search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "militants killed"

    ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் நகரில் உள்ள குல்ஷன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினரும் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.



    இந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார் என பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. #PulwamaEncounter
    ஆப்கானிஸ்தான் நாட்டின் இரு மாகாணங்களில் போலீசாருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்தனர். #Afghanmilitants #Afghanclashes #AfghanTalibans
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, நாட்டின் வடபகுதிகளில் உள்ள மாகாணங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
     
    இந்நிலையில், அந்நாட்டின் பலாக் மாகாணத்துக்குட்பட்ட சிம்டால் மாவட்டத்தில் காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச்சாவடி மீது நேற்றிரவு தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர்.

    அருகாமையில் உள்ள தக்கார் மாகாணத்தில் உள்ள தஷ்த்-இ-காலா மாவட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரி வீட்டில் தாக்குதல் நடத்தவந்த பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Afghanmilitants #Afghanclashes #AfghanTalibans
    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #KashmirEncounter
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். அவர்களை அடக்கி ஒடுக்கும் பணியில் போலீசும், ராணுவமும் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் புல்வாமா மாவட்டத்தில் ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அந்த வீட்டை ராணுவம் சுற்றி வளைத்தது.


    அதை அறிந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு ராணுவமும் சுட்டது. இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    அதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. #KashmirEncounter
    ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் நடந்த என்கவுண்டரில், பயங்கரவாதிகள் 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த அரம்போரா கிராமத்தை பாதுகாப்பு படையினர் இன்று காலையில் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.



    அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. #JKEncounter
    சோமாலியாவில் அமெரிக்க போர் விமானப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் 62 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

    நைரோபி:

    சோமாலியாவில் அல்- ‌ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியாவுக்கு அமெரிக்க ராணுவம் உதவி புரிந்து வருகிறது.

    இந்தநிலையில் காந்தர்சே பகுதியில் முகாம்களில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

    இதையடுத்து கடந்த 17-ந்தேதி நடந்த குண்டு வீச்சில் 34 பயங்கரவாதிகளும், 18-ந்தேதி நடந்த தாக்குதலில் 28 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

    2 நாட்கள் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 62 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை. காயம் அடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கா ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் கடந்த இரு நாட்களில் சோமாலியாவில் 60க்கு மேற்பட்ட அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் பலியாகினர். #Somalia #USAirStirkes
    மொகடிஷு:

    சோமாலியாவில் அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த சோமாலியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த வேட்டையில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது.

    இந்நிலையில், சோமாலியா நாட்டில் பதுங்கி இருந்த கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 34 பேர், நேற்று நடத்திய தாக்குதலில் 28 பேர் என மொத்தம் 62 அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். இதில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. #Somalia #USAirStirkes
    அமெரிக்கா ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் சோமாலியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 6 அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் பலியாகினர். #Somalia #USAirStirkes
    மொகடிஷு:

    சோமாலியாவில் அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த சோமாலியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த வேட்டையில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது.

    இந்நிலையில், சோமாலியா நாட்டின் ஹரதரே பகுதியில் பதுங்கி இருந்த கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா இன்று வான்வெளி தாக்குதல் நடத்தியது.

    முதல் கட்ட தாக்குதலில் சுமார் 6 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தொடர்நு நடத்திய தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் அழிக்கப்பட்டன என அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. #Somalia #USAirStirkes
    பார்யாப் மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் படைகள் நிகழ்த்திய தாக்குதலில் உள்ளூர் தளபதி ஒருவர் உள்பட 8 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். #Afghanistan
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் முடிவுக்கு வந்த பாடில்லை. மாஸ்கோவில் சமரச பேச்சு வார்த்தை முடிந்துள்ள நிலையில், அவர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், அங்கு பார்யாப் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த பகுதியை இலக்காக வைத்து, ஆப்கானிஸ்தான் படைகள் நேற்று முன்தினம் குண்டு வீச்சு நடத்தின.

    பஸ்த்தாங்கோட் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலில் உள்ளூர் தளபதி ஒருவர் உள்பட 8 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலின்போது ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் தரப்பில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    இந்த தகவல்களை ஆப்கானிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் முகமது ஹனிப் ரேசாய் தெரிவித்தார்.

    அதே நேரத்தில் தலீபான்கள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிகுன் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று பயங்கரவாதிகள் இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.



    அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் நடந்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சண்டை நடந்த பகுதியில் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #JKEncounter
    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #ShopianEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கட்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் இன்று இரவு அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் சுட்டனர். இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #ShopianEncounter
    ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மற்றும் பாராமுல்லா ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட இரு என்கவுண்டர்களில் பாதுகாப்பு படையினர் 6 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். #JammuKashmir #Encounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அர்வானி பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட்னர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பயங்கரவாதிகள்  சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடவடிக்கையை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.



    இதேபோல், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் உள்ள கீரி என்ற இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலான இந்த துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #JammuKashmir #Encounter
    ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 46 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். #HouthiMilitantsKilled
    சனா:

    ஏமன் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
     
    இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களம் இறங்கி தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இது ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா மீது தீராப்பகையை உண்டாக்கி உள்ளது. இதனால் சமீப காலமாக சவுதி அரேபிய நகரங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 45 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதல்கள் ஹூடியத் மற்றும் துரிஹெமி மாவட்டங்களில் நடந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #HouthiMilitantsKilled
    ×