search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கச்சநத்தம்"

    கச்சநத்தத்தில் சமீபத்தில் நடந்த கோஷ்டி மோதலில் 3 பேர் பலியான சம்பவத்துக்கு இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் சமீபத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் படுகொலை செய்யப்பட்ட சண்முகநாதன், சந்திரசேகர் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சண்முகநாதன், சந்திரசேகர் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தனித்தனியாக ராகுல் காந்தி அனுப்பிய இரங்கல் செய்தியில், “மரணம் நிகழ்ந்ததை அறிந்து துயரம் அடைந்தேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலை ஏற்றுகொள்ளுங்கள். இந்த கடினமான நேரத்தில் என்னுடைய எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உங்களோடு மற்றும் உங்கள் குடும்பத்தினரோடு இருக்கும்” என்று கூறியுள்ளார். #RahulGandhi
    கச்சநத்தம் கிராமத்தில் நடந்த படுகொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.#Thirumavalavan
    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 28-5-2018 அன்று இரவு சாதிவெறியர்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 3 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

    இந்த கொடூரத்தைக் கண்டித்து தொடர்ந்து 3 நாட்களாக மதுரையில் போராடிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களை 1-6-2018 அன்று நேரில் சந்தித்து விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் ஆறுதல் கூறினோம். சாதி ஒழிப்புக்கான கச்சநத்தம் களத்தில் பலியான ஆறுமுகம், சண்முகநாதன் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினோம்.

    காவல்துறை அதிகாரிகளும் இந்தப் படுகொலையில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்கிற நிலையில் இவ்வழக்கை காவல்துறையினரே விசாரிப்பது நீதி கிடைக்க ஏதுவாக அமையாது. எனவே, இதனை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்படி தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thirumavalavan
    ×