search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Market"

    • மதுரை மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • இதனால் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் காய் கறிகளை வாங்கி வருகிறார்கள்.

    மதுரை

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி மதுரை மார்க் கெட்டுகளில் காய்கறி மற்றும் பூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது. மதுரை யிலும் வழக்கமான உற்சா கத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    மதுரை பகுதியில் உள்ள அனைத்து விநாயகர் கோவில் களிலும் விநாய கருக்கு சிறப்பு படையல் செய்து பூஜைகள் செய்யப் பட்டு வருகிறது. இதை யொட்டி விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் மதுரை மார்க்கெட்டுகளில் அதிக அளவில் திரண்டு உள்ளனர்.

    இதற்காக ஒவ்வொரு மார்க்கெட்டுகளிலும் வழக்கத்தைவிட கூடுதலாக கடைகள் அமைக்கப்பட்டுள் ளன. மேலும் முக்கிய சாலை களின் இருபுறங்களிலும் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான அவல், அரிசி பொறி, பொறிகடலை, வாழை கன்றுகள், அருகம் புல் மாலை, எருக்கலை மாலை மற்றும் பூஜை பொருட்கள் அதிக அளவில் விற்பனைக்காக வைக்கப் பட்டுள்ளன.

    பழ மார்க்கெட்டுகளில் ஆப்பிள், கொய்யா, மாதுளை, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பழங்களையும் பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். இதற்காக வழக்கத்தை விட மதுரை மார்க்கெட்டுகளில் அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்ப னைக்கு வந்துள்ளன. மதுரை காய்கறி மார்க்கெட் களில் காய்கறிகளை வாங்க வும் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகி றார்கள்.

    இதனால் நாட்டு காய்கறி களான தக்காளி, கத்தரி, வெண்டை, புடலை, சுரைக் காய் உள்ளிட்ட காய்கறிகள் வழக்கமான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற காய்கறி களும் சிறிதளவு விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் காய் கறிகளை வாங்கி வரு கிறார்கள்.

    தற்போது புரட்டாசி மாதம் என்பதால் அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன், மீன் உள்ளிட்ட கடைகளில் கூட்டம் குறைந்துள்ளன. விநாயகர் சதுர்த்தியை யொட்டி மதுரை காய்கறி மார்க் கெட்டுகளில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு உள்ளதால் வியாபாரம் களை கட்டி உள்ளது.

    இதன் காரணமாக பூஜை பொருட்கள்,பழங்களின் விலைகளும் சற்று அதி கரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    பூ -சிலை விற்பனை அமோகம்

    மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை 800 ரூபாய்க்கும், பிச்சி, முல்லை பூக்கள் 500 ரூபாய்க்கும் மற்ற பூக்கள் வழக்கமான விலை யிலும் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. பூக்களை வாங்கவும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகி றார்கள். விநாயகர் சதுர்த்திக்காக வீடுகளில் வைத்து வழிபாடு செய்வ தற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் கண்கவர் வண்ணங்களிலும், வடிவங்களிலும் முக்கிய மார்க்கெட்டுகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    களிமண்ணால் செய்யப்பட்ட இந்த விநாயகர் சிலைகளை வாங்க பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருவதால் மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டி உள்ளது.

    • வையாபுரி மணிகண்டன் கோரிக்கை
    • வியபாரிகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     புதுவை பெரியமார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று 4 கட்டமாக பிரித்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    பெரியமார்க்கெட் வியாபாரிகள் அடங்கிய குழுவை அமைத்து வியாபாரிகளின் வசதிக்கு ஏற்ப புதிய வரைபடம் தயாரித்த பின்னர்தான் கட்டுமான பணியை தொடங்க வேண்டும்.

    கட்டுமான பணியினால் வியபாரிகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும்.

    எனவே தற்காலிக இடமாற்றம் செய்யப்படும் கடை வியாபாரிகளுக்கு ரூ.50 ஆயிரமும், அடிக்காசு வியாபாரிகளுக்கு ரூ.25 ஆயிரமும், காலி செய்யப்படும் கடைகள், அடிக்காசு கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரமும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

    கடைகள், அடிக்காசு கடைகளை காலி செய்த நாள் முதல், கட்டுமான பணிகளை முடித்து வியாபாரிகளிடம் மீண்டும் கடைகளை ஒப்படைக்கும் வரை இந்த நிவாரணத்தை வழங்குவதாக முதல்- அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வேண்டுகோள்
    • காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின் போது இதை எதிர்காமல் தற்போது ஆட்சியின் போது எதிர்த்து மலிவு அரசியல் செய்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள பெரிய மார்க்கெட் கட்டிடங்கள் 200 ஆண்டுகள் பழமையானதாகும். மார்க்கெட்டை நவீனம யமாக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2017-ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 55 கோடி ஒதுக்கினார்.

    அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின் போது இதை எதிர்காமல் தற்போது ஆட்சியின் போது எதிர்த்து மலிவு அரசியல் செய்கின்றனர். இதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    எனவே வியாபாரிகள் எதிர்கட்சிகளின் தூண்டுதலுக்கு செவிசாய்க்காமல் பொதுமக்களின் நலன் கருதி தொலைநோக்கு பார்வையோடு செயல்பட வேண்டும்.

    மார்க்கெட் பகுதி தற்போது சுகாதாரமற்றும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. ஏற்கனவே 2 முறை தீ விபத்துக்குள்ளா கியுள்ளது.

    எனவே பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஈரடுக்கு வாகன நிறுத்துமிடம், சுகாதார வசதியுடன் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் புதிய கட்டுமானங்கள் அமைக்க வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பெரிய மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்தனர்.
    • முன்னாள் எம்.பி. கண்ணன் பெரிய் மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை பெரிய் மார்க்கெட்டை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்ட அரசு முடிவு செய்துள்ளது

    இதற்கு பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முழுமையாக இடிப்பதற்கு பதிலாக பகுதி பகுதியாக கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி பல கட்ட போராட்டமும் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    பெரிய மார்க்கெட் வியாபாரிகளுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து வெளியேறிய முன்னாள் எம்.பி. கண்ணன் பெரிய் மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.

    இதனையடுத்து பெரிய மார்க்கெட் குபேர் அங்காடி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் ஒன்றினைந்து முன்னாள் எம்.பி. கண்ணனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.

    அப்போது அறிக்கை வாயிலாக பெரிய மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

    மேலும் நாளை திங்கட்கிழமை நடைபெறும் கருப்புக் கொடி ஏற்றி கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தந்து பங்கேற்க வேண்டுகோள் விடுத்தனர்.

    இதற்கு தன்னுடைய ஆதரவு எப்போதும் வியாபாரிகளுக்கு உண்டு என முன்னாள் எம்.பி. கண்ணன் தெரிவித்தார். இதனால் நாளை நடைபெறும் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் கண்ணன் பங்கேற்கலாம் என தெரிகிறது.

    • முன்னாள் எம்.பி. கண்ணன் வலியுறுத்தல்
    • பெரியமார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை முழுமையாக கவனத்திலும், நம்பகத்தன்மையோடும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெரியமார்க்கெட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் நவீனப்படுத்த அரசு விரும்புவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த விஷயத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, பெரியமார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை முழுமையாக கவனத்திலும், நம்பகத்தன்மையோடும் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறும் கருத்துக்களை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமையாகும்.

    இந்த விஷயத்தில் வேறு விதமான கவுரவ பிரச்சினை ஏதும் இருக்க தேவையில்லை. அனைத்து எதிர்கட்சிகளும் இதே கருத்தையே வெளிப்ப டுத்தி உள்ளனர்.

    புதுவை அரசு உடனடியாக பெரி யமார்க்கெட் வியாபாரிகளின் கூட்டத்தை கூட்டி, கலந்துபேசி நல்ல முடிவெடுப்பதே ஒரு ஸ்மார்ட்டான செயல்பாடாக இருக்கும் என்பதை அரசுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பா.ஜனதா வலியுறுத்தல்
    • நகராட்சியால் கட்டப்பட்டுள்ள முருங்கப்பாக்கம் மார்க்கெட் செயல்படாமல் உள்ளதே முக்கிய காரணமாக உள்ளது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியி ருப்பதாவது:-

    புதுச்சேரி- கடலூர் சாலையில் இருந்து கொம்பாக்கம் செல்லும் முருங்கப்பாக்கம் சந்திப்பில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு புதுச்சேரி நகராட்சியால் கட்டப்பட்டுள்ள முருங்கப்பாக்கம் மார்க்கெட் செயல்படாமல் உள்ளதே முக்கிய காரணமாக உள்ளது.

    மார்க்கெட்டில் மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் வியாபாரிகள் கொம்பாக்கம் சாலை ஓரத்தில் கடைகளை வைத்துள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    நகராட்சி அதிகாரிகளின் பொறுபபற்ற செயலால் முருங்கப்பாக்கம் பகுதி மக்கள் மட்டுமின்றி கொம்பாக்கம் வழியாக செல்பவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே முருங்கப்பாக்கம் மார்க்கெட்டை சீரமைத்து மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்து. சாலையோர வியாபாரிகளை மார்க் கெட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    • மார்க்கெட்டுகளில் விவசாயிகளுக்கு ஏலமுறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
    • தியாகி குமரன் மார்க்கெட்டில் தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வருவது வழக்கம்.

    கோவை:

    தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இன்னொருபுறம் ஓட்டல்களில் தக்காளி சட்னி, வெங்காய பொரியல் ஆகியவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது சாப்பாட்டு பிரியர்களை ஏமாற்றம் அடைய செய்து உள்ளது.

    கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ளூர் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    இதுதவிர வெளி மாவட்டங்களில் இருந்தும் சரக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. கோவை மார்க்கெட்டுகளில் விவசாயிகளுக்கு ஏலமுறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அங்கு விளையும் காய்கறிகளை அறுவடை செய்வதில் விவசாயிகளுக்கு சிரமநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் மார்க்கெட்டுக்கு விளைபொருட்களை கொண்டு வரவில்லை. இன்னொருபுறம் வெளி மாவடடங்களில் இருந்தும் சரக்கு காய்கறி லாரிகளின் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

    கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வருவது வழக்கம். ஆனால் இங்கு தற்போது 40 லாரிகள் மட்டுமே வந்து செல்கின்றன.

    கோவை காய்கறி மார்க்கெட்களில் உள்ளூர் காய்கறி வரத்து குறைவு, வெளியூர் சரக்கு லாரிகளின் வருகை குறைவு ஆகியவை காரணமாக சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியது.

    கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை தக்காளி விலை கிலோ ரூ. 40 ஆக இருந்தது. ஆனால் தற்போது 120 ரூபாயாக உள்ளது. அதேபோல சின்ன வெங்காயத்தின் விலை முன்பு ரூ.40 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு ரூ.120 ஆக உள்ளது.

    கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் பெரியஅளவில் இல்லை. எனவே விவசாயிகள் மீண்டும் சாகுபடி பணிகளை தொடங்கி விட்டனர். அதேபோல வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகளில் காய்கறி வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    எனவே கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் விலை சிறிதுசிறிதாக குறைய தொடங்கி உள்ளது. தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஒருகிலோ சின்ன வெங்காயம் ரூ.170 ஆக இருந்தது. அதன் விலையில் தற்போது 50 ரூபாய் குறைந்து, ஒருகிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் தக்காளி விலை மட்டும் குறைாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. காய்கறி மார்க்கெட்டுகளில் நேற்று வரை ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.110, ஆப்பிள் தக்காளி ரூ.140 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு நாட்டு தக்காளியின் விலை ரூ.10 அதிகரித்து தற்போது ரூ.120க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் தக்காளியின் விலையில் மாற்றம் இல்லை.

    கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்தபோதிலும், தக்காளியின் விலை அதிகரிப்பு பொதுமக்களை கவலைப்பட வைத்து உள்ளது.

    • வியாபாரியான மகாராஜன் ஆத்திரம் அடைந்து ராஜாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
    • தக்காளி வாங்க பேரம் பேசும்போது பிரச்சினை ஏற்பட்டு அடிதடியில் முடிந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துராமலிங்க தேவர் தினசரி மார்க்கெட் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால், அங்கு செயல்பட்டு வந்த கடைகள் அனைத்தும் நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி புதிய பஸ் நிலையம் அருகே தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

    அதே நேரத்தில் ஒரு பகுதி வியாபாரிகள் திட்டங்குளம் பகுதியில் தனியாக இடம் வாங்கி 33 கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அங்கு மகாராஜன் என்ற வியாபாரி கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று அங்கு தக்காளி வாங்குவதற்காக குவாலிஸ் ராஜா என்ற நபர் வந்துள்ளார். தக்காளி ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அவரோ ரூ.10-க்கு ஒரு கிலோ தருமாறு கேட்டுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், வியாபாரியான மகாராஜன் ஆத்திரம் அடைந்து ராஜாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்து சென்ற ராஜா, தனது நண்பர்கள் சிலரை அழைத்து வந்து மகாராஜனை பதிலுக்கு தாக்கி உள்ளார்.

    இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், தக்காளி வாங்க பேரம் பேசும்போது பிரச்சினை ஏற்பட்டு அடிதடியில் முடிந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • பாளை மார்க்கெட்டில் இன்று இஞ்சி விலை மேலும் அதிகரித்தது.
    • ஜண்டா ரக வெங்காயம் கிலோ ரூ.180-க்கு விற்பனையாகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.

    வடமாநிலங்களில் பெய்து வரும் மழை, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி, சாம்பார் வெங்காயம், இஞ்சி, மிளகாய் உள்ளிட்டவைகளின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில் பாளை மார்க்கெட்டில் இன்று இஞ்சி விலை மேலும் அதிகரித்தது. நேற்று கிலோ ரூ.300-க்கு விற்ற நிலையில் இன்று மேலும் ரூ.30 அதிகரித்து கிலோ ரூ.330 ஆக உயர்ந்தது. இதேப்போல தக்காளி கிலோ ரூ.120-க்கும், குண்டு மிளகாய் ரூ.130-க்கும், சாம்பார் மிளகாய் ரூ.120- க்கும் விற்பனையானது.

    சாம்பார் வெங்காயம் தரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. இதில் ஜண்டா ரக வெங்காயம் கிலோ ரூ.180-க்கும், நாட்டு வெங்காயம் ரூ.160-க்கும் விற்பனையாகிறது.

    பீன்ஸ் கிலோ ரூ.100, அவரை ரூ.80, கேரட் ரூ.60க்கு விற்பனையாவதாக வியாபாரி கள் தெரிவித்தனர். அதே நேரம் புடலங்காய், பீட்ரூட், சவ்சவ் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை குறைவாக இருப்பதாகவும் அவை கிலோ ரூ.40க்கும் விற்கப்படு வதாக வியாபாரிகள் கூறினர்.

    பாவூர்சத்திரம்

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.150, மிளகாய் ரூ.120க்கும் விற்பனையாகிறது.

    • தினமும் சுமார் 4,500 கிலோ தக்காளி உழவர் சந்தைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
    • வரத்து குறைவால் தக்காளி ஒரு கிலோ ரூ.130 வரை விற்பனையாகிறது.

    நெல்லை:

    நெல்லையில் மகராஜநகர், மேலப்பாளையம், கண்டியப்பேரி, என்.ஜி.ஓ. காலனி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றது.

    இங்கு தினமும் சுமார் 4,500 கிலோ தக்காளி உழவர் சந்தைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் மகாராஜநகர் உழவர் சந்தையில் 2,800 கிலோவும், மேலப்பாளையத்தில் 1,200 கிலோவும், மீதமுள்ள 3 உழவர் சந்தைகளில் 500 கிலோ தக்காளியும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    தற்போது வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ ரூ.130 வரை விற்பனையாகிறது. இதனை கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவ ட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக உழவர் சந்தைகளில், விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற தக்காளி பழங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து எடுத்து மகராஜநகர் மற்றும் மேலப்பாளையம் உழவர் சந்தைகளில் நுகர்வோருக்கு குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

    மாவட்டத்தில் ஆண்டு தோறும் தக்காளி சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. தக்காளியில் மிக முக்கிய உணவு ஆதாரமான லைக்கோபின் என்ற ஆன்டி ஆக்ஸிடண்டு உள்ளது. இது இதய நோய் மற்றும் புற்று நோயின் அபாயத்தை குறைப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் தருகிறது.

    இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.98-க்கு விற்கப்படுவதாக தோட்டக்கலை துணை இயக்கு நர் பாலகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.

    • அரசின் பல கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை.
    • பெரிய மார்க்கெட் கட்டிடத்தை பழமை மாறாமல் கூடுதல் வசதிகளுக்கு மட்டும் புதிய கட்டுமானத்தை செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     பெரிய மார்க்கெட் கட்டுமான பணியை 6 மாதத்தில் முடித்து விடுவோம், அதுவரை வேறு இடத்திற்கு செல்லுங்கள் என வியாபாரிகளிடம் அரசு சொல்வது ஏமாற்று வேலையாகும். அரசின் பல கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை.

    இப்படிப்பட்ட நிலையில் அரசு சொல்வதை நம்பி பெரிய மார்க்கெட்டை காலி செய்து விட்டால் வியாபாரிகளும் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்க ளும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்க கூடிய நிலை ஏற்படும் என அஞ்சுகிறார்கள்.

    எனவே அரசு வியாபாரி களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்தும் அவர்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்த வேணடும். வியாபாரிகளுக்கு பாதிப்பு வராத வகையிலும், பாரம்பரியமான பெரிய மார்க்கெட் கட்டிடத்தை பழமை மாறாமல் கூடுதல் வசதிகளுக்கு மட்டும் புதிய கட்டுமானத்தை செய்ய வேண்டும்.

    மேலும் தற்போது அங்கு வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் குறித்து முழுமையான அனைத்து விவரங்களும் பெற்று அவர்களுக்கே அந்த இடத்தை மீண்டும் ஒப்படைக்கும் வகையில் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • பகுதி வாரியாக கடைகளை கட்ட வலியுறுத்தல்
    • மார்க்கெட் கட்டுமானப் பணி நடைபெறும் இடைப்பட்ட காலத்தில் வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை நகரின் மைய பகுதியான ரங்கப்பிள்ளை வீதி நேரு வீதி இடையில் பெரியமார்க்கெட் உள்ளது.

    இங்கு 500-க்கும் மேற்பட்ட நிரந்தர கடை களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடிக்காசு கடை களும் உள்ளது. நாளுக்குநாள் நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப மார்க்கெட் நெரிசல் மிகுந்த பகுதியாக மாறியுள்ளது. மார்க்கெட்டிற்கு வரும் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு உள்ளது.

    இதை கருத்தில்கொண்டு மார்க்கெட்டை முழுமையாக இடித்துவிட்டு, ரூ.36 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மார்க்கெட்டை நவீனப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

    மார்க்கெட் கட்டுமானப் பணி நடைபெறும் இடைப்பட்ட காலத்தில் வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்திருந்தனர்.

    இதற்காக ரோடியர் மில் திடலுக்கு தற்காலிகமாக பெரிய மார்க்கெட்டை மாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது. பெரிய மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பெரிய மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் வருவாய் இழப்பு நேரிடும்.

    கடைகளின் பொருட்க ளுக்கு பாதுகாப்பு இருக்காது. குறித்து காலத்தில் பணிகளை முடித்து மீண்டும் கடைகளை ஒப்படைக்க ஆண்டுக் கணக்கில் காலதாமதம் ஏற்படும். எனவே ஒட்டு மொத்தமாக இடிக்காமல், பகுதி, பகுதியாக கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதை வலியுறுத்தி இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரியமார்க்கெட்டில் உள்ள மீன் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் அடைத்து வியாபாரிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் வியாபாரிகள் அனைவரும் திருவள்ளுவர் நகரில் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தினர்.

    கூட்டத்துக்கு மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொறுப் பாளர்கள் சிவகுருநாதன், சுப்பிரமணி, பாலாகுமார், குருசாமிநாயுடு, முருகன், அருள், சுரேஷ், ஆறுமுகம், உதயகுமார், செல்வம், செல்வக்குமார், ஜெயவேல், ரமா, மலர், மணி, இப்ராகிம், கந்தசாமி, கணபதி, ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்த னர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செய லாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பெரிய மார்க்கெட்டை ஒட்டு மொத்தமாக இடிப்பதை கைவிட்டு தேவையற்ற சில பகுதிகளை இடித்து கடைகளை கட்டி வியா பாரிகளுக்கு வழங்க வேண்டும். பழைய கடை களை இடிக்காமல் மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும். கழிப்பறைகளை இடித்துவிட்டு நவீன கழிப்பிடங்களாகவும், உட்புற சாலைகளை சீரமைத்தும் தர வேண்டும்.

    இந்த பணிகளை மேற்கொள்ள இடையூறாக இருக்கும் கடைகளை நேரு வீதி பழைய சிறைச்சாலை வளாகத்தில் தற்காலிகமாக கடை அமைத்து செயல்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர். மதியம் 2 மணிக்கு மேல் மீண்டும் கடைகளை திறந்த வியாபாரத்தை மேற்கொண்டனர்.

    ×