search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NEP 2020"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அனைத்து வசதிகளையும் நாங்கள் வழங்கியுள்ளோம்.
    • கல்வி கொள்கை உருவாக்கத்தில் அனைத்து பகுதிகளும் இடம் பெற வேண்டும்.

    டெல்லி ஆசிரியர்கள் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    தேசியக் கல்விக் கொள்கையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. கல்வி தொடர்பான கொள்கைகள் உருவாக்கத்தில் அனைத்து பகுதிகளும் இடம் பெற வேண்டும். தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்திலும், அதை நடைமுறைப்படுத்துவதிலும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

    ஆசிரியர் பயிற்சி உள்பட பல்வேறு அம்சங்களை அதில் இணைக்க வேண்டும் என்பது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தொலைநோக்கு பார்வையாகும். டெல்லியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடிவு செய்தால், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு யார் பாடம் நடத்துவார்கள்? அந்த ஆசிரியர்களின் தகுதி என்ன? இன்னும் அது பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை. தற்போது டெல்லியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான எல்லா வசதிகளையும் எங்கள் அரசு வழங்கியுள்ளது.

    டெல்லி அரசும் ஆசிரியர் பல்கலைக்கழகமும் இணைந்து செயல்படுகின்றன, மேலும் ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்க அனைத்து வசதிகளையும் நாங்கள் வழங்கியுள்ளோம். தேசியக் கல்விக் கொள்கையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதால் டெல்லியில் இப்போது அதனை அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×