என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Markashis"

    • நாசரேத்தின் தந்தை எனப்படும் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயரின் 115-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • உதவி குரு பொன்செல்வின் மர்காஷிஸ் ஐயரின் கல்லறைக்கு மாலை அணிவித்தார்.

    நாசரேத்:

    நாசரேத்தின் தந்தை எனப்படும் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயரின் 115-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் உள்ள கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயரின் கல்லறைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூய யோவான் பேராலய தலைமை குரு மர்காஷிஸ் டேவிட் தலைமை தாங்கி ஆரம்ப ஜெபம் செய்தார். உதவி குரு பொன்செல்வின் மர்காஷிஸ் ஐயரின் கல்லறைக்கு மாலை அணிவித்தார்.

    இதில் சேகரசெயலாளர் செல்வின்,பொருளாளர் எபனேசர், சபை ஊழியர்கள் ஜெபராஜ், ஜாண்சன், ஜஸ்டின், ஜான் கிறிஸ்டோபர், ஜேசன், சாம்சன் மற்றும் சபைமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேராலயத்தில் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடந்தது. நாசரேத்தின் தந்தை கனோன் ஆர்தர் மர்காஷிஸ் 115- வது நினைவு தினத்தை முன்னிட்டு நாசரேத் மர்காஷிஸ் இசை ஐக்கிய குழு சார்பில் ஏழை, எளிய மக்கள் 278 பேருக்கு 5 கிலோ அரிசி, ½ கிலோ துவரம் பருப்பு போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்பு காலை, மதியம், மாலை திருமறையூர் வளாகத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

    மாலையில் நாசரேத்தின் தந்தை கனோன் ஆர்தர் மர்காஷிஸ் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு, அதன்பின் திருமறையூரில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு சென்று இரவு உணவு வழங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை மர்காஷிஸ் இசை ஐக்கிய குழுவினர் செய்திருந்தனர்.

    ×