search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Memorial Day"

    • நாசரேத்தின் தந்தை எனப்படும் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயரின் 115-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • உதவி குரு பொன்செல்வின் மர்காஷிஸ் ஐயரின் கல்லறைக்கு மாலை அணிவித்தார்.

    நாசரேத்:

    நாசரேத்தின் தந்தை எனப்படும் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயரின் 115-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் உள்ள கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயரின் கல்லறைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூய யோவான் பேராலய தலைமை குரு மர்காஷிஸ் டேவிட் தலைமை தாங்கி ஆரம்ப ஜெபம் செய்தார். உதவி குரு பொன்செல்வின் மர்காஷிஸ் ஐயரின் கல்லறைக்கு மாலை அணிவித்தார்.

    இதில் சேகரசெயலாளர் செல்வின்,பொருளாளர் எபனேசர், சபை ஊழியர்கள் ஜெபராஜ், ஜாண்சன், ஜஸ்டின், ஜான் கிறிஸ்டோபர், ஜேசன், சாம்சன் மற்றும் சபைமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேராலயத்தில் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடந்தது. நாசரேத்தின் தந்தை கனோன் ஆர்தர் மர்காஷிஸ் 115- வது நினைவு தினத்தை முன்னிட்டு நாசரேத் மர்காஷிஸ் இசை ஐக்கிய குழு சார்பில் ஏழை, எளிய மக்கள் 278 பேருக்கு 5 கிலோ அரிசி, ½ கிலோ துவரம் பருப்பு போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்பு காலை, மதியம், மாலை திருமறையூர் வளாகத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

    மாலையில் நாசரேத்தின் தந்தை கனோன் ஆர்தர் மர்காஷிஸ் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு, அதன்பின் திருமறையூரில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு சென்று இரவு உணவு வழங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை மர்காஷிஸ் இசை ஐக்கிய குழுவினர் செய்திருந்தனர்.

    • நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • பொது மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு குறித்தும், அதன் செயல்பாடுகள் விளக்கி காட்டப்படும்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் நீத்தார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்து. மும்பை துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைக்கும் பணியின்போது உயர்நீத்த 66 தீயணைப்பு வீரர்கள் நினைவாக நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சந்திரசேகரன், பார்த்திபன் தலைமை தாங்கினர்.

    இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பேரூராட்சி தலைவர் அப்துல்வஹாப் சஹாராணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு நீத்தார் நினைவாக வைக்கப்பட்ட நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் தீ தொண்டு வாரம் நேற்று முதல் ஒரு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. பள்ளிகள்,கல்லூரிகள், மருத்துவமனை, பஸ் நிலையம் ஆகிய பொது மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு குறித்தும், அதன் செயல்பாடுகள் விளக்கி காட்டப்படும் என்று நிலைய அலுவலர் கூறினார்.

    • நினைவு தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம்

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மறைந்த சயீத் சாஹிப் ஒரு சகாப்தம் என்ற தலைப்பில் நினைவு தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நகரத் தலைவர் நவாஸ்கான் தலைமையில் நடக்கிறது. நகரச் செயலாளர் ஹாஜா குத்பு வரவேற்கிறார். மாவட்ட தொண்டரணி தலைவர் சகுபர் சாதிக்,எஸ்.டி.டி.யு. மாவட்டத் தலைவர் காதர்கனி, ராமநாதபுரம் மேற்கு தொகுதி செயலாளர் அக்பர் அலி, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான் பீவி முன்னிலை வகிக்கின்றனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ் கான், பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ேபசுகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் கட்சியின் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
    • ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நகர செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் தலைமையில் நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நகர செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் தலைமையில் நடைபெற்றது.

    முன்னாள் நகர செயலாளர் பக்கரிசாமி, ஜெ.பேரவை செயலாளர் ஏவி.மணி, நிர்வாகிகள் அம்சேந்திரன் முன்னாள் தகவல் தொழில் நுட்பபிரிவு மாவட்ட செயலாளர் நாடி.செல்வமுத்துக்குமரன், வழக்குரைஞர்கள் ஸ்ரீதர், நெடுஞ்செழியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்புகளை இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை பி.வி.பி. கார்த்தி மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    இதில் அதிமுக நிர்வாகிகள் இறைஎழில், கல்யாணசுந்தரம், சுரேஷ், பரணிதரன், ரவி சண்முகம், விஜயக்குமார், மாலினி, தெட்சிணாமூர்த்தி, ரத்தினவேல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கந்தர்வகோட்டையில் புல்வாமா நினைவு தினம் அனுசரிக்கபட்டது
    • 2019 பிப்ரவரி 14ல் தீவிரவாதிகளின் தற்கொலை படையால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.

    கந்தர்வகோட்டை:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2019 பிப்ரவரி 14ல் தீவிரவாதிகளின் தற்கொலை படையால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதனை நினைவு கூறும் வகையில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே உயிர் நீத்த வீரர்களின் உருவப் படங்களை வைத்து அவர்களின் வீரத்தை போற்றும் வகையில் அப்பகுதி இளைஞர்கள் விக்னேஷ் குமார் தலைமையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.காதலர் தினத்தை கொண்டாடும் இளைஞர்கள் மத்தியில் நாட்டின் தேசபக்தியை கொண்டாடும் இந்த இளைஞர்களை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.


    • உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
    • 500 பேருக்கு அன்னதானம்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான அமரர் வி.ராஜகோபால் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. சுவால்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு நகர த.மா.கா. தலைவரும் முன்னாள் துணை சேர்மனுமான கே.வி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    சமூக ஆர்வலர்கள் ஆர்.வெங்கட்ராமன் த.மா.கா. மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ஜி. மோகன் காந்தி ஆகியோர் முன்னிலையில் தியாகி ராஜகோபால் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் த.மா.கா. மாவட்ட தலைவர் ஆர்.ஹரிதாஸ் தியாகி ராஜகோபால் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொதுமக்கள் சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் த.மா.கா. நிர்வாகிகள் ஸ்ரீதரணி, முன்னாள் கவுன்சிலர் பி.உத்தமன், ஆறுமுகம், பாலகிருஷ்ணன், முனுசாமி, தேவேந்திரன், ரவி, அனந்தராமன், காங்கிரஸ் கட்சி மாவட்ட பிரதிநிதி சாமிதுரை, காங்கிரஸ் நகர தலைவர் பார்த்தசாரதி, காவேரிப்பாக்கம் நகர தலைவர் உதயகுமார், முன்னாள் திமுக கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம், உள்ளிட்ட ஏராளமான நகர பிரமுகர்கள் கலந்து கொண்டு தியாகி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • பரமக்குடியில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்தாலம்மன் கோவில் திடலை வந்தடைந்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தர்மர் எம்.பி. தலைமை தாங்கினார்.

    பரமக்குடி நகர செயலாளர் வின்சென்ட் ராஜா முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர். படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்பு ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்தாலம்மன் கோவில் திடலை வந்தடைந்தனர். அங்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர்-வக்கீல் நவநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செய லாளர் திசை நாதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர், மாவட்ட பொருளாளர் பால சுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் முத்தரசு, பரமக்குடி நகர ஐ.டி.பிரிவு செயலாளர் ஜாவா பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் லாட.செல்வம், சுரேஷ், வாணியவல்லம் ஊராட்சி மன்ற தலைவர் நாகநாதன், வெங்கலக்குறிச்சி செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சிவா தேவன், வர்த்தக அணி செயலாளர் பாபு, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் விஜய் கார்த்திக், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது
    • இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்

    ஜெயங்கொண்டம்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜிஆரின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் மாவட்ட துணைச் செயலாளருமான ராமஜெயலிங்கம் தலைமையில் திருச்சி சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக அண்ணா சிலையில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். இதேபோல் தி.க.கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் தலைமையில் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஒன்றிய தலைவர் கருணாநிதி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஒன்றிய அமைப்பாளர் தமிழ் சேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ஜெயங்கொண்டம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரியாரின் திருவுருவ சிலைக்கு ஜெயங்கொண்டம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமையில் ஜெயங்கொண்ட சட்டமன்ற தொகுதி செயலாளர் இலக்கியதாசன் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர்கள் சின்னராஜா, சுந்தர் மற்றும் இளையபாரதி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




    • பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது
    • தே.மு.தி.க. அலுவலகத்தில் பெரியார், எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

    அரியலூர்

    திராவிட கழக தலைவர் பெரியார், அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜிஆர், ஆகியோர் நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மண்டல தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரியார் சிலைக்கு மாநில பொறுப்பாளர் தனக்கோடி மருதவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் விஜய பார்த்திபன், நகரச் செயலாளர் கூத்தாண்டம் கார்த்திக் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் கழகம் சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அமைப்புச் செயலாளர் கலைவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் இராமஜெயவேல் தலைமையில் பெரியார், எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.




    • கறம்பக்குடியில் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
    • அ.இ.அ.தி.மு.க. ஈ.பி.எஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது

    கறம்பக்குடி

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மற்றும் நகர அ.இ.அ.தி.மு.க. ஈ.பி.எஸ் அணி சார்பில் அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜிஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு கரம்பக்குடி சீனி கடை முக்கத்திலிருந்து ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், கணேசன் மற்றும் நகர செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்று மீன் மார்க்கெட்டில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சாகுல் ஹமீது, தீத்தானிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம், குபேந்திரன், பல்லவராயன், முருகேசன், பந்துவக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், வாண்டான விடுதி ஒன்றிய கவுன்சிலர் திருநாவுக்கரசு, ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் பழனியப்பன், புது விடுதி சுலைமான் தகவல் தொடர்பு செயலாளர் முத்துசாமி, சேகர் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.




    • தந்தை பெரியார் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
    • 49-வது நினைவு நாள்

    திருச்சி:திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் க.வைரமணி ஒருஅறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,தந்தை பெரியாரின் 49வது நினைவு நாளான நாளை 24-ந் தேதி சனிக்கிழமை காலை 08.30 மணியளவில் மத்திய மாவட்ட திமுக சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் செயல்வீரர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு தந்தை பெரியாருக்கு நினைவஞ்சலி செலுத்திட வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
    • தூத்துக்குடி டூவிபுரத்தில் இருந்து மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர். 35-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க நாளை காலை 9 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எனது தலைமையில் தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் உள்ள மாவட்ட அலுவலகத்தின் முன்பு இருந்து மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்படுகிறது.

    முக்கிய வீதி வழியாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகம் சென்று அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகரபகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மகளிர்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு மரியாதை செலுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், நிர்வாகிகள் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து இடங்களிலும் அவரவர் பகுதிகளில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்த கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×