என் மலர்
நீங்கள் தேடியது "nursing student suicide"
- கல்லூரியில் மாணவி கார்த்திகாதேவிக்கு கல்லூரி துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
- பாடப்பிரிவுகளில் பெயில் செய்து விடுவோம் என தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் நகை செய்யும் தொழிலாளி. இவரது மகள் கார்த்திகாதேவி (வயது 21).
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அரகொண்டா பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரியில் மாணவி கார்த்திகாதேவிக்கு கல்லூரி துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
மேலும் பாடப்பிரிவுகளில் பெயில் செய்து விடுவோம் என தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பெற்றோருக்கு கார்த்திகா தேவி போன் செய்துள்ளார். நேற்று பெற்றோர் சென்று கார்த்திகா தேவியை குடியாத்தம் அழைத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் வீட்டில் உள்ள அறையில் பேன் கொக்கியில் புடவையால் தூக்கிட்ட நிலையில் கார்த்திகாதேவி தொங்கினார்.
கார்த்திகாதேவியை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் கார்த்திகா தேவியை பரிசோதித்தனர். அப்போது கார்த்திகா தேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் கூடப்பாக்கம் புதுநகரை சேர்ந்தவர் கலியவரதன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் பச்சையம்மாள் (வயது 19). பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.
கலியவரதனுக்கும், லட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்தது. அதேபோல் கடந்த 20-ந்தேதியும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை கண்ட பச்சையம்மாள் மனவேதனை அடைந்து வீட்டு மாடிக்கு சென்று ஆஸ்பெட்டாஸ் சீட் பைப்பில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார்.
இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த கலியவரதனும், லட்சுமியும் பச்சையம்மாளை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பச்சையம்மாள் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் ஏட்டு கிருபாகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த மாறன் (வயது 53). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர்.
இவர்களது 4-வது மகள் சங்கவி (16) சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதனால் சாந்தி தனது 2 மகள்களுடன் சேலம் அம்மாப்பேட்டையில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவி சங்கவி மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர் அவரது உடலை சொந்த ஊருக்கு சாந்தி எடுத்து சென்றார். அப்போது உறவினர்களிடம் மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்ததாக கூறினார்.
ஆனால் அதனை நம்பாத சாந்தியின் கணவரின் உறவினர்கள் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அம்மாப்பேட்ட போலீசார் தற்கொலை வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மாணவியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையில் முடிவில் அவரை கொன்று தூக்கில் தொங்க விட்டனரா? அல்லது அவரே தூக்கில் தொங்கினாரா? என்பது தெரியவரும் என்றும் ஏற்கனவே 2 முறை மாணவி தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே சாந்தியின் கணவரின் உறவினர்கள் சாந்தி மகளை கொன்று விட்டு நாடகமாடுகிறார் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இந்த வழக்கில் மேலும் பரபரப்பு நீடித்து வருகிறது.






