என் மலர்

  நீங்கள் தேடியது "Pulwama district"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் அல் கொய்தா ஆதரவு இயக்கத்தின் தளபதியை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.
  ஜம்மு:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட வார்புரா பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

  இதையடுத்து, அந்த பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.  சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் அல் கொய்தா ஆதரவு பெற்ற அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த் பயங்கரவாத இயக்கத்தின் தளபதியான ஜகிர் முசா என்பவனை பாதுகாப்பு படையினர்  சுட்டுக் கொன்றனர்.

  ஒசாமா பின் லேடன் தலைமையில் முன்னர் இயங்கிவந்த அல் கொய்தா அமைப்பின் கிளை அமைப்பாக இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த்  பயங்கரவாத இயக்கம்  இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #KashmirEncounter
  ஸ்ரீநகர்:

  காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். அவர்களை அடக்கி ஒடுக்கும் பணியில் போலீசும், ராணுவமும் ஈடுபட்டுள்ளனர்.

  இந்த நிலையில் புல்வாமா மாவட்டத்தில் ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அந்த வீட்டை ராணுவம் சுற்றி வளைத்தது.


  அதை அறிந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு ராணுவமும் சுட்டது. இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

  அதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. #KashmirEncounter
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று அதிகாலை மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 மத்திய படை வீரர்கள் காயம் அடைந்தனர். #PulwamaAttack
  ஸ்ரீநகர்:

  காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

  இன்று அதிகாலை காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

  இதில் ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் குண்டு காயம் அடைந்தனர். இதையடுத்து அந்தப் பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். காயம் அடைந்த 2 வீரர்களையும் மீட்டு புல்வாமா மாவட்ட ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

  காஷ்மீரின் கங்கன் பகுதியில் பாகிஸ்தானின் வங்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட மறுநாளில் பயங்கரவாதிகள் புல்வாமா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.  #PulwamaAttack
  ×