடசேரி அருகே உள்ள வாத்தியார்பிள்ளை பகுதியில் வசிப்பவர் கோபாலன். இவரது வீட்டின் அருகில் உள்ள மாமரத்தில் இருந்து காகம் ஒன்று விடாமல் கரைந்துகொண்டே இருந்தது. கூடி வாழும் பழக்கம் கொண்ட காகங்கள், அங்கு கூட்டம் சேர்ந்து சக தோழனின் உதவிக்கு வந்தன.

    ஆனால் அவற்றால் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. தொடர்ந்து மரக்கிளையில் இருந்த காகம் கரைந்து கொண்டே இருக்க தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து பார்த்தனர். எதற்காக காகம் கரைகிறது என அவர்களுக்கும் முதலில் தெரியவில்லை.

    நீண்ட நேர முயற்சிக்கு பிறகு தான், கரையும் காகத்தின் கால்களில் கயிறு சுற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர் ஒருவர் சுமார் 50 அடி உயரத்தில் உள்ள மரக்கிளையில் ஏறி, காகத்தை பிடித்தார். அதன் கால்களில் சுற்றப்பட்டிருந்தது, சிறுவர்கள் பட்டம் விட பயன்படுத்தும் நைலான் கயிறு என அப்போது தெரியவந்தது. அது இறுக்கியதால் பறக்க முடியாமல் காகம் கரைந்துள்ளது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், பெரும் முயற்சி எடுத்து காகத்தின் கால்களில் இருந்த நைலான் கயிற்றை அகற்றினர். அதன்பிறகு காகம் சுதந்திர வானில் சிறகடித்துச் சென்றது.

    • திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் பெரிய ஏணி மூலம் மாஞ்சா நூலில் சிக்கிய காகத்தை பத்திரமாக மீட்டனர்.

    திருவொற்றியூர், காலடிப்பேட்டை வன்னியர் தெருவில் உள்ள மரத்தில் அறுந்து தொங்கிய மாஞ்சா நூலில் ஒரு காகம் சிக்கி உயிருக்கு போராடியது.

    இது குறித்து அவ்வழியே சென்ற குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் காகத்தை காப்பாற்ற முயன்றார். ஆனால் அந்த காகம் மரத்தில் சுமார் 35 அடி உயரத்தில் தொங்கியதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

    இதுகுறித்து திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பெரிய ஏணி மூலம் மாஞ்சா நூலில் சிக்கிய காகத்தை பத்திரமாக மீட்டனர். பின்னர் அதற்கு முதல் உதவி சிகிச்சை அளித்து பறக்க விட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆலையில் நெல், அரிசி இருப்பதால் அந்தப் பகுதியில் காகம், குருவி போன்ற பறவைகள் அதிக அளவில் காணப்படும்.
    • மடியில் உட்கார்ந்து முறுக்கு, கடலை போன்றவைகளை வாங்கி காகம் குழந்தை போல் சாப்பிட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மாவடிபண்ணை பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். பட்டப்படிப்பு படித்து விட்டு சொந்தமாக அரிசி ஆலை நடத்தி வருகிறார். அவரது ஆலையில் நெல், அரிசி இருப்பதால் அந்தப் பகுதியில் காகம், குருவி போன்ற பறவைகள் அதிக அளவில் காணப்படும்.

    ஆனால் அவர் உணவு சாப்பிடும்போது காகம், குருவிக்கு வைத்து விட்டு சாப்பிடுவது வழக்கம். அதில் ஒரு காகம் மட்டும் அவருடன் நன்றாக பழகி உள்ளது. அவர் மடியில் உட்கார்ந்து முறுக்கு, கடலை போன்றவைகளை வாங்கி குழந்தை போல் சாப்பிட்டு வருகிறது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத் தளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

    ×