search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் தக்காளிக்கு பேரம் பேசிய தகராறில் கோஷ்டி மோதல்- 6 பேர் மீது வழக்குப்பதிவு
    X

    கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் தக்காளிக்கு பேரம் பேசிய தகராறில் கோஷ்டி மோதல்- 6 பேர் மீது வழக்குப்பதிவு

    • வியாபாரியான மகாராஜன் ஆத்திரம் அடைந்து ராஜாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
    • தக்காளி வாங்க பேரம் பேசும்போது பிரச்சினை ஏற்பட்டு அடிதடியில் முடிந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துராமலிங்க தேவர் தினசரி மார்க்கெட் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால், அங்கு செயல்பட்டு வந்த கடைகள் அனைத்தும் நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி புதிய பஸ் நிலையம் அருகே தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

    அதே நேரத்தில் ஒரு பகுதி வியாபாரிகள் திட்டங்குளம் பகுதியில் தனியாக இடம் வாங்கி 33 கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அங்கு மகாராஜன் என்ற வியாபாரி கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று அங்கு தக்காளி வாங்குவதற்காக குவாலிஸ் ராஜா என்ற நபர் வந்துள்ளார். தக்காளி ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அவரோ ரூ.10-க்கு ஒரு கிலோ தருமாறு கேட்டுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், வியாபாரியான மகாராஜன் ஆத்திரம் அடைந்து ராஜாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்து சென்ற ராஜா, தனது நண்பர்கள் சிலரை அழைத்து வந்து மகாராஜனை பதிலுக்கு தாக்கி உள்ளார்.

    இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், தக்காளி வாங்க பேரம் பேசும்போது பிரச்சினை ஏற்பட்டு அடிதடியில் முடிந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    Next Story
    ×