ஆந்திராவில் காகத்தை கட்டி போட்ட கோழிக்கறி கடைக்காரர்: வீடியோ வைரல்

காகத்தின் துயர அலறலை கேட்டு நூற்றுக்கணக்கான காகங்கள் அந்த இடத்தில கூடி பெரும் அளவில் சத்தம் எழுப்பின.இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆந்திராவில் காகத்தை கட்டி போட்ட கோழிக்கறி கடைக்காரர்: வீடியோ வைரல்
Published on

ஆந்திரா:

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் கோழி கறிக்கடைகாரர் ஒருவர் கடைக்கு அருகே சத்தமிட்டுக் கொண்டிருக்கும் காகங்களை அச்சுறுத்துவதற்காக ஒரு காகத்தை பிடித்து கயிற்றில் கட்டி வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கட்டப்பட்ட காகத்தின் துயர அலறலை கேட்டு நூற்றுக்கணக்கான காகங்கள் அந்த இடத்தில கூடி பெரும் அளவில் சத்தம் எழுப்பின.

இந்த சத்தத்தை தாங்க முடியாமல், அப்பகுதியில் உள்ள மற்ற கடைக்காரர்கள் கோழி கறிக்கடைகாரரிடம் காகத்தை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் அவர் காகத்தின் காலில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோழிக்கறி கடைக்காரரின் இந்த செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com