என் மலர்
நீங்கள் தேடியது "பெருமாள் சிலை"
- அண்டத்தைப் பாதுகாப்பதற்காக விஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இதுவாகும்.
- கலியுகத்தின் இறுதியில் தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும் எடுக்கப்படும் பத்தாவது அவதாரம்.
பெருமாளின் அவதாரங்கள் என்பவை பூமியில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும், பக்தர்களைக் காக்கவும் பகவான் விஷ்ணு எடுக்கும் வடிவங்கள் ஆகும். விஷ்ணுவின் பத்து முக்கிய அவதாரங்கள் தசாவதாரங்கள் என அழைக்கப்படுகின்றன.
அதன் விவரம் வருமாறு:-
1. மச்சாவதாரம், 2. கூர்மாவதாரம், 3. வராக அவதாரம், 4. நரசிங்க அவதாரம், 5. வாமன அவதாரம், 6. பரசுராம அவதாரம், 7. ராம அவதாரம், 8. பலராம அவதாரம், 9. கிருஷ்ண அவதாரம், மற்றும் 10. கல்கி அவதாரம்.
மச்ச அவதாரம் (மீன்):
அண்டத்தைப் பாதுகாப்பதற்காக விஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இதுவாகும்.
கூர்ம அவதாரம் (ஆமை):
பிரபஞ்சம் புதைந்திருந்தபோது அதைப் பாதுகாக்கவும், சமுத்திர மந்தனத்தின் போது மந்தர மலையைத் தாங்கவும் இந்த அவதாரம் எடுக்கப்பட்டது.

வராக அவதாரம் (பன்றி):
பூமியை இரண்யாட்சன் என்ற அரக்கனிடம் இருந்து மீட்டெடுத்த அவதாரம் இது.
நரசிங்க அவதாரம் (சிங்க-மனிதன்):
இரண்யகசிபு என்ற அரக்கனை வதம் செய்து பக்தன் பிரகலாதனைக் காத்த அவதாரம்.
வாமன அவதாரம் (குள்ள உருவம்):
மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்து, உலகை மூன்று அடிகளால் அளந்த குள்ள உருவம் எடுத்த அவதாரம்.
பரசுராம அவதாரம்:
பிராமணர்களைக் கொன்ற சத்திரியர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய அவதாரம்.
ராம அவதாரம்:
தீய சக்திகளை அழித்து, அறநெறியுடன் வாழ்ந்த மனித உருவம் எடுத்த அவதாரம்.
பலராம அவதாரம்:
பலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த அவதாரம்.
கிருஷ்ண அவதாரம்:
கீதை போதனைகளை உலகுக்கு வழங்கிய, அன்பையும் பக்தியையும் போதித்த அவதாரம்.
கல்கி அவதாரம்:
கலியுகத்தின் இறுதியில் தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும் எடுக்கப்படும் பத்தாவது அவதாரம்.
- கோவில் கட்டப்பட்ட போது இருந்த கிராம பஞ்சாயத்து சம்மந்தமான தகவல்கள் தங்கம் மற்றும் செம்பு தகடுகளில் பதிக்கப்பட்டு இருந்தது.
- வரதராஜ பெருமாள் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது
திருப்பதி:
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
இதனால் நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து வருகின்றனர். காளஹஸ்தி சிவன் கோவிலுடன் இணைந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
நேற்று புனரமைப்பு பணியின் போது மூலவர் வரதராஜ பெருமாள் சிலை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்றினர்.
அப்போது மூலவர் சிலையின் அடிப்பகுதியில் 37 தங்க தகடுகள், 3 லட்சுமி உருவம் பதித்த தங்க நாணயங்கள், 7 செம்பு தகடுகள் என ஏராளமான நவரத்தின கற்கள் இருந்தன.
இந்த நவரத்தின கற்கள் விலை உயர்ந்தது என அதிகாரிகள் கூறினர்.
இதனை கண்டு திடுக்கிட்ட அதிகாரிகள் அவற்றை மீட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கோவில் கட்டப்பட்ட போது இருந்த கிராம பஞ்சாயத்து சம்மந்தமான தகவல்கள் தங்கம் மற்றும் செம்பு தகடுகளில் பதிக்கப்பட்டு இருந்தது.
தங்கம், நவரத்தின கற்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இதையடுத்து மூலவர் வரதராஜ பெருமாளுக்கு பூஜை செய்யப்பட்டு. பாலாலய பிரகாரத்தில் வைக்கப்பட்டது.
வரதராஜ பெருமாள் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது. பணிகள் முடிந்த பிறகு கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவித்தனர்.
- பெருமாள் சிலை சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் வாசல் கதவு திறக்கப்பட்டது.
சென்னை:
சென்னை திருவொற்றியூர் கல்யாண வரதராஜர் பெருமாள் கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பவள வண்ண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
கருட சேவை நிகழ்ச்சியின்போது பல்லக்கை தூக்கியபோது அதன் தண்டு உடைந்து பெருமாள் சிலை கீழே சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருமாள் சிலை சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பட்டாச்சாரியார் முரளிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பெருமாள் சிலை சரிந்ததும் உடனடியாக கோவில் வாசல் மூடப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் வாசல் கதவு திறக்கப்பட்டது.
மீண்டும் கருட வாகனத்தில் எழுந்தருளி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- கோவில் கோசலராமன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.
- கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது நகலூர் கிராமம். இங்கு கலியுக ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கோசலராமன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.
நகலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தனர். இந்த கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோசலராமன் திடீரென கோவிலுக்குள் சென்று மூலவரான ரங்கநாதர் சாமி சிலை மீது அமர்ந்து தான் கடவுள் என்று கூறிக்கொண்டு தனக்கு பூஜை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
அதனைத்தொடர்ந்து அங்கு இருக்கும் பூசாரி ஒருவர் கோசலராமன் மீது பாலை ஊற்றி பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.






