search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murder threat"

    பாகூரில் கம்யூனிஸ்டு பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பாகூர்:

    பாகூர் மாரி நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 62). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் தற்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாகூர் தொகுதி செயலாளராக உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று கட்சி பணிக்காக கலியமூர்த்தி மோட்டார் சைக்கிளில் பரிக்கல்பட்டு ரோடு வழியாக சென்றார்.

    அப்போதுஅங்கு பாகூர் பழைய காமராஜர் தெருவை சேர்ந்த ராமு (30) உள்ளிட்ட சிலர் சாலையில் வழிமறித்து நின்றனர். இதனை கலியமூர்த்தி தட்டிக் கேட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த ராமு தகாத வார்த்தைகளாலும், சாதி பெயரை சொல்லியும் கலிய மூர்த்தியை திட்டினார். மேலும் கொலை செய்து விடுவதாகவும் ராமு மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து கலியமூர்த்தி பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்குபதிவு செய்து ராமுவை கைது செய்தார்.

    கோவில்பட்டியில் முன்னாள் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ஜீவ அனுகிரகா பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன். இவர் முன்னாள் நகர்மன்ற கவுன்சலர் ஆவார். இவர் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அறக்கட்டளை சார்பிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்து புதுரோடு, எட்டயபுரம்சாலை, இளையரசனேந்தல் சாலை, அரசு அலுவலக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.

    இந்நிலையில் புதுரோடு மற்றும் எட்டயபுரம் சாலையில் உள்ள மரக்கன்றுகள் சேதமடைந்திருந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது தங்கப்ப நாடார் நந்தவனத்தைச் சேர்ந்த ஆட்டோடிரைவர் தாஸ் (வயது 50) என்பவர் மரக்கன்றுகளை சேதப்படுத்தியது தெரியவந்தது.

    இதுகுறித்து ராஜேந்திரன் அவரிடம் தட்டி கேட்டார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த தாஸ், ராஜேந்திரனை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் தாசை கைது செய்தனர். #tamilnews
    சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 30 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு பொட்டல் பகுதியில் தனியார் சார்பில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு இரவு 11 மணிக்கு மேல் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். 

    இந்நிலையில் நேற்று இரவு கண்காட்சி பகுதியில் டவுண் சப்-இன்ஸ்பெக்டர் சக்திநடராஜன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 11 மணியை கடந்தும் ராட்டினத்தை இயக்கி கொண்டிருந்தனர். இது குறித்து சக்தி நடராஜன் தட்டிக்கேட்டார். இதில் சப்-இன்ஸ்பெக்டருக்கும், ராட்டினத்தில் இருந்த 30 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்தவர்கள் சக்திநடராஜனிடம் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். 

    இது குறித்து சக்தி நடராஜன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 30 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    விவாகரத்து வழக்கில் கோர்ட்டில் ஆஜரான மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தேனி:

    தேனி பாரஸ்ட் ரோடு 5-வது தெருவை சேர்ந்த துரைப்பாண்டி மகள் ராஜபாலா (வயது27). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் திருவேங்கடம் பிள்ளைமார் தெருவை சேர்ந்த திருப்பதிராஜ் (36) என்பவருக்கும் கடந்த 7.9.2014-ந் தேதி திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது 28 பவுன் நகை, ரொக்க பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணமான சில மாதங்களிலேயே அவர் அணிந்த அனைத்து நகைகளையும் திருப்பதி ராஜ் குடும்பத்தினர் பறித்து வைத்துக்கொண்டனர். மேலும் கூடுதல் நகை வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தி வந்தனர்.

    இதனால் ராஜபாலா தனது கணவரை விட்டு பிரிந்து தேனியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து விட்டார். இதனையடுத்து சங்கரன்கோவில் சப்-கோர்ட்டில் விவாகரத்து கேட்டு கணவர் திருப்பதிராஜ் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விசாரணையில் ராஜபாலா மற்றும் அவரது தந்தை ஆஜராகி கணவருக்கு எதிராக சாட்சியம் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருப்பதிராஜ் குடும்பத்தினர் துரைப்பாண்டி வீட்டிற்கு வந்து இனிமேல் கோர்ட்டில் ஆஜராக வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றனர். இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் கொலை மிரட்டல் விடுத்த கணவர் திருப்பதிராஜ், மாமியார் சுப்புலட்சுமி, நாத்தனார் கனகவள்ளி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    நாங்குநேரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வழக்கில் கருணாஸ் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவரை போலீசார் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.
    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி மகன் சுப்பையா (வயது 24). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான சுடலைக்கண்ணுவுக்கும் இடையே நம்பியாற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக‌ ஏற்பட்ட தகராறில் சுப்பையா நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சுப்பையா உடல் பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று முன்தினம் இரவில் அவரது சொந்த ஊரில் உடல் அடக்கம் செய்யப்பட்ட‌து. அப்போது சுப்பையாவின் உறவினர் கார்த்தி (24) உள்பட 4 பேர் சேர்ந்து சுடலைக்கண்ணு வீடு உள்பட 3 பேரின் வீடுகளை சூறையாட முயன்றனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாங்குநேரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அவர்களை தடுக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்தியை கைது செய்தனர். கைதான கார்த்தி, கருணாஸ் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியை போலீசார் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் பாளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். #tamilnews
    பொருட்களின் எடையளவு குறைவு தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரே‌ஷன் கடை விற்பனையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பட்டி ரேசன் கடையில் முத்துப்பாண்டி என்பவர் பொருட்களை வாங்கி உள்ளார். எடையின் அளவு குறைவாக இருந்ததால் ஆத்திரமடைந்த முத்துபாண்டி மற்றும் புதுப்பட்டி பொதுமக்கள் விற்பனையாளரிடம் கேள்வி கேட்டுள்ளனர்.

    இதையடுத்து கான்பா நகரைச் சேர்ந்த தங்கபாண்டி (வயது31) என்பவர் ரேசன் கடை சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளிடம் விற்பனையாளர் குறித்து புகார் அளித்துள்ளார்.

    இதில் ஆத்திரம் அடைந்த புதுப்பட்டி ரேசன் கடையின் விற்பனையாளரான நெற்குப்பையை சேர்ந்த ராமச்சந்தின் (43), தனது நண்பர் ஏகப்பன் (24) மூலம் தங்கபாண்டிக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    ஏகப்பன் பேசியதை அப்படியே பதிவு செய்த தங்கபாண்டி ஆதாரத்துடன் திருப்பத்தூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கொலை மிரட்டல் விடுத்தது உறுதியானது. இதையடுத்து, ராமச்சந்திரன், ஏகப்பன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்

    திருப்பூரில் தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் ரோடு கே.என்.எஸ். கார்டன் பகுதியில் வசித்து வருபவர் லூர்து சேவியர் (42). தொழில் அதிபர்.திருப்பூர் சுல்தான் பேட்டை மற்றும் முதலி பாளையத்தில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த 27-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது.

    அதில் பேசிய மர்ம நபர் எனக்கு உடனடியாக ரூ. 30 லட்சம் பணம் தேவைப்படுகிறது. அதனை கொடுக்காவிட்டால் உன்னையும் உனது குடும்பத்தில் யாராவது ஒருவரையும் கடத்தி கொலை செய்து விடுவேன்.

    பணத்தை தயார் செய்து வைத்துக்கொள். பின்னர் நான் சொல்லும் இடத்திற்கு வந்து பணத்தை கொடுத்து செல் என கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.பின்னர் மீண்டும் ஒரு முறை மிரட்டல் போன் வந்தது. இதனால் தொழில் அதிபர் லூர்து சேவியர் அதிர்ச்சி அடைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் சிவமூர்த்தி கடத்தி கொலை செய்யப்பட்டார்.

    இதனால் திருப்பூர் தொழில் அதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் தனக்கு மிரட்டல் வந்தது குறித்து லூர்து சேவியர் திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரனிடம் புகார் அளித்தார்.இது தொடர்பாக திருப்பூர் மத்திய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேலை விசாரணை நடத்தும் படி போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டார்.

    அவர் உடனடியாக விசாரணையை தொடங்கினார். தொழில் அதிபர் லூர்து சேவியருக்கு வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்த போத அந்த எண் அதே பகுதியை சேர்ந்த பார்த்த சாரதி(22) எண் என்பது தெரிய வந்தது.

    அவரை பிடித்து விசாரித்த போது தனது நண்பர் செட்டிப்பாளையம் வசந்த் (21) என்பவருடன் சேர்ந்து தொழில் அதிபர் லூர்து சேவியரை மிரட்டியதாக கூறினார். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    போலீசில் பார்த்தசாரதி கொடுத்த வாக்கு மூலத்தில் , நான் லூர்து சேவியர் பனியன் கம்பெனியில் 7 மாதமாக வேலை பார்த்து வந்தேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலையை விட்டு நின்று விட்டேன். எனக்கு கடன் அதிகம் உள்ளது.

    அதனை அடைக்க லூர்து சேவியரை பணம் கேட்டு நண்பருடன் சேர்ந்து மிரட்டினேன் என்றார்.

    கைதான பார்த்தசாரதி, வசந்த் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூரில் தொழில் அதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு தொழில் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இளைய மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியரின் மகளுக்கு டுவிட்டர் மூலம் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். #Trump #Chloe
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இளைய மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர். இவருக்கு 4 வயதில் சோலி என்ற மகள் இருக்கிறாள். அவள் மீது டிரம்புக்கு கொள்ளை பிரியம்.

    இந்த நிலையில் அவளுக்கு டுவிட்டரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. கனடா நாட்டின் டெலிவி‌ஷன் ஒன்றில் எழுத்தாளராக பணிபுரியும் பாட்டுசால்ட் என்பவர் அதை பதிவு செய்திருந்தார். அதில் கொலை மிரட்டல் விடுக்கும் பாணியில் ‘சோலி’யையும் விட மாட்டோம் என குறிப்பிட்டிருந்தார். அவரது இக்கருத்து சமூக வலை தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.



    அதையடுத்து அதை டுவிட்டர் பக்கத்தில் இருந்து அவர் நீக்கிவிட்டார். ஆனாலும் சிலர் அதை படமாக பிடித்து தங்களது பக்கங்களில் பதிவிட்டனர். பிரபல நடிகர் ஜேம்ஸ்வுட் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பாட் டுசால்ட் பதிலடி கொடுத்தார்.

    மேலும் இதை உளவுத்துறை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அது சர்ச்சையானதைத் தொடர்ந்து பாட்டுசால்ட் மன்னிப்பு கேட்டார். #Trump #Chloe
    திருப்பூர் இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் சோளிபாளையத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 30). இந்து முன்னணி திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர் லோட்டஸ் கார்டன் பகுதியில் உள்ள நிரஞ்சன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இவரது முகவரிக்கு சென்னையில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதை பிரித்து படித்தபோது அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த கடிதத்தில் ‘இறை இல்ல பிரச்சினையில் உன் செயல்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் இருந்து நீ விலகவில்லை எனில் கோவை சசிகுமார் மரணத்தை விட அகோரமாக உன் மரணம் அமையும்’ என்று எழுதப்பட்டிருந்தது.

    இது குறித்து ராஜா 15.வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் சென்னை மடிப்பாக்கம் தபால் நிலையத்தில் இருந்து இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், வாட்ஸ்- அப் மூலம் பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக பேசியதாலும் ரபீக்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.#Modi
    கோவை:

    கோவை குனியமுத்தூர் சாரமேடு பகுதியை சேர்ந்தவர் ரபீக்(வயது 50).

    கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, தண்டனை பெற்று 2007-ல் வெளிவந்தவர்.

    இவர் பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டிருப்பதாக பேசிய ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘வாட்ஸ்-அப்’பில் பரவியது. இதையடுத்து குனியமுத்தூர் போலீசார் ரபீக்கை கைது செய்தனர்.

    சேலத்தை சேர்ந்த தொழில் அதிபர் பிரகாஷ் என்பவரிடம் கார் பஞ்சாயத்து தொடர்பாக ரபீக் பேசிய போது, பிரதமர் மோடியை கொல்ல திட்ட மிட்டோம் என மிரட்டல் பேசியது தெரிய வந்தது. அவர் மீது இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கோவை ஜெயிலில் அடைத்தனர்.

    குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து வெளிவந்த பின்னர் ரபீக் பழைய கார் வியாபாரம் செய்து வந்தார். அப்போது பலரை மிரட்டி கார்களை வாங்கி உள்ளார். ஏராளமான கார்களை உடைத்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு குனியமுத்தூர் போலீசார் ரபீக்கை குண்டர் சட்டத்தில் கைது செய்திருந்தனர். ஏற்கனவே இவர் தடா சட்டத்திலும் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

    தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக பேசியதாலும் ரபீக்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யாவுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் ரபீக்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவிட்டார்.

    இதற்கான நகல் கோவை மத்திய ஜெயில் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. கடந்த 7-ந் தேதி ஜெயிலில் ரபீக்கிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. தற்போது அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டதாக ரபீக் கூறியதன் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் எண்களுக்கு கடைசியாக பேசியவர்கள் யார்-யார்? என பட்டியல் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews #Modi
    ×