search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்ஆத்மி"

    • மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது. மேலும் அவர் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

    இதையடுத்து மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனு மீதான தீர்ப்பு வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • ஏப்ரல் 9 ஆம் தேதி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சுனிதா கெஜ்ரிவால் சந்தித்தார்
    • ஆம் ஆத்மி தொண்டர்கள் நாட்டில் சர்வாதிகாரத்தை ஒழிக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்

    முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் சந்தித்து பேசினர். இக்கூட்டத்தில், முதல்வரின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி அரசின் செய்தி தொடர்பாளர் கோபால் ராய், தேசிய பொதுச்செயலாளர் சந்தீப் பதக், மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங், டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏப்ரல் 9 ஆம் தேதி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சுனிதா கெஜ்ரிவால் சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் 2 தகவல்களை சுனிதாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    அது தொடர்பாக டெல்லி அரசின் செய்தி தொடர்பாளர் கோபால் ராய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நமது நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகவே வரும் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி அரசியல் சாசனத்தை காக்கும் தினமாகவும் சர்வாதிகாரத்திற்கு முடிவுகட்டும் நாளாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறினார்.

    மேலும், நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி தொண்டர்கள் நாட்டில் சர்வாதிகாரத்தை ஒழிக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் போராடுவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறியதாக அவர் தெரிவித்தார்.

    அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பிக்கள் பேசி வருவதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இதனை அறிவித்துள்ளது.

    • கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நடந்தால் நாடு மட்டுமல்ல, கடவுள் கூட அவர்களை மன்னிக்க மாட்டார் என்று டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்தார்.
    • வீட்டில் சமைத்த உணவை சாப்பிட கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிக்கப்பட்டு 4½ கிலோ எடை குறைந்துள்ளதாக ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக டெல்லி மந்திரி அதிஷி இன்று காலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடுமையான நீரிழிவு நோயாளி. அவருக்கு உடல் நலக்குறைவு இருந்த போதிலும் 24 மணி நேரமும் தேசத்திற்கு சேவை செய்ய உழைத்தார். அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து தற்போது 4½ கிலோ உடல் எடை குறைந்துள்ளார்.

    இது மிகவும் கவலை அளிக்கிறது. அவரது உடல் நிலையை பா.ஜனதா ஆபத்தில் ஆழ்த்துகிறது.

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நடந்தால் நாடு மட்டுமல்ல, கடவுள் கூட அவர்களை மன்னிக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் நலமாக இருப்பதாகவும், கடந்த 1-ந்தேதி சிறையில் அடைக்கப்பட்ட போது 55 கிலோ எடை இருந்ததாகவும், தற்போதும் இருப்பதாகவும் ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறும் போது, வீட்டில் சமைத்த உணவை சாப்பிட கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அவரது சர்க்கரை அளவு குறைந்தது. அவருக்கு சர்க்கரை அளவு தொடர்ந்து ஏற்ற-இறக்கத்துடன் இருந்தததால் திகார் சிறை டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்தார். தற்போது அவரது ரத்த சர்க்கரை அளவு சாதாரணமாக உள்ளது. அவர் யோகா செய்தார் என்றனர்.

    • நாட்டு மக்கள் கெஜ்ரிவால் பக்கம் இருக்கிறார்கள் என்று ஆம் ஆத்மி கருத்து.
    • ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சவுரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோர் கெஜ்ரிவால் இல்லத்திற்குச் சென்றுள்ளனர்.

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தலைகுனிய வைக்க பாஜக எந்த நிலைக்கும் போகும், ஆனால் நாட்டு மக்கள் கெஜ்ரிவால் பக்கம் இருக்கிறார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சவுரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோர் கெஜ்ரிவால் இல்லத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    எக்ஸ் பக்கத்தில் ஆம் ஆத்மி தொடர் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இதில்," அமலாக்கத்துறை டெல்லியின் மகன் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை அடைந்தது. டெல்லி உள்பட இன்று முழு நாடும் யாருடைய ஆதரவில் நிற்கிறதோ அந்த மலையை பாஜக நகர்த்த முயற்சிக்கிறது. டெல்லி மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று யாரும் அமைதியாக இருக்க மாட்டார்கள்"

    #IstandWithKejriwal என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, "அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்த பாஜக எந்த மட்டத்திற்கும் கீழே இறங்கும். டெல்லி உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்கிறார்கள். உங்களின் இந்த சர்வாதிகாரம் நீடிக்காது. ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒரு கெஜ்ரிவால் வெளிப்படுவார்" என பதிவிடப்பட்டிருந்தது.

    ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான், "கெஜ்ரிவாலின் சித்தாந்தத்தை பாஜகவின் அரசியல் அணியால் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் ஆம் ஆத்மியால் மட்டுமே பாஜகவைத் தடுக்க முடியும். சித்தாந்தத்தை ஒருபோதும் அடக்க முடியாது" என்று பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி மக்களுக்கு ஆம்ஆத்மி நிறைய நலத்திட்டங்களை செய்து வருகிறது.
    • சில கட்சிகள் பெண்களுக்கு பதவி கொடுத்து விட்டு அதிகாரம் கொடுத்து விட்டதாக சொல்கின்றன.

    புதுடெல்லி:

    டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று சமீபத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

    இது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் டெல்லியில் நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்ற அந்த கூட்டத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேசும்போது கூறியதாவது:-

    டெல்லி மக்களுக்கு ஆம்ஆத்மி நிறைய நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதுபற்றி பெண்கள் தங்கள் குடும்பத்தாரிடம் எடுத்து சொல்லி ஆம்ஆத்மிக்கு ஆதரவு தர வேண்டும்.

    பெண்களுக்கு அதிகாரம் தருவதாக நிறைய பேர் ஏமாற்றுகிறார்கள். ஆனால் நாங்கள் இலவச மின்சாரம் கொடுத்துள்ளோம். இலவச பஸ் பயணம் கொடுத்துள்ளோம். இப்போது மாதம் ரூ.1000 கொடுக்க இருக்கிறோம்.


    உங்கள் வீட்டு ஆண்கள் மோடி பெயரை உச்சரித்தால் அதை கண்டியுங்கள். மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று உங்கள் கணவர் தெரிவித்தால் அவருக்கு இரவு சாப்பாடு கொடுக்காதீர்கள். பட்டினி போடுங்கள்.

    அவரிடம் ஆம்ஆத்மி கொண்டுவந்துள்ள பெண்கள் நலத்திட்டங்களை விளக்கமாக எடுத்து சொல்லுங்கள். சில கட்சிகள் பெண்களுக்கு பதவி கொடுத்து விட்டு அதிகாரம் கொடுத்து விட்டதாக சொல்கின்றன.

    ஆனால் உண்மையான அதிகாரம் ஆம்ஆத்மியிடம் கிடைக்கிறது என்பதை சொல்லுங்கள். மாதம் ரூ.1000 கிடைப்பதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் உயருவதையும் நீங்கள் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

    டெல்லி அரசு அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 கொடுக்கும் இந்த திட்டம் உலகில் பெண்களை அதிகாரமாக மாற்றும் மிகப்பெரிய திட்டமாக அமையும்.

    இவ்வாறு முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறினார்.

    • தேர்தல் தேதி அறிவிப்பு வராவிட்டாலும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
    • அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் விவரங்களை விரைவிலேயே முழுமையாக அறிவிக்க உள்ளன.

    திருவனந்தபுரம்:

    மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் சில நாட்க ளுக்கும் வெளியிடும் என்று கருதப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிப்பு வராவிட்டாலும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    கேரள மாநிலத்தில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள், பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கிவிட்டன. அந்த கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் விவரங்களை விரைவிலேயே முழுமையாக அறிவிக்க உள்ளன.

    இந்நிலையில் கேரள மாநில மக்களவை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடுமா? என்பது சந்தேகமாக உள்ளது. தேர்தலில் போட்டியிடும் விவகாரத்தில் அந்த கட்சி மத்தியில் குழப்பம் நிலவுவதால் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் கட்சியின் புதிய தலைமை பொறுப்பேற்று சில மாதங்களே ஆகிறது. கேரளாவில் போட்டியிடுவது குறித்தும், தனது நிலைப்பாடு குறித்தும் இதுவரை எந்தமுவும் எடுக்கவில்லை என்று ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அப்படி தேர்தலில் போட்டியிடாவிட்டால் யாருக்கு ஆதரவளிக்கும் என்பதும் தெரியவில்லை. கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை ஆம்ஆத்மி கடைபிடிக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கேரளாவில் ஆம்ஆத்மி கட்சி கடந்த 2014-ம் ஆண்டு 11 தொகுதிகளில் போட்டியிட்டது. கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு ஆம்ஆத்மி கட்சியை உடைப்போம் என்றும் சொல்கிறார்கள்.
    • ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜ.க. விரித்த வலையில் விழவில்லை.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

    அவரது ஆட்சிக்கு ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் அசுர பலம் இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளத்தில் மிக நீண்ட பதிவு ஒன்றை இன்று காலை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். ஏற்கனவே ஆம்ஆத்மி தலைவர்கள் மீது மதுபான கொள்கை வழக்கை பதிவு செய்து மிரட்டி கொண்டிருக்கிறார்கள்.

    இந்த வழக்கில் விரைவில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலையும் கைது செய்து விடுவோம் என்றும் பாரதிய ஜனதா கட்சியினர் மிரட்டல் விடுக்கும் வகையில் தகவல்களை பரப்பி வருகிறார்கள். இன்னும் சில தினங்களில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு விடுவார் என்று ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் பேசப்பட்டு வருகிறது.

    கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு ஆம்ஆத்மி கட்சியை உடைப்போம் என்றும் சொல்கிறார்கள். சமீபத்தில் டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் 21 ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் ரகசிய பேச்சு நடத்தி உள்ளனர்.

    அவர்களில் 7 பேரிடம் சமீபத்தில் மீண்டும் தொடர்பு கொண்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யுமாறு கூறியுள்ளனர். ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா 25 கோடி ரூபாய் பணம் தருவதாகவும் பேசி இருக்கிறார்கள்.

    ஆம்ஆத்மி ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு நீங்கள் பாரதிய ஜனதாவுக்கு வாருங்கள். அதே தொகுதியில் நீங்கள் போட்டியிட வாய்ப்பு தருகிறோம் என்றும் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜ.க.வினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

    ஆனால் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜ.க. விரித்த வலையில் விழவில்லை. டெல்லியில் பாரதிய ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. மக்கள் ஆதரவுடன் ஆம்ஆத்மியை வீழ்த்த முடியாது என்று அவர்களுக்கு தெரியும்.

    எனவேதான் இப்படி குறுக்கு வழியில் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.25 கோடி தருவதாக பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுகிறார்கள்.

    மதுபான கொள்கை வழக்கில் என்னை கைது செய்ய நீண்ட நாட்களாக முயற்சி செய்கிறார்கள். தேர்தலில் ஆம்ஆத்மியை வீழ்த்த முடியாது என்பதால் மதுபான கொள்கை வழக்கை கையில் எடுத்து இருக்கிறார்கள். என்னை கைது செய்யும் முயற்சி தோல்வி அடைந்ததால் ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார்கள்.

    கடந்த 9 ஆண்டுகளில் எனக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி எத்தனையோ சதி திட்டங்களை தீட்டி உள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றில் கூட அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    டெல்லி மக்களின் ஆதரவும், கடவுளின் ஆசியும் ஆம்ஆத்மி கட்சிக்கு இருக்கிறது. ஆம்ஆத்மி கட்சியை சேதப்படுத்த முடியாது. ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் இருக்கிறார்கள்.

    எனவே டெல்லி பா.ஜ.க. தலைவர்களின் கனவு ஒருநாளும் நிறைவேறாது. டெல்லி மக்களுக்கு ஆம்ஆத்மி கட்சி செய்து வரும் நலத்திட்ட பணிகள் நன்றாகவே தெரியும். எவ்வளவு தடைகள் வந்தாலும் ஆம்ஆத்மி மீது டெல்லி மக்கள் வைத்திருக்கும் பாசத்தை யாராலும் தடுக்க முடியாது.

    ஆகையால்தான் தேர்தலில் ஆம்ஆத்மியை வீழ்த்த முடியாத நிலையில் பா.ஜ.க. போராடிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி.
    • அரசியலமைப்பு கொள்கைகள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுள்ள நம்பிக்கை நினைவுகூரப்படும்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    டெல்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி. மசோதாவை எதிர்த்து வாக்களித்த தி.மு.க.விற்கு 2 கோடி டெல்லி மக்களின் சார்பாக நன்றிகள். அரசியலமைப்பு கொள்கைகள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுள்ள நம்பிக்கை நினைவுகூரப்படும் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    • கட்சிக்கு உரிய அதிகாரங்களை வழங்க சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார்.

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சிக்கு உரிய அதிகாரங்களை வழங்க சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு அவசர சட்டம் மூலம் சேவை துறைகளில் டெல்லி மாநில அரசு அதிகாரம் செலுத்துவதை தடுத்துள்ளது.

    இதையடுத்து மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார். பாராளுமன்றத்தில் அந்த அவசர சட்டத்தை தோற்கடிக்கவும் அவர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வருகிற 11-ந் தேதி மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து டெல்லியில் மிக பிரமாண்ட பேரணி நடத்தப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

    • டெல்லியில் அதிகாரிகள் நியமன அதிகாரம்: மத்திய அரசு அவசர சட்டம் - ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
    • மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி அரசுக்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும், துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் கடந்த 11-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

    அரசியல் சாசன அமர்வு, நிலம், காவல், பொது உத்தரவு ஆகியவை தவிர அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குத்தான் உரிமை உள்ளது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் டெல்லி அரசுக்கு அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை என்று தீர்ப்பு வெளியான மறுதினமே சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடுத்தது.

    இந்த நிலையில் உயர் அதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு நேற்று அவசர சட்டம் பிறப்பித்தது.

    யூனியன் பிரதேச உயர் அதிகாரிகளான டானிக்ஸ் பிரிவு குரூப் ஏ அதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்வதை முடிவு செய்வதற்கான தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதில் டெல்லி முதல்-மந்திரி தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள். பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி அரசின் பணி நியமன அதிகாரத்தை குறைக்கும் வகையில் இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிப்பதாக உள்ளது என்றும் ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

    இதுதொடர்பாக ஆம் ஆத்மி மந்திரி அதிஷி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை. டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் முயற்சியாகும். சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே இந்த அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

    முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். அவர் (கெஜ்ரிவால்) அதிகாரம் பெற்றால் டெல்லிக்கு அசாதாரண பணிகளை செய்வார் என்று அவர்கள் பயப்படுவார்கள்.

    டெல்லி அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதை மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆணையத்தில் இருக்கும் தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள்.

    மத்திய அரசுக்கு பிடிக்காத எந்த ஒரு முடிவையும் எடுத்தால் அதை மாற்றுவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும். இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டு மூலம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு ஆம்ஆத்மி கட்சி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
    • ஆம் ஆத்மி தொண்டர்கள் டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    கடந்த 2021-22-ம் ஆண்டு ஆம்ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம்ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    மதுபான வியாபாரிகளில் சிலருக்கு மட்டும் உரிமம் வழங்குவதற்காக ஆம்ஆத்மி தலைவர்கள் சாதகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாகவும் அந்த பணத்தை ஆம்ஆத்மி தலைவர்கள் கோவா சட்டசபை தேர்தலில் செலவு செய்ததாகவும் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த குற்றப்பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகர ராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 23-ந்தேதி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் விசாரிக்க முடிவு செய்தனர். மதுபானக் கொள்கையை வெளியிட்ட கலால் துறை மந்திரி என்பதால் அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியமாக கருதப்பட்டது.

    ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் நேற்று மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். மதியம் 12 மணிக்கு தொடங்கி சுமார் 8 மணிநேரம் விசாரணை நீடித்தது.

    பெரும்பாலான கேள்விகளுக்கு மணீஷ் சிசோடியா பதில் அளிக்கவில்லை. அவர் 90 சதவீத கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் கூறினார். இதைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை கைது செய்வதாக சி.பி.ஐ. அதிகாரிகள் அறிவித்தனர்.

    இரவு முழுக்க அவர் சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டார். இரவு உணவும் அவருக்கு அங்கேயே வழங்கப்பட்டது. இன்று காலை அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் சான்றிதழ் வழங்கினார்கள்.

    இதையடுத்து மணீஷ் சிசோடியா மீண்டும் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் 2-வது நாளாக மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அவரை இன்று பிற்பகல் சி.பி.ஐ. கோர்ட்டில் அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர்.

    மணீஷ் சிசோடியாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று பிற்பகல் அவர்கள் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். எனவே மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்த எத்தனை நாட்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது இன்று பிற்பகல் தெரியும்.

    மணீஷ் சிசோடியா மதுபானக்கொள்கையில் திருத்தம் செய்து பலகோடி ரூபாய் ஊழல் செய்ததற்கு ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் தகவல்கள், செல்போன் உரையாடல் பதிவுகள், இ-மெயில்கள் மற்றும் செயலாளர் அரவிந்த் வாக்குமூலம் ஆகியவை மணீஷ் சிசோடியா ஊழல் செய்ததற்கு ஆதாரங்களாக உள்ளன என்று சிபி.ஐ. தெரிவித்துள்ளது.

    மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு ஆம்ஆத்மி கட்சி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி தொண்டர்கள் டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    சி.பி.ஐ. அலுவலகம் முன்பும், பா.ஜ.க. அலுவலகம் முன்பும் ஆம்ஆத்மி தொண்டர்கள் போராட்டம் நடத்த திரண்டனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிர் போராட்டம் நடத்த பா.ஜ.க. தொண்டர்களும் குவிந்தனர்.

    இதனால் டெல்லியின் பல பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அலுவலகம், பா.ஜ.க. அலுவலகம் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • குஜராத் தேர்தலிலும் ஆம் ஆத்மி படு தோல்வியை சந்திக்கும்.
    • பல்வேறு மாநில தேர்தல்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.


    டெல்லி மாநகராட்சித் தேர்தலையொட்டி படேல் நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளதாவது:

    வாரணாசி மக்களவைத் தேர்தலில் மோடியை எதிர்த்து போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் மண்ணை கவ்வினார். அதன் பிறகு, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கோவா சட்டசபை தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி, போட்டியிட்டது. அதன் வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர்.

    தற்போது இமாச்சல் பிரதேசத்தில் அவர்கள் (ஆம் ஆத்மி) 67 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள். எல்லா இடங்களிலும் அவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்று நான் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்கிறேன். குஜராத் தேர்தலிலும் அவர்கள் இதே நிலையை சந்திப்பார்கள்.

    கடந்த 5 ஆண்டுகளில் டெல்லியில் பாஜக ஆட்சி செய்த மாநகராட்சிகளில் பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் கெஜ்ரிவால் அரசு செயல்படுத்திய இரண்டு திட்டங்களை சிசோடியாவால் சொல்ல முடியுமா என சவால் விடுகிறேன்.

    சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சருக்கு மசாஜ் வசதியை ஏற்பாடு செய்து தருகிறார்கள். இது போன்ற அது பல நல்ல வேலைகளை ஆம் ஆத்மி அரசு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×