search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorcycle theft"

    வாலாஜா அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த மேல் புதுப்பேட்டை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அதை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து வாலாஜா போலீஸ் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த நிலையில் நேற்று சப்- இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களை போலீசார் மடக்கி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் போளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (32), பாணாவரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜெயபால் (37) என்பதும், வாலாஜா அருகே இரண்டு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, இவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க சென்றவரின் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வசந்தன். இவர் திருவொற்றியூரில் உள்ள ரெயில்வே முன்பதிவு மையத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டிக்கெட் எடுக்க சென்றார். பின்னர் திரும்பி வந்த போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. அதனை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து திருவொற்றியூர்போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது திருவொற்றியூர் பூங்காவனபுரம் பகுதியை சேர்ந்த ஜெகன் மற்றும் காஜா மொய்தீன் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வளசரவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 மாணவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    போரூர்:

    நெற்குன்றத்தை சேர்ந்தவர் நாகநாதன் இவர் கடந்த 6-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை வளசரவாக்கம் ஜானகி நகரில் உள்ள கடை முன்பு நிறுத்திவிட்டு காலையில் எடுக்க வந்தபோது காணவில்லை.

    அதை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அமுதா அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.

    அதிகாலையில் வந்த 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது பதிவாகி இருந்தது. அவர்களை பிடிக்க தீவிரமாக தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று ஆழ்வார்திருநகர் தனியார் வணிக வளாகம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் கெருகம்பாக்கம் லீலாவதி 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த விமல் ராஜ் அதே பகுதியைச் சேர்ந்த 18-வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பது தெரிய வந்தது. விமல்ராஜ் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டும் சிறுவன் முதலாமாண்டும் படித்து வருகிறார்கள். இருவரும் நாகநாதன் பைக்கை திருடி சென்றதை ஒப்புக் கொண்டனர்.

    வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு கடைகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் விலை உயர்ந்த சொகுசு மோட்டார் சைக்கிளை மட்டும் குறிவைத்து திருடி வந்ததும் தெரியவந்தது. உடனடியாக 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே வேளச்சேரி காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு உள்ளது.

    சாத்தான்குளத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். கட்டிட தொழிலாளியை தேடி வருகிறார்கள்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வன் (வயது 42). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. கடந்த 2-ந் தேதி முத்துச்செல்வன் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தோட்டத்திற்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இது குறித்து தட்டார்மடம் போலீசில் அவர் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தட்டார்மடம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற ஒரு சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் உடன்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் புத்தன்தருவையை சேர்ந்த கட்டிட தொழிலாளி செந்தில்வேல் என்பவருடன் சேர்ந்து விவசாயி முத்துச்செல்வன் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. 

    இதையடுத்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் செந்தில்வேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    விழுப்புரம் அருகே டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம்-செஞ்சி சாலையில் நேமூர் என்ற பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மாக்கடையில் ஜெயபாலன்(வயது 48) என்பவர் சூப்பர் வைசராக வேலைபார்த்து வருகிறார். நேற்று இரவு டாஸ்மாக் கடையில் வேலை முடிந்ததும் கடையை பூட்டிவீட்டு வசூலான ரூ.92 ஆயிரத்தை தனது பேண்ட் பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஜெயபாலன் புறப்பட்டார்.

    அவர் விழுப்புரம் பகுதியில் உள்ள பூண்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த கும்பல் ஒன்று ஜெயபாலனை வழிமறித்து சரமாரியாக தாக்கியது.

    டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை ஜெயபாலன் மோட்டார் சைக்கிளில் வைத்திருப்பதாக நினைத்து அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது.

    ஆனால் ஜெயபாலன் டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை மோட்டார் சைக்கிளில் வைக்காமல் தனது பேண்ட் பையில் வைத்ததால் ரூ.92 ஆயிரம் பணம் கொள்ளை கும்பலிடம் சிக்காமல் தப்பியது. கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஜெயபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிக்சைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து கஞ்சனூர் போலீசில் ஜெயபாலன் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவையில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பெரிய நாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் நடந்து வந்தது.

    இது குறித்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடும் மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    நேற்று தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் காரமடை அருகே உள்ள தோழம்பாளையத்தை சேர்ந்த சண்முகம் (வயது 33), வடிவேல் (33) என்பது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து பெரிய நாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள், 2 மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    வளசரவாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் பறித்த 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 செல்போன்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    போரூர்:

    வளசரவாக்கம் ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

    இதையடுத்து வளசர வாக்கம் உதவி கமி‌ஷனர் சம்பத் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் செல்போன் பறிப்பு நடைபெற்ற இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவர்கள் சிலர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் காரம்பாக்கம் சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் 17 வயதுக்குட்பட்ட வளசரவாக்கம், விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் என்பதும் தனியாக செல்பவர்களிடம் செல்போன் பறிப்பு மற்றும் வீட்டு முன்பு நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததும் தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்படி கூட்டாளிகளான 16 மற்றும் 14 வயதுடைய மதுரவாயல், நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்களையும் பிடித்தனர்.

    கைதான 4 பேரிடம் இருந்தும் 40 செல்போன்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வளசரவாக்கத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளை திருடி அதன் மூலம் செல்போன் பறித்து வந்த 2 பேரை கைது செய்தனர்.

    போரூர்:

    சென்னை வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் வளசரவாக்கம் உதவி கமி‌ஷனர் சம்பத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று இரவு வளசர வாக்கம் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை மடக்கினர். போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

    உடனடியாக மற்றொரு பைக்கில் துரத்திச் சென்ற போலீசார் அவர்களை பிடித்தனர் அவர்கள் மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 19) மற்றும் 10-ம் வகுப்பு பள்ளி மாணவரான 15 வயது சிறுவன் என்பதும் பைக்கிற்கு உரிய ஆவணம் இல்லை என்பதும் தெரியவந்தது.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் போரூர், வளசரவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங் களில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்கை திருடி அதன் மூலம் தொடர் செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் திருடிய பைக்கை வேறு ஏதாவது ஒரு பகுதியில் கொண்டு விட்டுவிட்டு செல்வதும் தெரியவந்தது.

    உடனடியாக 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7பைக் மற்றும் 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    சென்னை கொரட்டூர் பகுதியில் காதலிக்காக மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் சிக்கினார்.

    சென்னை:

    சென்னை கொரட்டூர் பகுதியில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போனது. இது தொடர்பாக கொரட்டூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டன் என்ற வாலிபர் சிக்கினார்.

    திருமங்கலம் என்.வி.எம். நகரை சேர்ந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மணிகண்டன் விலை உயர்ந்த 3 மோட்டார் சைக்கிள்களை திருடியிருப்பது தெரியவந்தது. ஒவ்வொரு மோட்டார் சைக்கிள்களும் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பு கொண்டவையாகும்.

    மணிகண்டனை கைது செய்த போலீசார் புதிய மோட்டார் சைக்கிள்களை திருடியது ஏன்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அவருடன் ஒன்றாக ஊர் சுற்றுவதற்காகவே புதிது புதிதாக மோட்டார் சைக்கிள்களை திருடினேன் என்றும் தெரிவித்துள்ளார்.

    திருபுவனை பகுதிகளில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய சென்னையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 26 திருட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருபுவனை:

    திருபுவனை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருபுவனையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திருசே‌ஷன் (வயது 23) என்பவர் மதகடிப்பட்டு சந்தை தோப்பில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காய்கறி வாங்க சென்றார்.

    பின்னர் காய்கறி வாங்கிக் கொண்டு திரும்பிய போது மோட்டார் சைக்கிளை காணாமல் திருசே‌ஷன் திடுக்கிட்டார். மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருடர்களை கண்டுபிடிக்க தீவிர வாகன சோதனை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று இரவு ஆண்டியார் பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முராணான தகவல்களை தெரிவித்ததால் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் செனனை அனகா புத்தூரை சேர்ந்த அலெக்ஸ் (37) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.

    மேலும் இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருபுவனையை சேர்ந்த திருசே‌ஷனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக் கொண்டார்.

    அதோடு இவர் மடுகரை அருகே தமிழகபகுதியான சிறுவந்தாட்டில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, நல்லூரை சேர்ந்த தனது கூட்டாளி கனியமுது (27) என்பவருடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து அலெக்ஸ் மற்றும் அவரது கூட்டாளி கனியமுது ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26 திருட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    காஞ்சீபுரம் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டி மோட்டார் சைக்கிள் பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த வாலாஜாபாத் தென்னேரி பகுதியினைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் இவர் நேற்று நள்ளிரவு கம்பெனியில் இரவு வேலையை முடித்து விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். கட்டவாக்கம் என்ற பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது வேறொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சதீஷை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். உடனே சதீஷ், “என்னை காப்பாற்றுங்கள்” என்று கூச்சலிட்டார்.

    இதனால் மிரண்டு போன மர்ம நபர்கள் அரிவாளால் சதீஷை வெட்டி விட்டு அவரது இரு சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு சென்றனர். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வாகனத்தில் வந்தவர்கள் அவரை வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சம்பவம் குறித்து வாலாஜபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Tamilnews
    ×