என் மலர்
நீங்கள் தேடியது "பெருமாள் கோவில்"
- அடுத்த 5 அவதாரங்களும் மனிதனின் படிவளர்ச்சியை விவரிக்கின்றன.
- மீனராசியின் ராசிஅதிபதி குரு பகவான் ஆவார்.
மச்ச அவதாரப் பெருமாளை வணங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. உலகில் அதர்மம் அதிகமாகும் பொழுது தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக திருமால் அவதாரம் எடுக்கிறார். எண்ணற்ற அவதாரங்களை திருமால் எடுத்திருந்தாலும் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என்ற 10 அவதாரங்கள் மட்டும் தசவதாரங்கள் என்று பெருமையாக அழைக்கப்படுகின்றன.
இந்த அவதாரங்களை சற்று உற்றுநோக்கும் போது, இதில் ஒளிந்திருக்கும் பரிணாமக் கொள்கையை அறிய இயலும். டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை உயிரிகளில் இருந்து மனிதன் தோன்றியதோடு நின்று விடுகிறது.
அதன் பிறகு மனிதனின் பரிணாமம் தொடங்குகிறது. தசவதாரத்தின் முதல் 5 அவதாரங்கள் உயிர்களில் இருந்து மனிதனாக மாற்றம் அடைந்ததை விவரிக்கின்றன. அடுத்த 5 அவதாரங்களும் மனிதனின் படிவளர்ச்சியை விவரிக்கின்றன. மச்ச அவதாரம் (மீன் நீர் வாழ்வன) பிரளய காலத்தில் மீனாக திருமால் அவதாரம் எடுத்து வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்து வேதங்களை காப்பாற்றியதாக புராணம் கூறுகிறது.
ஜோதிடர்கள் வேதத்தை மறைஎன்றும் கூறுவார்கள். எனவேதான் வேதத்திற்கும், மீன ராசிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கால புருஷ ராசியில் பன்னிரெண்டாமிடமாகிய மறைவு ஸ்தானத்தை குறிக்கும் மீன லக்ன ராசிகாரர்கள் வேதத்திலோ அல்லது வேதத்தின் கண்கள் என போற்றப்படும் ேஜாதிடத்திலோ சிறந்து விளங்குவார்கள்.
மீனராசியின் ராசிஅதிபதி குரு பகவான் ஆவார். இது கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு பாதங்களையும் குறிக்கும் நான்காவது உபய ராசியாகும். பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தின் 4-ம் பாதங்களும் மீன ராசிக்குரியவையாகும். சம ராசியான இது பகலில் வலுப்பெற்றதாகும். எந்த கிரகத்தாலும் மீன ராசியில் பிறந்தவர்கள் பாதிப்படைவதில்லை. அதிர்ஷ்ட காற்று எப்பொழுதும் இவர்கள் பக்கம் வீசிக் கொண்டே தானிருக்கும். குரு பகவான் மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி குரு பகவானே பத்தாம் அதிபதியாகவும் இருப்பது சிறப்பாகும். 10-ம் அதிபதி குரு பகவான் ஆட்சி உச்சம்பெற்று பலமாக அமைந்துவிட்டால் செல்வம், செல்வாக்கு, சமுதாயத்தில் கவுரவமான பதவியினை அடையும் யோகம் உண்டாகும். அது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதில் வல்லவராகவும் வழி நடத்துவதில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.
பேச்சால், வாக்கால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, கல்வி நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, வங்கிப் பணி போன்றவை சிறப்பாக அமையும். 10-ல் குரு, புதன் சேர்க்கை பெற்றாலும் மேற்கூறிய பலன்களே உண்டாகும். மீனராசி லக்னம் குருவின் ஆதிக்கம் பெற்ற ராசியாகும்.
வேதம் ஓதும் ஆந்தணர்கள் சாஸ்திர பண்டிதர்கள், வேதியர்கள், அர்சகர்கள், ஆசிரியர்கள் ஜோதிடர்கள் இவர்களுக்கெல்லாம் காரக கிரகம் குரு பகவான் ஆகும்.
மீன் சந்திரனின் ஆதிக்கம் பெற்ற நீர்வாழ் உயிரினமாகும். அத்தகைய மீன ராசியில் சந்திரன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் தினமே மச்ச அவதார மூர்த்தியான மத்ஸ்ய ஜெயந்தியாகும். அந்த காலக்கட்டம் மீன்களின் இனபெருக்க காலம் என்பது குறிப்பிடத்தக்கது. வேத நாராயண பெருமாள் இந்த மத்ஸ்ய ஜெயந்தி வேதம் நாளில் ஓதும் வேதியர்கள், அந்தணர்கள், ேஜாதிடர்கள், ஆசிரியர்கள் மற்றும் மீனவர்கள் மீனை உண்பவர்கள் அனைவரும் ஆதி திருவரங்கத்தில் உள்ள ரங்கநாத பெருமாளை வணங்க சாபங்களும், தோஷங்களும் நீங்கி உயர்வு ஏற்படும்.
- கோவிலின் மையத்தில் விளக்கொளி பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
- புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருத்தண்கா (தூப்புல்) இடத்தில் அமைந்துள்ளது விளக்கொளி பெருமாள் கோவில். திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 45-வது திருத்தலமாகும். இக்கோவில் மூலவர் விளக்கொளி பெருமாள், தீபப் பிரகாசர், திவ்ய பிரகாசர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி மரகதவல்லி தாயார்.
ஒரு சமயம் பிரம்மதேவர், 'பூலோகத்தில் தனக்கு கோவில் இல்லையே' என்பதை நினைத்து வருந்தினார். இதனால் சிவபெருமானை நினைத்து பிரமாண்ட யாகம் ஒன்றை நடத்தினார். மனைவியுடன் இணைந்துதான் யாகம் நடத்த வேண்டும் என்பது விதி. ஆனால் பிரம்மதேவர், சரஸ்வதி தேவியின் துணையில்லாமல் யாகம் நடத்த தொடங்கினார். இதனால் கோபம் அடைந்த சரஸ்வதி தேவி, யாகத்தை தடுக்க எண்ணி உலகத்தையே இருளில் மூழ்க செய்தார்.
இதையடுத்து பிரம்மதேவர், மகாவிஷ்ணுவின் உதவியை நாடினார். விஷ்ணு பகவான், பிரம்மனின் கோரிக்கையை ஏற்று, ஜோதி வடிவில் காட்சி தந்து யாகம் சிறப்பாக நடக்க அருள்புரிந்தார். எனவே தான் இங்குள்ள இறைவன் 'விளக்கொளி பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். பின்பு பிரம்மதேவர், சரஸ்வதி தேவியையும் சமாதானம் செய்தார்.
இந்த ஆலயம் சோழர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோவிலின் மையத்தில் விளக்கொளி பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். கோவிலில் லட்சுமி, ஹயக்ரீவர், ஆண்டாள், வேதாந்த தேசிகர், ஆழ்வார்கள் ஆகியோருக்கும் சன்னிதி உள்ளன. கோவிலுக்கு வெளியே சரஸ்வதி தீர்த்தம் காணப்படுகிறது.
புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அவ்விழாவில் வேதாந்த தேசிகர், வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு எழுந்தருள்வார். கல்வியில் சிறக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இத்தல பெருமாளை பக்தர்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.
காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
- மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
- இந்த நாளில் வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருப்பதாக ஐதீகம்.
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
இந்த நாளின் மிக முக்கியமான நிகழ்வு விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு ஆகும்.
இந்த நாளில் வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருப்பதாகவும் அதன் வழியே சென்றால் மறுபிறவி இருக்காது என்பதும் நம்பிக்கை.
அதன்படி இன்று (டிசம்பர் 30), அதிகாலை பெருமாள் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட முக்கிய பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வாசல் வழியாக கடந்து சென்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- திருமாலுக்குரிய 108 திவ்ய தேசங்களில் 24-வது தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது.
- . வேண்டுதல் நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது, தலசயனப் பெருமாள் கோவில்.
திருமாலுக்குரிய 108 திவ்ய தேசங்களில் 24-வது தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது. திருவரங்கத்தில் பெரிய வடிவில் சயன கோலத்தில் அருளும் பெருமாள், இத்தலத்தில் பாலகனாக சயன கோலத்தில் காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.
ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும், கருடனுக்கும் பகை ஏற்பட்டது. இந்த பகை நீங்குவதற்காக ஆதிசேஷன் இத்தலம் வந்து தலசயனப் பெருமாளை நோக்கி தவம் இயற்றினார். அவரது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தில் காட்சி அளித்தார். மேலும், அவரை தனது படுக்கையாக ஏற்றுக்கொண்டு, குழந்தை வடிவில் சயன கோலத்தில் காட்சி தருவதாக தல வரலாறு கூறுகிறது.

கோவில் தோற்றம்
கோவில் நான்கு நிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. கருவறையில் தலசயனப் பெருமாள், நந்த வர்த்தன விமானத்துடன் சிறிய வடிவில் சயன கோலத்தில் உள்ளார். அவர் பாதத்திற்கு அருகிலேயே வியாக்ரபாதர் காட்சி தருகிறார். ஆதிசேஷன் தனிச் சன்னிதியில் ஆனந்தாழ்வார் என்ற பெயருடன் காணப்படுகிறார்.
ஆலயத்தில் சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி பிரம்மோற்சவம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, மார்கழி வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திர விழா போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நாக தோஷம்,மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம், நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், எதிரிகளால் ஆபத்து உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
கோவில் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. கொல்லுமாங்குடி ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
- இந்த கோவிலுக்கு வரும்முன் காவிரியில் நீராடிவிட்டு, இங்குள்ள சுவாமியை வழிபடுவது வழக்கம்.
- உள்பிரகாரத்தை சுற்றி வரும்போது ஆண்டாளை தரிசிக்கலாம்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் பிரசித்தி பெற்ற நீலமேகப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் நீலமேகப்பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி தாயாருடன் காட்சி அளிக்கிறார். பராக்கிரம பாண்டியன் மகன் வீரபாண்டியன், மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்ம பல்லவன், முதலாம் பராந்தகச் சோழன் ஆகிய மன்னர்கள் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இந்த ஆலயம் திருவரங்கம் கோவிலை போல ஏழு மதில் சுவர்களை கொண்டுள்ளது.
கோவில் நுழைவுவாசலை கடந்து சென்றதும் கொடிமரம் காணப்படுகிறது. அதன் அருகே, கண்களுக்கு விருந்து படைப்பதாய் நந்தவனம் பூத்துக்குலுங்குகிறது. அதற்கு எதிரே வைகுண்ட ஏகாதசி மண்டபம் உள்ளது. அதன் உள்ளே நுழைந்ததும் நீலமேகப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார். அவர் அருகில் கமலநாயகி தாயார் அமர்ந்த கோலத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். உள்பிரகாரத்தை சுற்றி வரும்போது ஆண்டாளை தரிசிக்கலாம்.
இந்த கோவிலுக்கு வரும்முன் காவிரியில் நீராடிவிட்டு, இங்குள்ள சுவாமியை வழிபடுவது வழக்கம். அதன்படி கோவிலுக்கு செல்லும்முன் காவிரியில் நீராடி விட்டு, இங்குள்ள நீலமேகப் பெருமாளை மனதார வேண்டி வழிபாடு செய்தால் மனதில் வேண்டிய காரியங்கள் நிறைவேறும், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை. திருமணத் தடை உள்ளவர்களும் இங்குள்ள இறைவனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறும். கோவில் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 43 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குளித்தலையில் நீலமேகப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.
- ரோகிணி தேவி, சந்திரனை மணந்து கொள்வதற்காக பாண்டவதூத பெருமாளை வணங்கி வழிபாடு செய்தாள்.
- ஞான சக்தியையும், விஸ்வரூப தரிசனத்தையும் காட்டிய பெருமாளை வழிபாடு செய்ய, ரோகிணி தேவி இங்கு தினமும் சூட்சும வடிவில் வருவதாக ஐதீகம்.
27 நட்சத்திரங்களில் ஒருவரான ரோகிணி தேவி, சந்திரனை மணந்து கொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பாடகம் பகுதியில் அமைந்துள்ள பாண்டவதூத பெருமாளை வணங்கி வழிபாடு செய்தாள். பின்பு ரோகிணி தேவி, சந்திரனை மணவாளனாக அடையும் பேறு பெற்றாள்.
சந்திரன், 27 நட்சத்திர தேவியர்களை மணம்முடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டபோதும், முதன் முதலில் ஞான சக்தி பெற்ற ரோகிணியையும், அடுத்து அக்னி சக்தி பெற்ற கார்த்திகையையும் மணமுடித்த பின்பே ஏனைய நட்சத்திர தேவியர்களை மணந்ததாக வரலாறு கூறுகிறது.
ஞான சக்தியையும், விஸ்வரூப தரிசனத்தையும் காட்டிய பெருமாளை வழிபாடு செய்ய, ரோகிணி தேவி இங்கு தினமும் சூட்சும வடிவில் வருவதாக ஐதீகம். எனவே, ரோகிணி நட்சத்திரக்காரர்கள் புதன், சனிக்கிழமைகளிலும், அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளிலும் இங்கு வந்து அர்ச்சனை செய்தால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.
- பாண்டவர்கள் சார்பில் பகவான் கிருஷ்ணர், கவுரவர்கள் இருக்கும் அஸ்தினாபுரத்துக்கு தூது சென்றார்.
- ஆலயம் கிழக்கு நோக்கிய நிலையில் மூன்று நிலை ராஜகோபுரங்களுடன் காட்சியளிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பாடகம் பகுதியில் அமைந்துள்ளது, பாண்டவதூத பெருமாள் கோவில். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் 108 திவ்யதேச வைணவ தலங்களில் 49-வது கோவிலாகும். இங்கு, பாண்டவர்களுக்காக துரியோதனிடம் தூது சென்ற கோலத்தில் கிருஷ்ண பகவான் 25 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
தல வரலாறு
மகாபாரத காலத்தில், பாண்டவர்களில் மூத்தவரான தருமர், கவுரவர்கள் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் தன் செல்வங்களையும், நாட்டையும் இழந்தார். பின்பு கவுரவர்கள், பாண்டவர்களை 13 வருடம் வன வாசம் செல்ல செய்தனர். வனவாசம் சென்று திரும்பிய நிலையில் பாண்டவர்கள், ஐவருக்கும் 5 ஊர் இல்லையென்றாலும், 5 வீடாவது தர வேண்டும் என்று கிருஷ்ணரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து பாண்டவர்கள் சார்பில் பகவான் கிருஷ்ணர், கவுரவர்கள் இருக்கும் அஸ்தினாபுரத்துக்கு தூது சென்றார். பாண்டவர்களின் பலமே கிருஷ்ணர்தான் என்பதை அறிந்திருந்த துரியோதனன், அவரை அவமானப்படுத்த எண்ணினான். இதற்காக, அஸ்தினாபுரம் அரண்மனையில் கிருஷ்ணர் அமர்வதற்காக ஆசனம் அமைக்கப்பட்டது. அதன் முன்பாக ஆழமான பள்ளம் தோண்டப்பட்டு, அதன்மேல் பந்தலைப் போட்டு மறைத்தனர்.
அஸ்தினாபுரம் அரண்மனைக்கு வந்த கிருஷ்ண பகவான், தனக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார். உடனே, கிருஷ்ணர் தான் அமர்ந்த ஆசனத்துடன் பள்ளத்தில் விழுந்தார். அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்த துரியோதனன், அவரை கொல்ல காவலர்களிடம் உத்தரவிட்டார். உடனே அவரைத் தாக்க சில மல்லர்கள் முயன்றனர்.
மல்லர்கள் பள்ளத்திற்குள் இறங்கியவுடன் கிருஷ் ணர் அவர்களை அழித்து, தன் விஸ்வரூப தரிசனத்தை காட்டி ஒங்கி உயர்ந்து நின்றார். அதைப் பார்த்த அவையில் இருந்த அனைவருமே மிரண்டு போயினர். பாண்டவர்களுக்காக தூது சென்றதால் கிருஷ்ணர், 'பாண்டவதூத பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
பாரதப் போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பிறகு, பரீட்சித்து மகாராஜாவின் மகனான ஜனமேஜயர் என்ற அரசன், வைசம்பாயனர் என்ற மகரிஷியிடம் பாரதக் கதைகளை கேட்டு வந்தார். அப்பொழுது அரசனுக்கு கிருஷ்ண பகவானின் விஸ்வரூப தரிசனம் காண வேண்டும் என்ற ஆவல் வந்தது. அவர் மகரிஷியிடம், தனக்கு கிருஷ்ண பகவானின் விஸ்வரூபத்தை காண வேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகளை கூறும்படியும் வேண்டினார்.
அந்த மகரிஷியின் அறிவுரையின்படி, காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார், அரசர். தவத்தின் பயனாக பெரு மாள், தன் பாண்டவதூது கோலத்தை இத்தலத்தில் அருளினார். மேலும், திருதராஷ்டிரனுக்கும் கண நேரம் கண் பார்வை தந்து தனது விஸ்வரூப தரிசனத்தை இத்தலத்தில் காட்டி அருளினார் என்று கூறப்படுகிறது.

கோவில் தோற்றம், கொடிமரம், பலிபீடம்
கோவில் அமைப்பு
ஆலயம் கிழக்கு நோக்கிய நிலையில் மூன்று நிலை ராஜகோபுரங்களுடன் காட்சியளிக்கிறது. இக்கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு சோழர்கள், விஜயநகர பேரரசர்களால் புனரமைக்கப்பட்டதாகவும், குலோத்துங்க சோழன், ராஜராஜ சோழன் ஆகியோரின் காலத்தில் கோவிலின் சுற்றுச்சுவர் உள்ளிட்டவைகள் எழுப்பப்பட்டு, இரண்டு குளங்கள் அமைக்கப்பட்டதாகவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் பாண்டவதூத பெருமாள் 'தூத ஹரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
கோவில் ராஜகோபுரம் நுழைவுவாசலில் பழமையான அற்புதமான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தாண்டி பலிபீடம், கொடிமரம் காணப்படு கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றான இக்கோலிலில் மூலவர் பாண்டவ தூதர் 25 அடி உயரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் புன்னகையோடு காட்சி தருகிறார்.
மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அமர்ந்த நிலையில் காட்சி தருவது இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத அற்புதமான காட்சியாகும். வலது காலை மடக்கி, அர்த்த பத்மாசன கோலத்தில் காட்சி தருகிறார். மற்ற கோவில்களைப் போல் நான்கு கரங்களுடன் இல்லாமல், இரண்டு திருக்கரங்களுடனேயே அருள்பாலிக்கிறார். வலது கரம் அபய முத்திரை காட்டியும், இடது கரம் வரதமுத்திரை காட்டியும் உள்ளது. பெருமாளை குனிந்து வணங்கும்போது மெய் சிலிர்ப்பதை உணர முடிகிறது.
இத்தலத்தில் திருமாலின் உற்சவர் சிலைகளில் ஸ்ரீதேவி பூதேவிக்கு பதிலாக ருக்மணி, சத்தியபாமா இருவரும் எழுந்தருளியுள்ளனர். ஆண்டாள் நாச்சியார், நர்த்தன கண்ணன், சுதர்சனர் ஆகிய உற்சவ மூர்த்திகளையும் கருவறையில் காணலாம்.
இக்கோவிலில் உள்ள அர்த்த மண்டபத்தில் ஆழ்வார்கள், ராமானுஜர் உள்ளிட்டோரை தரிசிக்கலாம். மூலவருக்கு தெற்குபுறம் ருக்மணிக்கு தனிச் சன்னிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாரின் பின்புறத்தில் தனிச் சன்னிதியில் நரசிம்மர் காட்சி அளிக்கிறார். கோவிலின் வடகிழக்கு பகுதியில் மத்ஸ்ய தீர்த்தம் உள்ளது. பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
திருவிழாக்கள்
கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோடி ஏகாதசி, பங்குனி உத்திரம், கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம் ஆகிய விழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் கூடவே இருந்து உதவி செய்தது போல், இத்தலத்து இறைவனை வணங்கினால் கஷ்டப்படும் பக்தர்களை கை கொடுத்து காப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது. கிருஷ்ணன், இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலமாக இருப்பதால் இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்ப ர்களின் 72,000 அங்கநாடிகளும் துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
பாண்டவதூத பெருமாளை வணங்குபவர்களுக்கு காரியத் தடை, திருமணத் தடை நீங்குவதோடு ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக் தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
காஞ்சிபுரத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு ஏராளமான பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன.
- கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாக புராணம் கூறுகிறது.
- 7 அமாவாசையில் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டால் வேண்டியதை வேண்டியவாறு அருளக்கூடிய பெருமாளாக அருள்பாலிக்கிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது.
தல வரலாறு
முன்பொரு சமயம் சிவபெருமான் திரிபுர அசுரர்களை போரிட்டு அழிக்க தேவர்கள் தேர் ஒன்றினை படைத்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சூரிய, சந்திரர் தேரின் இரு சக்கரங்களாகவும், பூமி தேரின் தட்டச்சாகவும், நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், மேருமலை வில்லாகவும், ஆதிசேஷன் நாணாகவும், பிரம்மன் தேர் ஓட்டுபவராகவும், விஷ்ணு அம்பாகவும் இருந்து உதவினர் என்கிறது புராண நூல்கள்.
இதன் மூலம், விஷ்ணு அம்பாக (சரமாக) இருந்து போருக்கு உதவியதால் விஷ்ணு இத்தலத்தில் "சரநாராயணப்பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம், திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் திரிபுரம் எரிக்கும் திருவிழா நாளில், கருட வாகனத்தில் பெருமாள் சரத்துடன் எழுந்தருளி சரம் கொடுக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்குள்ள மூலவர் சரநாராயணப்பெருமாள் முழுவதும் சாளக்கிராமத்தால் ஆனவர்.
இங்கு ஹேமாம்புஜவல்லி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. ேஹமாம்புஜவல்லி தாயாருக்கு செங்கமலத்தாயார், பொற்தாமரைகொடியாள் என சிறப்பு பெயர்கள் உண்டு. ஆண்டுதோறும் பங்குனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, சேர்த்தி உற்சவத்தில் பெருமாள் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
மாதந்தோறும் நடைபெறும் உத்திர நட்சத்திரத்தில் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆடி வெள்ளிக்கிழமைகளில் பூவாலங்கி சேவையிலும் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக தவத்தால் பிறந்த ஹேமாம்புஜவல்லி தாயார் பெருமாளை திருமணம் செய்துள்ளதால், இக்கோவிலில் வேண்டுவோருக்கு திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு, கடன் நிவர்த்தி, சகல ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. கடன் நிவர்த்தி, ஐஸ்வர்யங்கள் பெருக வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை நடக்கிறது.
திருமாலின் திருத்தலங்களில், இக்கோவிலில் தான் நரசிம்மர், சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது ஒரு மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.
700 ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர், திருவந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. மற்ற கோவில்களில் கைகூப்பி நிற்கும் கருடாழ்வார், இங்கு கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும் இங்குள்ள கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாக புராணம் கூறுகிறது. இங்குள்ள பெருமாள் உப்பிலியப்பன் சீனிவாசனைப்போல், மார்க்கண்டேய மகரிஷி மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
அருகில் மிருகண்ட மகரிஷியின் மகன் மார்க்கண்டேய மகரிஷி. புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் திருப்பதி செல்ல முடியாதவர்கள், இங்குள்ள பெருமாளை வழிபாடு செய்யலாம்.
இப்பெருமாளை 7 அமாவாசையில் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டால் வேண்டியதை வேண்டியவாறு அருளக்கூடிய பெருமாளாக அருள்பாலிக்கிறார். பெரிய திருவடியாகிய கருடாழ்வார் இத்தலத்தில் கையைக் கட்டிக்கொண்டு சேவக பாவத்தில் காட்சி தருகின்றார்.
- அண்டத்தைப் பாதுகாப்பதற்காக விஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இதுவாகும்.
- கலியுகத்தின் இறுதியில் தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும் எடுக்கப்படும் பத்தாவது அவதாரம்.
பெருமாளின் அவதாரங்கள் என்பவை பூமியில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும், பக்தர்களைக் காக்கவும் பகவான் விஷ்ணு எடுக்கும் வடிவங்கள் ஆகும். விஷ்ணுவின் பத்து முக்கிய அவதாரங்கள் தசாவதாரங்கள் என அழைக்கப்படுகின்றன.
அதன் விவரம் வருமாறு:-
1. மச்சாவதாரம், 2. கூர்மாவதாரம், 3. வராக அவதாரம், 4. நரசிங்க அவதாரம், 5. வாமன அவதாரம், 6. பரசுராம அவதாரம், 7. ராம அவதாரம், 8. பலராம அவதாரம், 9. கிருஷ்ண அவதாரம், மற்றும் 10. கல்கி அவதாரம்.
மச்ச அவதாரம் (மீன்):
அண்டத்தைப் பாதுகாப்பதற்காக விஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இதுவாகும்.
கூர்ம அவதாரம் (ஆமை):
பிரபஞ்சம் புதைந்திருந்தபோது அதைப் பாதுகாக்கவும், சமுத்திர மந்தனத்தின் போது மந்தர மலையைத் தாங்கவும் இந்த அவதாரம் எடுக்கப்பட்டது.

வராக அவதாரம் (பன்றி):
பூமியை இரண்யாட்சன் என்ற அரக்கனிடம் இருந்து மீட்டெடுத்த அவதாரம் இது.
நரசிங்க அவதாரம் (சிங்க-மனிதன்):
இரண்யகசிபு என்ற அரக்கனை வதம் செய்து பக்தன் பிரகலாதனைக் காத்த அவதாரம்.
வாமன அவதாரம் (குள்ள உருவம்):
மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்து, உலகை மூன்று அடிகளால் அளந்த குள்ள உருவம் எடுத்த அவதாரம்.
பரசுராம அவதாரம்:
பிராமணர்களைக் கொன்ற சத்திரியர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய அவதாரம்.
ராம அவதாரம்:
தீய சக்திகளை அழித்து, அறநெறியுடன் வாழ்ந்த மனித உருவம் எடுத்த அவதாரம்.
பலராம அவதாரம்:
பலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த அவதாரம்.
கிருஷ்ண அவதாரம்:
கீதை போதனைகளை உலகுக்கு வழங்கிய, அன்பையும் பக்தியையும் போதித்த அவதாரம்.
கல்கி அவதாரம்:
கலியுகத்தின் இறுதியில் தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும் எடுக்கப்படும் பத்தாவது அவதாரம்.
- விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர்:
அவினாசி அருகே மேற்குபதி அபிஷேகபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அபிஷேகவல்லி உடனமர் ஐராவதீஸ்வரர் கோவில், ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகுராஜாப்பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவில்களின் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நடந்தது. முன்னதாக இந்த விழா விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. இதையடுத்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், 108 சங்க பூஜை, மகாவிஷ்ணு ஹோமம், யாக பூஜை வழிபாடு மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் 5 கிராமபொதுமக்கள் செய்து இருந்தனர்.
- ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம்.
- திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் உள்ளது, வேதநாராயணன் கோவில்.
திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில், ஏழுமலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 'ஸ்ரீவாரி பாதம்' என்று அழைக்கப்படும் அந்த இடத்தில், திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில், மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.
உடுப்பியில் உள்ள கிருஷ்ணருக்கு, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் புடவை சாத்தி வழிபாடு செய்கிறார்கள்.
ஆந்திர மாநிலம் பத்ராசலத்தில் உள்ள ராமர் கோவிலில் உள்ள ராமபிரான், தனது கையில் சங்கு மற்றும் சக்கரம் தாங்கி காட்சியளிக்கிறார்.
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் வானமாமலை பெருமாள் கோவில் இருக்கிறது. இங்குள்ள பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
சென்னையை அடுத்துள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் சிவபெருமானைப் போலவே மூன்று கண்களைக் கொண்ட பெருமாளை வழிபாடு செய்யலாம். இங்குள்ள மூலவரான நரசிம்மருக்கு மூன்று கண்கள் உள்ளன.
திருக்கண்ணபுரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன், பத்மாசனத்தில் அமர்ந்தபடி, கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியபடி காட்சியளிக்கிறார், கண்ணபுரத்தான்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சிவன் மற்றும் பெருமாள் கோவில் இது மட்டுமே.
திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் உள்ளது, வேதநாராயணன் கோவில். இங்குள்ள பெருமாள் நான்கு வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவருக்கு 'வேதநாராயணன்' என்று பெயர்.
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர், அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். இவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தருவார்.
கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில், ரங்கநாதருக்கு குடைபிடித்தபடி இருக்கும் ஆதிசேஷனுக்கு ஏழு தலைகள் இருக்கின்றன.
திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன்கோவில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோவில்களிலும் தாயாருக்கு சன்னிதி இல்லை.

பொதுவாக பெருமாள், ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோவிலில், பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதீகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
நெல்லை அருகே உள்ள கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.
மாமல்லபுரம் தல சயனப் பெருமாள் கோவிலில் பெருமாள், ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.
காஞ்சி உலகளந்தபெருமாள் திருக்கோவிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன.
- சென்னகேசவப் பெருமாள், பெண் உருவில் இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.
- இந்த ஆலயத்தில் 42 அடி உயரம் கொண்ட தூண் நிறுவப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது, பேளூர் என்ற இடம். இது ஹோய்சாலப் பேரரசின் ஆட்சி காலத்தில் தலைநகராக இருந்த ஊர் ஆகும். இங்கு சென்னகேசவர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் முன் காலத்தில் 'விஜயநாராயணர் கோவில்' என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. திருமாலை முக்கிய கடவுளாகக் கொண்டிருக்கும் இந்த ஆலயம், வைணவர்களின் வழிபாட்டு யாத்திரையில் சிறப்பிடம் பெறுகிறது.
இந்த ஆலயம் ஹோய்சால அரசர்களில் ஒருவரான விஷ்ணுவர்த்தனன் என்பவரால், கி.பி. 1117-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோவிலின் மூலவரான கேசவநாராயணர், கல்லால் ஆன பீடத்தையும் சேர்த்து 15 அடி உயரம் கொண்டவர். சென்னகேசவப் பெருமாள், பெண் உருவில் இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.
இந்த ஆலயம் மூன்று வாசல்களைக் கொண்டுள்ளது. இந்த ஆலயம் அதன் சிற்ப வேலைப்பாடுகளினால் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இந்த ஆலயம் இரண்டு கர்பக்கிரகத்துடன் விளங்குகிறது. இரண்டாவது கர்பக்கிரகம் பின்னாளில் இணைக்கப்பட்டுள்ளது. இதிலும் கேசவநாராயணரே மூலவராக இருக்கிறார். இதனை, விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலாதேவி கட்டியிருக்கிறார்.
இந்த ஆலயத்தில் 42 அடி உயரம் கொண்ட தூண் நிறுவப்பட்டுள்ளது. இதனை 'மகாஸ்தம்பம்' என்றும், 'கார்த்திகை தீபோற்சவ ஸ்தம்பம்' என்றும் அழைக்கிறார்கள். சென்னகேசவப் பெருமாள் கோவிலில் பக்தர்களை கவர்ந்திருக்கும் சிறப்பம்சம் கொண்டதாக இந்த தூண் விளங்குகிறது. ஏனெனில் இந்த தூணுக்கு அடித்தளம் இல்லை. ஒரே கல்லால் செய்யப்பட்ட மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தத் துண், அதன் அடிப்பாக மேடையை தொடாமல் உள்ளது. இதனை இடையில் ஒரு தாளையோ, துணியையோ விட்டால், மறு மூலையில் அதனை எடுக்க முடியும். இந்த ஸ்தம்பம், பீடத்தோடு ஒட்டாமல் நிற்பது புரியாத புதிராகவே இருக்கிறது.






