search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mourning"

    ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவுக்கு அவரது தாய்நாடான கானாவில் ஒருவாரம் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. #Ghanamourning #RIPKofiAnnan
    அக்ரா:

    ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான். கானா நாட்டில்  8-4-1938 அன்று பிறந்த இவர் 1-1-1997 அன்று இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 அன்று ஓய்வு பெற்றார். 

    அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக கோபி அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்பட்டது.

    பதவி ஓய்வுக்கு பின்னர் 23-2-2012 முதல் 31-8 -2012 வரை, சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.

    சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியிருந்த கோபி அன்னான்(80) உடல்நலக்குறைவால் பெர்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் இன்று மரணம் அடைந்தார்.

    கோபி அன்னான் மறைவையொட்டி அவர் பிறந்து, வளர்ந்த நாடான கானாவில் ஒருவார காலம் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என கானா அதிபர் நானா அக்குஃபோ-அட்டோ இன்று அறிவித்துள்ளார்.

    ‘கோபி அன்னான் பல வகைகளில் ஐக்கிய நாடுகள் சபையாகவே திகழ்ந்தார்’ என்று புகழாரம் சூட்டியுள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் அன்ட்டோனொயோ குட்டெரஸ், ‘அவரை எனது நல்ல நண்பராகவும், வழிகாட்டியாகவும் பெற்றமைக்காக பெருமை கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். 

    இதேபோல், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஞ்சேஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #Ghanamourning #RIPKofiAnnan
    ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து கட்சிகள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து கட்சிகள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மல்லிகை அரங்கில் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.

    மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.ே.கஎஸ் இளங்கோவன், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் மாவட்ட அவைத் தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், சின்னையன், பொருளாளர் பழனிச்சாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.ஈ. பிரகாஷ்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை ராமு, ஒன்றிய செயலாளர்கள் சின்னசாமி,குணசேகரன் செங்கோட்டையன், சாமி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன். திமுக மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர் கோட்டைப் பகுதி செயலாளர் ராமச்சந்திரன் கிங் பூபதி.

    ம.தி.மு.க பொருளாளர் கணேசமூர்த்தி, தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் கோபால், பகுதி செயலாளர் நைனாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.டி. சந்திரசேகர் மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ்.

    விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல அமைப்புச்செயலாளர் விநாயகமூர்த்தி ,மாநகராட்சி செயலாளர் அம்ஜத் கான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தொழிற்சங் தலைவர் ஜெகநாதன் மக்கள் நீதி மையம் கட்சியின் கிழக்குத் தொகுதி பொறுப்பாளர் ஆனந்தம் எம் ராஜேஷ்.

    திராவிடர் கழகம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

    மல்லிகை அரங்கில் தொடங்கிய ஊர்வலம் சத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வீதி மணிக்கூண்டு கனி மார்க்கெட் பன்னீர் செல்வம் பார்க் வழியாக காளைமாடு சிலை அருகே போட்டு சிம்மில் நிறைவடைந்தது.

    பின்னர் இரங்கல் கூட்டம் நடந்தது கூட்டத்தில் திரளாக கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகளுக்கும், அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.ஈ.பிரகாஷ் நன்றி கூறினார்.

    கொம்பாக்கத்தில் தோழி இறந்த துக்கத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கொம்பாக்கம் செட்டிக்களம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி சரஸ்வதி. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார்கள். இவர்களது மகள் ஜெயஸ்ரீ(வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று வீட்டில் இருந்து வந்தார்.

    ஒதியம்பட்டை சேர்ந்த ஜெயஸ்ரீயின் தோழி லதா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். தோழி இறந்தது முதல் அவர் நினைவாகவே ஜெயஸ்ரீ இருந்து வந்தார். இந்த நிலையில் தோழி இறந்து ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி நேற்று அவரது உருவ படத்துக்கு ஜெயஸ்ரீ மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதுமுதல் ஜெயஸ்ரீ சோகமானார்.

    இதனால் மனமுடைந்த ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த வேளையில் வீட்டின் கூரையில் துப்பட்டாவால் ஜெயஸ்ரீ தூக்குபோட்டு தொங்கினார். எதேச்சையாக அருகில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு வந்த போது ஜெயஸ்ரீ தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.

    பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜெயஸ்ரீயை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெயஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கச்சநத்தத்தில் சமீபத்தில் நடந்த கோஷ்டி மோதலில் 3 பேர் பலியான சம்பவத்துக்கு இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் சமீபத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் படுகொலை செய்யப்பட்ட சண்முகநாதன், சந்திரசேகர் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சண்முகநாதன், சந்திரசேகர் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தனித்தனியாக ராகுல் காந்தி அனுப்பிய இரங்கல் செய்தியில், “மரணம் நிகழ்ந்ததை அறிந்து துயரம் அடைந்தேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலை ஏற்றுகொள்ளுங்கள். இந்த கடினமான நேரத்தில் என்னுடைய எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உங்களோடு மற்றும் உங்கள் குடும்பத்தினரோடு இருக்கும்” என்று கூறியுள்ளார். #RahulGandhi
    பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் மரணமடைந்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.

    அவர் திரைப்படத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக தேசிய விருது, தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் போன்ற பல்வேறு விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். அவரது மறைவு, தமிழ் திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.

    அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Tamilnews
    வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    பா.ம.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலைவருமான ஜெ.குரு உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-



    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி:- பா.ம.க.வின் முன்னணித் தலைவரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி ஜெ.குரு உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். காடுவெட்டி குரு 2001-ம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    காடுவெட்டி குருவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பா.ம.க.வினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:- பா.ம.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்த காடுவெட்டி குருவின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் வன்னியர் சங்க உறுப்பினர்கள் அனைவரின் துயரில் பங்குகொள்கிறேன். அவரது ஆன்மா நற்கதியடைய எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெ.குரு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மறைந்ததை கண்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன். அவரது மறைவை நேரில் கண்டும், மறைந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரது மறைவு என்னை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

    குருவின் மறைவுச் செய்தியை பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான தொண்டர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை நான் அறிவேன். எனது அதிர்ச்சி, வேதனை, சோகம் ஆகியவற்றை அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். குருவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பா.ம.க., வன்னியர் சங்க உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். 
    ×