என் மலர்tooltip icon

    வழிபாடு

    ரோகிணி தேவி வழிபட்ட பாண்டவதூத பெருமாள்
    X

    ரோகிணி தேவி வழிபட்ட பாண்டவதூத பெருமாள்

    • ரோகிணி தேவி, சந்திரனை மணந்து கொள்வதற்காக பாண்டவதூத பெருமாளை வணங்கி வழிபாடு செய்தாள்.
    • ஞான சக்தியையும், விஸ்வரூப தரிசனத்தையும் காட்டிய பெருமாளை வழிபாடு செய்ய, ரோகிணி தேவி இங்கு தினமும் சூட்சும வடிவில் வருவதாக ஐதீகம்.

    27 நட்சத்திரங்களில் ஒருவரான ரோகிணி தேவி, சந்திரனை மணந்து கொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பாடகம் பகுதியில் அமைந்துள்ள பாண்டவதூத பெருமாளை வணங்கி வழிபாடு செய்தாள். பின்பு ரோகிணி தேவி, சந்திரனை மணவாளனாக அடையும் பேறு பெற்றாள்.

    சந்திரன், 27 நட்சத்திர தேவியர்களை மணம்முடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டபோதும், முதன் முதலில் ஞான சக்தி பெற்ற ரோகிணியையும், அடுத்து அக்னி சக்தி பெற்ற கார்த்திகையையும் மணமுடித்த பின்பே ஏனைய நட்சத்திர தேவியர்களை மணந்ததாக வரலாறு கூறுகிறது.

    ஞான சக்தியையும், விஸ்வரூப தரிசனத்தையும் காட்டிய பெருமாளை வழிபாடு செய்ய, ரோகிணி தேவி இங்கு தினமும் சூட்சும வடிவில் வருவதாக ஐதீகம். எனவே, ரோகிணி நட்சத்திரக்காரர்கள் புதன், சனிக்கிழமைகளிலும், அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளிலும் இங்கு வந்து அர்ச்சனை செய்தால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

    Next Story
    ×