search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mysterious death"

    • உடல்நிலை சரியில்லை, சிறிது நேரம் படுத்துவிட்டு வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார்.
    • சக பணியாளர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு செல்ல வலியுறுத்தினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அருகே உள்ள வி.அரியலூர் அங்காளம்மன் கோவில் தெருவவை சேர்ந்தவர் கதிரவன் (வயது 39). இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர் திருவெண்ணைநல்லூர் - திருக்கோவிலூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் வேலைக்கு சேர்ந்துள்ளார். இரவு 7 மணியில் இருந்து காலை 9 மணிவரை வேலை செய்து வந்தார்.

    பின்னர் உடல்நிலை சரியில்லை, சிறிது நேரம் படுத்துவிட்டு வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார். சக பணியாளர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு செல்ல வலியுறுத்தினர். அவரும் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்ததாக கூறி பெட்ரோல் பங்கில் உள்ள ஓய்வறையில் படுத்துறங்கினார். நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து வரவில்லை. ஊழியர்கள் அவரை எழுப்பிய போதும், அவர் எழவில்லை. தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கதிரவனை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதிரவன் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஞ்சாயத்து தேர்தலையொட்டி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
    • புருலியா மாவட்டம் மோடோ பகுதியில் பாரதியஜனதா தலைவர் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கு வங்காள மாநிலத்தில் வருகிற 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில கவர்னர் ஆனந்த்போஸ் நேரில் சென்று பார்வையிட்டார். வன்முறையை தடுக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புருலியா மாவட்டம் மோடோ பகுதியில் பாரதியஜனதா தலைவர் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது பெயர் பன்கிம் ஹன்ஸ்டா. இவர் அப்பகுதியில் பா.ஜ.க. பூத் கமிட்டி உறுப்பினராக செயல்பட்டு வந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.பஞ்சாயத்து தேர்தல் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

    • சம்பத் அவரது பாட்டி வீட்டில் சம்பத் தூங்கினார்.
    • பரிசோதனை செய்த மருத்துவர்கள் சம்பத் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பேரால் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் சம்பத்(வயது35) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பழைய சிறுவங்கூரில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு அவரது பாட்டி வீட்டில் சம்பத் தூங்கினார். மறுநாள் காலையில் சம்பத் மயங்கிய நிலையில் கிடந்ததாக தொிகிறது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சம்பத் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை செய்து வருகின்றனர்.

    • ராஜா (வயது 38). இவர் சிவதாபுரத்தில் உள்ள குமரேசன் என்பவருக்கு சொந்தமான வெள்ளி பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
    • மாலை 7 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற ராஜா, இரவு 8 மணி அளவில் மீண்டும் வெள்ளி பட்டறைக்கு வந்துள்ளார். இந்த நிலையில், சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி ராஜா மயங்கி விழுந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தம்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் ராஜா (வயது 38). இவர் சிவதாபுரத்தில் உள்ள குமரேசன் என்பவருக்கு சொந்தமான வெள்ளி பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    நேற்று மாலை 7 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற ராஜா, இரவு 8 மணி அளவில் மீண்டும் வெள்ளி பட்டறைக்கு வந்துள்ளார். இந்த நிலையில், சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி ராஜா மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், உடனடியாக ராஜாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜாவை பரிசோதித்த டாக்டர்கள் ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கொண்ட லாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    • நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலத்தை சேர்ந்த வர் மணிவேல்
    • மணிவேலுக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டது

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலத்தை சேர்ந்த வர் மணிவேல் (வயது 42). இவர் என்.எல்.சி. முதலா வது சுரங்கத்தில் தொழி லாளியாக வேலைபார்த்து வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிவேலுக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து அவர் என்.எல்.சி. பொது மருத்துவ மணையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்பு திருச்சி யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மணிவேல் உயிரிழந்தார்.

    அவர் மாரடைப்பால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மணிவேல் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஊ.மங்கலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இறுதி சடங்கு நடைபெற இருந்த நிலையில் ஊ.மங்கலம் போலீசார் அங்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மணி வேலின் சாவு குறித்து யாரா வது தகவல் தெரிவித்தி ருக்கலாம் அதனால்தான் போலீசார் உடலை பிரேத பரிசோதகை்காக அனுப்பி வைத்தது தெரியவந்தது.

    • காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார். சற்று நேரத்தில் அவர் அதே பகுதியில் இறந்து கிடந்தார்.
    • இதை கண்ட அப்பகுதி மக்கள், இது குறித்து கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாலையோரம், இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார். சற்று நேரத்தில் அவர் அதே பகுதியில் இறந்து கிடந்தார்.

    இதை கண்ட அப்பகுதி மக்கள், இது குறித்து கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாலையோரம் இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    இதில், இறந்து கிடந்த நபர் சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த டேனிஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் (வயது 40) என்பதும், கட்டிடத் தொழிலாளியான இவர், ஈரோடு பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார், ஈரோட்டில் தங்கி பணிபுரிந்து வந்த கட்டிட தொழிலாளி வெள்ளையன் எதற்காக இப்பகுதிக்கு வந்தார்? மேலும் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த அவர், திடீரென மர்மமாக இறந்து கிடந்தது எப்படி? அவரை யாரும் கடத்தி வந்து தாக்கி கொலை செய்தனரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

    • முகத்தில் காயங்களுடன் ஆட்டோ டிரைவர் மர்ம சாவு
    • கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு மனைவியிடம் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46), ஆட்டோ டிரைவர்.

    இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று அதிகாலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முகத்தில் வெட்டு காயங்களுடன் ரமேஷ் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

    கணவன்- மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கத்தியை எடுத்து ரமேஷ் தனக்கு தானே முகத்தில் வெட்டியதாக முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

    ஆனாலும் பிரேத பரிசோதனைக்கு பிறகே முழுமையான தகவல் தெரியவரும். எனவே மர்ம சாவாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீசார் ரமேஷ் மனைவி மகாலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்கொலை செய்து கொண்டரா அல்லது வேறு ஏதாவது காரணமா?
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 4வது பிளாட்பாரத்தில் சுமார் 40 வயது மதிக்கதக்க ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா?
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55) கூலி தொழிலாளி.

    இவர் நேற்று மாலை சின்ன வரிகம் பகுதியில் தென்னந்தோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகுமார் மதுப்பழக்கம் உள்ள இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் கூலி தொழிலாளி. மதுப்பழக்கம் உள்ள இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். பகல் 2 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை எழுப்பினர். அப்போது அவர் சுய நினைவு இல்லாமல் கிடந்தார். உடனே அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அழகுவேல்.இவர்கேரளாவில்பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.இவரதுமனைவி தமிழ்ச்செல்வி (28)குழந்தை எதுவும் இல்லை .
    • 20 நாட்களுக்கு முன்பு கேரளாவிற்கு மனைவியுடன் சென்றார். அங்கு தமிழ்செல்வி இறந்து விட்டார்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் காலணிடேங்க்தெருவைசேர்ந்தவர்அழகுவேல்.இவர்கேரளாவில்பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.இவரதுமனைவி தமிழ்ச்செல்வி (28)இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. குழந்தை எதுவும் இல்லை . 20 நாட்களுக்கு முன்பு கேரளாவிற்கு மனைவியுடன் சென்றார். அங்கு தமிழ்செல்வி இறந்து விட்டார். அவரது உடலை பனப்பாக்கத்திற்கு அழகுவேல் கொண்டு வந்தார்.

    இதற்கிடையில் இறந்து போன தமிழ் செல்வி உறவினர்கள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் .அவர்களிடம் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதால் மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம்போலீசார் ெதாடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவர் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உறுதி செய்தாக கூறப்படுகிறது.
    • மருத்துவர் பவுன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு மனைவி பவுன் (வயது 50) கூலி தொழிலாளி, இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 27- ந் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உறுதி செய்தாக கூறப்படுகிறது. 

    அதன்படி கடந்த 2- ந் தேதி தனியார் ஆஸ்பத்திரியில் பவுனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கழிவறை செல்வதற்காக எழுந்து சென்றவர் மயக்கம் வருவதாக கூறி மீண்டும் வந்து படுக்கையில் படுத்துள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் பவுன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த அவரது உறவினர்கள் பவுன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது உடற்கூறு ஆய்வு முடிவு தெரிந்த பிறகு நடவடிக்கை எடுப்பதாக கூறி உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை ஏற்று உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து செல்வராசு கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தனியார் ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சைக்காக வந்த பெண் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×