search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mystery"

    • 2 0 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருந்தது.
    • சில நாட்களுக்கு முன்பு வாழப்பாடியை சேர்ந்த அமுதாவுக்கு 2 ஆயிரம் சதுர அடி உள்ள வீட்டை விற்க 11.67 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி 4 ரோட்டை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. காந்தி. இவரது மகன் சதீஷ் (வயது 42), விவசாயி . இவரது மனைவி வனிதா (28), தனியார் பள்ளி ஆசிரியர், இவர்களுக்கு சர்வேஷ் (8) என்ற மகன் உள்ளார்.

    ரூ.20 லட்சம் கடன்

    இந்த நிலையில் சதீசுக்கு 2 0 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு வாழப்பாடியை சேர்ந்த அமுதாவுக்கு 2 ஆயிரம் சதுர அடி உள்ள வீட்டை விற்க 11.67 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் கழுத்து மற்றும் கை அறுக்கப்பட்ட நிலையில் சதீஷ் இறந்து கிடந்தார். இதனை பாத்த மனைவி வனிதா கதறி துடித்தார். இதனை அறிந்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

    தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஆத்தூர், கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரித்தனர். மேலும் மோப்ப நாய் லில்லி சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்த மோப்ப நாய் கடம்பூர் பிரிவு ரோடு வரை சென்று திரும்பியது. தடயவியல் நிபுணர்கள் கைேரகை பதிவுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    பின்னர் கெங்கவல்லி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வீரகனூர் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சதீஷ் சாவில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு-

    பரபரப்பு தகவல்கள்

    கடன் தொல்லையில் தவித்த சதீஷ் கெங்கவல்லியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விஷம் கேட்டதும், அந்த கடையில் விஷம் இல்லை என்று கடையில் இருந்தவர் கூறிய நிலையில் அருகில் உள்ள கடைக்கு சென்று புதிதாக கத்தி வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றதும் தெரிய வந்தது.

    மேலும் நாற்காலியில் அமர்ந்த படியே கை நரம்பு மற்றும் கழுத்தை அறுத்ததற்கான ஆதாரங்களும் இருப்பதால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அவரது சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.

    • பரமத்திவேலூர் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
    • விவசாயி இறந்துகிடந்தது குறித்து வீட்டின் உரிமையாளர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் அருகே தாளக்கரையில் சுதா என்பவரது வீட்டில் விவசாயி செல்வராஜ் என்பவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். தகவல் அறிந்த செல்வராஜின் மனைவி மற்றும் அவர்களது உறவினர்கள் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

    புகாரின் அடிப்படையில் நெல்லூர் போலீசார் சுதாவை கைது செய்து செல்வராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் செல்வராஜ் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்

    • மனைவியை பிரிந்த தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 45), தொழிலாளி. கருத்து வேறுபாடு காரணமாக 7 வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று பசும்பொன் தெருவில் உள்ள அவரது வீட்டில் செல்வகுமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    வத்திராயிருப்பு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வகுமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாபநாசத்தில் தாய் வீட்டிற்கு சென்ற கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    பாபநாசம்:

    பாபநாசம் நகர சுத்தி தொழிலாளர் காலனியில் வசித்து வந்தவர் முருகானந்தம் (வயது35). கூலித்தொழிலாளி. இவர் மனைவி மேரி (27). கணவன்-மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் முருகானந்தம் அதே தெருவில் வசித்து வரும் தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    இந்நிலையில் அவரது மனைவி மேரி கணவர் முருகானந்தம் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பாபநாசம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம் பிரேதத்தை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் அம்மாப்பேட்டை நர்சிங் மாணவி மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த மாறன் (வயது 53). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர்.

    இவர்களது 4-வது மகள் சங்கவி (16) சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதனால் சாந்தி தனது 2 மகள்களுடன் சேலம் அம்மாப்பேட்டையில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவி சங்கவி மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர் அவரது உடலை சொந்த ஊருக்கு சாந்தி எடுத்து சென்றார். அப்போது உறவினர்களிடம் மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்ததாக கூறினார்.

    ஆனால் அதனை நம்பாத சாந்தியின் கணவரின் உறவினர்கள் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அம்மாப்பேட்ட போலீசார் தற்கொலை வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மாணவியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையில் முடிவில் அவரை கொன்று தூக்கில் தொங்க விட்டனரா? அல்லது அவரே தூக்கில் தொங்கினாரா? என்பது தெரியவரும் என்றும் ஏற்கனவே 2 முறை மாணவி தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சாந்தியின் கணவரின் உறவினர்கள் சாந்தி மகளை கொன்று விட்டு நாடகமாடுகிறார் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இந்த வழக்கில் மேலும் பரபரப்பு நீடித்து வருகிறது.

    நாட்டறம்பள்ளி அருகே நேற்று முன்தினம் கொலையான பெண்ணின் கள்ளக்காதலன் மர்மமான முறையில் தூக்கில் இறந்து கிடந்தார்.

    நாட்டறம்பள்ளி:

    வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (வயது 50), கூலி தொழிலாளி. இவரது கணவர் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். மற்றொருவர் படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை விறகு எடுத்து வர அருகில் உள்ள அக்ராவரம் மலைப்பகுதிக்கு வளர்மதி சென்றார்.

    வெகுநேரம் ஆகியும் வளர்மதி திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மலைப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வளர்மதி பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து அவர்கள் நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வளர்மதியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வளர்மதிக்கு அதேபகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவலிங்கம் (வயது40) என்பவருடன் கள்ளதொடர்பு இருந்தது தெரியவந்தது. அவருக்கு வளர்மதி கொலையில் தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை போலீஸ் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அதே கிராமத்தில் உள்ள ஒரு மாமரத்தில் சிவலிங்கம் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வளர்மதியை கொன்று விட்டு இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? சிவலிங்கம் எப்படி இறந்தார் என்பது குறுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி அருகே திருமணமான 6 நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருநாளுர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 34). தஞ்சாவூர் மாவட்டம் வலப்பிரமன்காட்டை சேர்ந்த அசோகன் மகள் நித்யா (24). இவர் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கடந்த 12-ந்தேதி திருநாளுரில் திருமணம் நடைபெற்றது. 

    இதையடுத்து நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தனர். அப்போது கணவன், மனைவிக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து சுந்தர்ராஜனின் உறவினர்கள் நித்யாவின் தந்தைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். 

    உடனே வலப்பிரமன்காட்டில் இருந்து நித்யாவின் தந்தை அசோகன், தாய், தம்பி ஆகியோர் திருநாளுருக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று அதிகாலை வந்தனர். அவர்கள் சுந்தர்ராஜன், நித்யா ஆகியோரை சமாதானம் செய்தனர். தொடர்ந்து நித்யாவை தங்களுடன் வலப்பிரமன் காட்டுக்கு அனுப்பி வைக்கும்படி அசோகன், சுந்தர்ராஜனிடம் கூறினார். இதையடுத்து சுந்தர்ராஜன், நித்யா ஒரு மோட்டார் சைக்கிளிலும், நித்யாவின் தந்தை அசோகன், தாய், தம்பி ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் திருநாளுரில் இருந்து வலப்பிரமன்காட்டிற்கு புறப்பட்டு வந்தனர். 

    அங்கு மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி தனது வீட்டிற்குள் சென்ற நித்யா சிறிது நேரத்தில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக நித்யாவை சிகிச்சைக்காக பேராவூரணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், நித்யா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து நித்யாவின் உடல் திருநாளுரில் உள்ள சுந்தர்ராஜன் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந் ததும் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் நித்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து நித்யாவின் தந்தை அசோகன் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யா மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 6-வது நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்ததால் அறந்தாங்கி ஆர்.டி.ஓ. பஞ்சவர்ணமும் விசாரணை நடத்தி வருகிறார். 

    கணவர்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் நித்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னர் தான் நித்யா எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும். திருமணமான 6 நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    3 திருமணம் செய்த டிரைவர் கள்ளக்காதலி வீடு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாராபுரம்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரிச்சி பாளையத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). டிரைவர். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா சென்றார். அங்கு ரெமோ என்ற பெண்ணை திருமணம் செய்தார். 2 குழந்தை கள் உள்ளனர்.

    இந்நிலையில் மனைவியை விட்டு விட்டு தஞ்சை சென்றார். அங்கு உஷா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். அவரையும் விட்டு விட்டு தாராபுரம் வந்தார். இங்குள்ள நஞ்சியம் பாளையத்தில் தங்கினார். அப்போது லட்சுமி என்ற பெண்ணை 3-வதாக திருமணம் செய்தார். இங்குள்ள நாடார் தெருவில் வசித்து வந்த ராஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று இரவு கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றார். அதன்பின்னர் காலையில் ராஜா காயங்களுடன் ரோட்டில் மர்மமான முறையில் கிடந்தார். 

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தாராபுரம் போலீசுக்கு புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜா அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆரல்வாய்மொழி:

    தோவாளையை அடுத்த வெள்ளமடம் ஆதித்தபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். டெம்போ டிரைவர். இவரது மனைவி ரதி (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று ரதி பக்கத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக கணவரிடம் கேட்டார். ஆனால் மணிகண்டன் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து மனமுடைந்த ரதி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரதி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை தங்க பாண்டியன் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் சாவிற்கு மருமகனே காரணம் என குற்றம்சாட்டி உள்ளார்.

    மாமனார் தன்மீது போலீசில் புகார் கொடுத்ததை அறிந்த மணிகண்டன் திடீரென தலைமறைவானார். பின்னர் அவர் நேற்று மாலை வக்கீல் ஒருவருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் போலீசாரிடம் தனது மனைவி சாவிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

    போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமாகி 7 வருடம் முடியாததால் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    பலியான ரதியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் ரதியின் சாவிற்கான காரணங்கள் தெரியவரும்.
    ×