search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prices rise"

    • பாளை மார்க்கெட்டில் இன்று இஞ்சி விலை மேலும் அதிகரித்தது.
    • ஜண்டா ரக வெங்காயம் கிலோ ரூ.180-க்கு விற்பனையாகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.

    வடமாநிலங்களில் பெய்து வரும் மழை, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி, சாம்பார் வெங்காயம், இஞ்சி, மிளகாய் உள்ளிட்டவைகளின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில் பாளை மார்க்கெட்டில் இன்று இஞ்சி விலை மேலும் அதிகரித்தது. நேற்று கிலோ ரூ.300-க்கு விற்ற நிலையில் இன்று மேலும் ரூ.30 அதிகரித்து கிலோ ரூ.330 ஆக உயர்ந்தது. இதேப்போல தக்காளி கிலோ ரூ.120-க்கும், குண்டு மிளகாய் ரூ.130-க்கும், சாம்பார் மிளகாய் ரூ.120- க்கும் விற்பனையானது.

    சாம்பார் வெங்காயம் தரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. இதில் ஜண்டா ரக வெங்காயம் கிலோ ரூ.180-க்கும், நாட்டு வெங்காயம் ரூ.160-க்கும் விற்பனையாகிறது.

    பீன்ஸ் கிலோ ரூ.100, அவரை ரூ.80, கேரட் ரூ.60க்கு விற்பனையாவதாக வியாபாரி கள் தெரிவித்தனர். அதே நேரம் புடலங்காய், பீட்ரூட், சவ்சவ் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை குறைவாக இருப்பதாகவும் அவை கிலோ ரூ.40க்கும் விற்கப்படு வதாக வியாபாரிகள் கூறினர்.

    பாவூர்சத்திரம்

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.150, மிளகாய் ரூ.120க்கும் விற்பனையாகிறது.

    • இரு சீசன்களில் சாம்பல் பூசணி சாகுபடி செய்யப்படுகிறது
    • அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது.

    மடத்துக்குளம் : 

    உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக இரு சீசன்களில் சாம்பல் பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த தண்ணீரில் இச்சாகுபடியை மேற்கொள்ள முடியும் என்பதால் முன்பு தாந்தோணி, துங்காவி, சின்னப்பன்புதூர், மலையாண்டிகவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்களில் சாம்பல்பூசணி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது.

    ஆனால் கடந்தாண்டு போதிய விலை கிடைக்கவில்லை.கிலோ 1 ரூபாய் அளவுக்கு விலை சரிந்ததால் காய்களை அறுவடை செய்யாமல் விளைநிலங்களிலேயே அப்படியே விடும் நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த சீசனில் சாம்பல்பூசணி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. மேலும் அதிக வெயில் காரணமாக நடவு செய்த விதைகள் போதிய அளவு முளைவிடவில்லை.

    இவ்வாறு பல்வேறு காரணங்களால் உற்பத்தி குறைந்த நிலையில் தேவை அதிகரிப்பால் தற்போது சாம்பல்பூசணி கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. உள்ளூர் சந்தையில் கிலோ 10-15 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.கேரள வியாபாரிகள் உடுமலை பகுதிக்கு நேரடியாக வந்து சாம்பல் பூசணியை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் விலை மேலும் உயர்ந்து வருகிறது.விவசாயிகள் கூறுகையில், சாம்பல் பூசணி சாகுபடியில், நோய்த்தாக்குதலால் மகசூல் குறைந்துள்ளது. கடந்தாண்டு விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டது. கேரளாவில் உணவில் மட்டுமல்லாது மருந்துகள் தயாரிப்புக்கும், சாம்பல்பூசணியை பயன்படுத்துகின்றனர். எனவே அம்மாநிலத்துக்கு அதிக அளவு காய்களை கொள்முதல் செய்கின்றனர் என்றனர். 

    • வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
    • ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

     மூலனூர்  :

    தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் கன்னிவாடி ஆட்டுச்சந்தையும் ஒன்று. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

    அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் ஆடுகளுக்கு நல்ல தீனி இருப்பதால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை.

    இதனால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த மூன்று வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விவசாயி ஒருவர் கூறுகையில், தற்போது கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளதால் கால்நடைகளுக்கு தேவையான தீனிகள் போதிய அளவில் இருப்பதால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் .

    இதன் காரணமாக ஆடுகளை விற்க விவசாயிகளிடம் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரத்தில் ரூ.100 அதிகரித்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் 10 கிலோ எடை கொண்ட ஆடு சுமார் ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.

    தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொடர் பெட்ரோல், டீசல் விலையேற்றம் மூலம் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கின்றது. நாட்டு பொருளாதார சுமையை விலையேற்றத்தின் மூலம் மக்கள் மீது திணிப்பது ஏற்புடையதல்ல. கர்நாடகத் தேர்தலின்போது 19 நாட்களாக பெட்ரோல், டீசலின் விலையை ஏற்றாமலும் தேர்தல் முடிவுக்கு பிறகு தொடர் விலையேற்றம் செய்வதும் மக்களை ஏமாற்றும் செயல்.

    மக்கள் நலன், தொழில்கள், வணிகம் உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு மத்திய அரசு அறிக்கை மட்டுமே விடாமல், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பலமுறை வலியுறுத்தியிருந்தது போல பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு இவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும் எனவும், மாநில அரசின் வருவாய் பாதிக்கும் என்ற போதிலும் தமிழக அரசு பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் கொண்டுவருவதற்கு முழு ஆதரவு நல்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×