search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manish sisodia"

    • மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது.
    • மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-22-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம் ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த குற்றப் பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகரராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 23-ம் தேதி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் சி.பி.ஐ. தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலை முதலே சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு மாலையில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சி.பி.ஐ. இன்று கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் (மார்ச் 4 வரை) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    • மதுபான கொள்ளை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
    • எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றார்.

    மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் நேற்று முன்தினம் மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

    மதியம் 12 மணிக்கு தொடங்கி சுமார் 8 மணிநேரம் விசாரணை நீடித்தது. பெரும்பாலான கேள்விகளுக்கு மணீஷ் சிசோடியா பதில் அளிக்கவில்லை.

    அவர் 90 சதவீத கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் கூறினார். இதைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்

    இந்நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுக்கு கேரள முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு பாஜக ஆட்சியில் மத்திய அரசின் துறைகளை எப்படி தவறாக பயன்படுத்துகிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம். இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இத்தகைய அடக்குமுறைகள் நமது தேசத்தின் அடித்தளத்தையே குலைத்துவிடும். அதை எதிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு ஆம்ஆத்மி கட்சி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
    • ஆம் ஆத்மி தொண்டர்கள் டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    கடந்த 2021-22-ம் ஆண்டு ஆம்ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம்ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    மதுபான வியாபாரிகளில் சிலருக்கு மட்டும் உரிமம் வழங்குவதற்காக ஆம்ஆத்மி தலைவர்கள் சாதகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாகவும் அந்த பணத்தை ஆம்ஆத்மி தலைவர்கள் கோவா சட்டசபை தேர்தலில் செலவு செய்ததாகவும் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த குற்றப்பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகர ராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 23-ந்தேதி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் விசாரிக்க முடிவு செய்தனர். மதுபானக் கொள்கையை வெளியிட்ட கலால் துறை மந்திரி என்பதால் அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியமாக கருதப்பட்டது.

    ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் நேற்று மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். மதியம் 12 மணிக்கு தொடங்கி சுமார் 8 மணிநேரம் விசாரணை நீடித்தது.

    பெரும்பாலான கேள்விகளுக்கு மணீஷ் சிசோடியா பதில் அளிக்கவில்லை. அவர் 90 சதவீத கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் கூறினார். இதைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை கைது செய்வதாக சி.பி.ஐ. அதிகாரிகள் அறிவித்தனர்.

    இரவு முழுக்க அவர் சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டார். இரவு உணவும் அவருக்கு அங்கேயே வழங்கப்பட்டது. இன்று காலை அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் சான்றிதழ் வழங்கினார்கள்.

    இதையடுத்து மணீஷ் சிசோடியா மீண்டும் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் 2-வது நாளாக மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அவரை இன்று பிற்பகல் சி.பி.ஐ. கோர்ட்டில் அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர்.

    மணீஷ் சிசோடியாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று பிற்பகல் அவர்கள் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். எனவே மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்த எத்தனை நாட்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது இன்று பிற்பகல் தெரியும்.

    மணீஷ் சிசோடியா மதுபானக்கொள்கையில் திருத்தம் செய்து பலகோடி ரூபாய் ஊழல் செய்ததற்கு ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் தகவல்கள், செல்போன் உரையாடல் பதிவுகள், இ-மெயில்கள் மற்றும் செயலாளர் அரவிந்த் வாக்குமூலம் ஆகியவை மணீஷ் சிசோடியா ஊழல் செய்ததற்கு ஆதாரங்களாக உள்ளன என்று சிபி.ஐ. தெரிவித்துள்ளது.

    மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு ஆம்ஆத்மி கட்சி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி தொண்டர்கள் டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    சி.பி.ஐ. அலுவலகம் முன்பும், பா.ஜ.க. அலுவலகம் முன்பும் ஆம்ஆத்மி தொண்டர்கள் போராட்டம் நடத்த திரண்டனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிர் போராட்டம் நடத்த பா.ஜ.க. தொண்டர்களும் குவிந்தனர்.

    இதனால் டெல்லியின் பல பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அலுவலகம், பா.ஜ.க. அலுவலகம் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • சிசோடியாவின் கைது நடவடிக்கையால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
    • ஏழை குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்ய மணீஷ் சிசோடியா கடினமாக உழைத்துள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். இன்று 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்த கைது நடிவடிக்கைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

    மணீஷ் அப்பாவி. அவர் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு கேவலமான அரசியல். சிசோடியாவின் கைது நடவடிக்கையால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் அனைத்தையும் புரிந்துகொண்டுள்ளனர். நிச்சயம் இதற்கு பதிலளிப்பார்கள். இந்த நடவடிக்கை எங்கள் உத்வேகத்தை மேலும் அதிகரிக்கும். எங்கள் போராட்டம் வலுவடையும்.

    இவ்வாறு கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

    'ஒவ்வொரு ஏழை வீட்டில் இருந்தும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்ய மணீஷ் சிசோடியா கடினமாக உழைத்துள்ளார். அவர் ஒரு நேர்மையான, ஒழுக்கமான மனிதர். ஆனால் இன்று அவரை கைது செய்துள்ளனர். நல்ல மனிதர்களையும் தேசபக்தர்களையும் கைது செய்கிறார்கள், அதே சமயம் அவர்களது நண்பர்கள் வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறார்கள்' என கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறினார்.

    • சிபிஐ நடத்திய விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
    • ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-22-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம் ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த குற்றப்பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகரராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 23-ந்தேதி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    இதன் தொடர்ச்சியாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலை முதலே சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு மாலையில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.

    'சி.பி.ஐ. விசாரணையின் போது சிசோடியாவை கைது செய்ய உள்ளனர்' என்று முதல்வர் கெஜ்ரிவால் ஏற்கனவே தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆம்ஆத்மி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டால் தடுத்து நிறுத்தும் வகையில் அதிரடி படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
    • விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன் கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    கடந்த 2021-22-ம் ஆண்டு ஆம்ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம்ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    மதுபான வியாபாரிகளில் சிலருக்கு மட்டும் உரிமம் வழங்குவதற்காக ஆம்ஆத்மி தலைவர்கள் சாதகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாகவும் அந்த பணத்தை ஆம்ஆத்மி தலைவர்கள் கோவா சட்டசபை தேர்தலில் செலவு செய்ததாகவும் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படை யில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த குற்றப்பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகரராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 23-ந்தேதி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் விசாரிக்க முடிவு செய்தனர். மதுபானக் கொள்கையை வெளியிட்ட கலால் துறை மந்திரி என்பதால் அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியமாக கருதப்பட்டது.

    ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இருந்தது.

    மணீஷ் சிசோடியாவை மீண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. அதை ஏற்று ஆஜராக போவதாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா அறிவித்தார். இந்த நிலையில் இன்று காலை முதல்-மந்திரி கெஜ்ரிவால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'சி.பி.ஐ. விசாரணையின் போது சிசோடியாவை கைது செய்ய உள்ளனர்' என்று தெரிவித்து இருந்தார்.

    இதனால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் முக்கிய இடங்கள் மற்றும் சி.பி.ஐ. அலுவகம் முன்பு 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆம்ஆத்மி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டால் தடுத்து நிறுத்தும் வகையில் அதிரடி படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

    சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராவதற்காக 10 மணிக்கு தனது வீட்டில் இருந்து மணீஷ் சிசோடியா புறப்பட்டார். அப்போது அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன் கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது. நாங்கள் பகத்சிங் வழி வந்தவர்கள். எனவே சிறைக்கு செல்வதெல்லாம் சாதாரண விஷயம்' என்று கூறி இருந்தார்.

    அவர் வீட்டில் இருந்து திறந்த காரில் சென்றார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காரை சுற்றி நடந்து வந்தனர். 'சிசோடியா சிந்தா பாத்' என்று அவர்கள் முழக்கமிட்டபடி சென்றனர்.

    ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு அவர் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • எதிர்க்கட்சிகளை ஆம் ஆத்மி அரசு உளவு பார்ப்பதாக பாஜக குற்றம் சாட்டிய நிலையில் அனுமதி.
    • சிபிஐ அவரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி இரண்டு முறை சம்மன் அனுப்பியது.

    டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

    கருத்துப் பிரிவு மோசடி வழக்கில் சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், மத்திய உள்துறை மந்திரி அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    ஏற்கெனவே டெல்லி கலால் வரிக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிசோடியா வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள சிபிஐ, அவரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி இரண்டு முறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

    எதிர்க்கட்சிகளை ஆம் ஆத்மி அரசு உளவு பார்ப்பதாக பாஜக குற்றம் சாட்டிய நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

    • சிறையில் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்வது போல வீடியோ வெளியானது.
    • இதற்கு டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா மறுப்பு தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயின் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

    இதற்கிடையே, திகார் சிறையில் சொகுசு வசதிகளுடன் சத்யேந்திர ஜெயின் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சிறையில் சொகுசு படுக்கைகளுடன் சத்யேந்திர ஜெயின் மசாஜ் செய்வது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    இந்நிலையில், முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் பிசியோதரபி சிகிச்சை அளிக்கப்பட்டது எனக் கூறிய துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, சிறையில் அவருக்கு சகல வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

    • கடந்த மாதம் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான சிசோடியாவிடம் அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரித்தனர்.
    • மணீஷ் சிசோடியாவின் உதவியாளர் தேவேந்திர சர்மாவை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்த துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, பழிவாங்கும் நோக்கில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்தார்.

    மேலும், கடந்த மாதம் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவின் உதவியாளர் தேவேந்திர சர்மாவை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வாக்குமூலம் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக மணீஷ் சிசோடியா கூறுகையில் மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக தனது வீட்டில் நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்காததால் தனது உதவியாளரை தேதேந்திர சர்மாவை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கு பின்னால் பா.ஜ.க. உள்ளது. தேர்தலைப் பார்த்து அக்கட்சி பயப்படுகிறது என குற்றம்சாட்டினார்.

    • துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் 9 மணி நேரம் விசாரணை நடந்தது.
    • விசாரணையில் முழு வழக்கும் போலியானது என்பதை புரிந்து கொண்டேன் என்றார் சிசோடியா.

    புதுடெல்லி:

    டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன் டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

    இது குறித்து விளக்கம் அளித்த துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, பழிவாங்கும் நோக்கில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்தார்.

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மணீஷ் சிசோடியா, சி.பி.ஐ. அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்தேன். முழு வழக்கும் போலியானது. இன்றைய 9 மணி நேர விசாரணையில் அனைத்தையும் புரிந்து கொண்டேன். இந்த வழக்கு என் மீதான எந்த ஊழலையும் விசாரிப்பதற்காக அல்ல. ஆனால் டெல்லியில் ஆபரேஷன் தாமரையை வெற்றிகரமாக்குவதற்காக மட்டுமே இந்த விசாரணை. ஆம் ஆத்மியை விட்டு பா.ஜ.க.வுக்கு வரமாட்டேன் என்றேன். என்னை முதல்வராக்குவோம் என்று சொன்னார்கள் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேருமாறு கூறியதாக டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா கூறிய குற்றச்சாட்டை சி.பி.ஐ. மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேலும், இந்த சோதனை தொழில்முறை மற்றும் சட்டபூர்வமான முறையில் நடத்தப்பட்டது என்பதை மீண்டும் சி.பி.ஐ. வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அனைத்து வசதிகளையும் நாங்கள் வழங்கியுள்ளோம்.
    • கல்வி கொள்கை உருவாக்கத்தில் அனைத்து பகுதிகளும் இடம் பெற வேண்டும்.

    டெல்லி ஆசிரியர்கள் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    தேசியக் கல்விக் கொள்கையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. கல்வி தொடர்பான கொள்கைகள் உருவாக்கத்தில் அனைத்து பகுதிகளும் இடம் பெற வேண்டும். தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்திலும், அதை நடைமுறைப்படுத்துவதிலும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

    ஆசிரியர் பயிற்சி உள்பட பல்வேறு அம்சங்களை அதில் இணைக்க வேண்டும் என்பது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தொலைநோக்கு பார்வையாகும். டெல்லியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடிவு செய்தால், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு யார் பாடம் நடத்துவார்கள்? அந்த ஆசிரியர்களின் தகுதி என்ன? இன்னும் அது பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை. தற்போது டெல்லியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான எல்லா வசதிகளையும் எங்கள் அரசு வழங்கியுள்ளது.

    டெல்லி அரசும் ஆசிரியர் பல்கலைக்கழகமும் இணைந்து செயல்படுகின்றன, மேலும் ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்க அனைத்து வசதிகளையும் நாங்கள் வழங்கியுள்ளோம். தேசியக் கல்விக் கொள்கையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதால் டெல்லியில் இப்போது அதனை அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தம்மை கைது செய்து கொள்ளுமாறு மணிஷ் சிசோடியா வேண்டுகோள்.
    • சிபிஐ பதிவு செய்த எப்.ஐ.ஆரில் மணீஷ் சிசோடியா பெயர்.

    தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசத்தை ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி அரசு, மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆளுநரின் பரிந்துரையின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் டெல்லி அரசின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரின் இல்லங்கள் உள்பட 31 இடங்களில் சோதனை நடத்தியது. இதன் அடிப்படையில் இந்த வழக்கில் 15 போ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மணீஷ் சிசோடியா பெயர் முதல் இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதன் அடிப்படையில் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க உள்ளனர். அப்போது தங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை அவர்கள் அளிக்க உள்ளதாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தம்மீது பொய் வழக்கு போடுமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை தர வேண்டாம் என்றும் வேண்டுமானால் தம்மை கைது செய்து கொள்ளுங்கள் என்றும் மத்திய அரசுக்கு டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ×