search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம்
    X

    மேலமாசி வீதியில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை ஆர்வத்துடன் வாங்கிய ெபாதுமக்கள்.

    மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம்

    • மதுரை மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • இதனால் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் காய் கறிகளை வாங்கி வருகிறார்கள்.

    மதுரை

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி மதுரை மார்க் கெட்டுகளில் காய்கறி மற்றும் பூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது. மதுரை யிலும் வழக்கமான உற்சா கத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    மதுரை பகுதியில் உள்ள அனைத்து விநாயகர் கோவில் களிலும் விநாய கருக்கு சிறப்பு படையல் செய்து பூஜைகள் செய்யப் பட்டு வருகிறது. இதை யொட்டி விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் மதுரை மார்க்கெட்டுகளில் அதிக அளவில் திரண்டு உள்ளனர்.

    இதற்காக ஒவ்வொரு மார்க்கெட்டுகளிலும் வழக்கத்தைவிட கூடுதலாக கடைகள் அமைக்கப்பட்டுள் ளன. மேலும் முக்கிய சாலை களின் இருபுறங்களிலும் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான அவல், அரிசி பொறி, பொறிகடலை, வாழை கன்றுகள், அருகம் புல் மாலை, எருக்கலை மாலை மற்றும் பூஜை பொருட்கள் அதிக அளவில் விற்பனைக்காக வைக்கப் பட்டுள்ளன.

    பழ மார்க்கெட்டுகளில் ஆப்பிள், கொய்யா, மாதுளை, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பழங்களையும் பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். இதற்காக வழக்கத்தை விட மதுரை மார்க்கெட்டுகளில் அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்ப னைக்கு வந்துள்ளன. மதுரை காய்கறி மார்க்கெட் களில் காய்கறிகளை வாங்க வும் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகி றார்கள்.

    இதனால் நாட்டு காய்கறி களான தக்காளி, கத்தரி, வெண்டை, புடலை, சுரைக் காய் உள்ளிட்ட காய்கறிகள் வழக்கமான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற காய்கறி களும் சிறிதளவு விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் காய் கறிகளை வாங்கி வரு கிறார்கள்.

    தற்போது புரட்டாசி மாதம் என்பதால் அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன், மீன் உள்ளிட்ட கடைகளில் கூட்டம் குறைந்துள்ளன. விநாயகர் சதுர்த்தியை யொட்டி மதுரை காய்கறி மார்க் கெட்டுகளில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு உள்ளதால் வியாபாரம் களை கட்டி உள்ளது.

    இதன் காரணமாக பூஜை பொருட்கள்,பழங்களின் விலைகளும் சற்று அதி கரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    பூ -சிலை விற்பனை அமோகம்

    மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை 800 ரூபாய்க்கும், பிச்சி, முல்லை பூக்கள் 500 ரூபாய்க்கும் மற்ற பூக்கள் வழக்கமான விலை யிலும் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. பூக்களை வாங்கவும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகி றார்கள். விநாயகர் சதுர்த்திக்காக வீடுகளில் வைத்து வழிபாடு செய்வ தற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் கண்கவர் வண்ணங்களிலும், வடிவங்களிலும் முக்கிய மார்க்கெட்டுகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    களிமண்ணால் செய்யப்பட்ட இந்த விநாயகர் சிலைகளை வாங்க பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருவதால் மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டி உள்ளது.

    Next Story
    ×