என் மலர்
புதுச்சேரி

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வருமாறு முன்னாள் எம்.பி. கண்ணனுக்கு பெரிய மார்க்கெட் வியாபாரிகள் அழைப்புவிடுத்த காட்சி.
முன்னாள் எம்.பி. கண்ணனுக்கு பெரிய மார்க்கெட் வியாபாரிகள் அழைப்பு
- பெரிய மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்தனர்.
- முன்னாள் எம்.பி. கண்ணன் பெரிய் மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.
புதுச்சேரி:
புதுவை பெரிய் மார்க்கெட்டை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்ட அரசு முடிவு செய்துள்ளது
இதற்கு பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முழுமையாக இடிப்பதற்கு பதிலாக பகுதி பகுதியாக கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி பல கட்ட போராட்டமும் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பெரிய மார்க்கெட் வியாபாரிகளுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து வெளியேறிய முன்னாள் எம்.பி. கண்ணன் பெரிய் மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.
இதனையடுத்து பெரிய மார்க்கெட் குபேர் அங்காடி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் ஒன்றினைந்து முன்னாள் எம்.பி. கண்ணனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.
அப்போது அறிக்கை வாயிலாக பெரிய மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்தனர்.
மேலும் நாளை திங்கட்கிழமை நடைபெறும் கருப்புக் கொடி ஏற்றி கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தந்து பங்கேற்க வேண்டுகோள் விடுத்தனர்.
இதற்கு தன்னுடைய ஆதரவு எப்போதும் வியாபாரிகளுக்கு உண்டு என முன்னாள் எம்.பி. கண்ணன் தெரிவித்தார். இதனால் நாளை நடைபெறும் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் கண்ணன் பங்கேற்கலாம் என தெரிகிறது.






