search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மோடிக்கு ஓட்டுப்போட சொன்னால் கணவரை பட்டினி போடுங்கள்- பெண்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மோடிக்கு ஓட்டுப்போட சொன்னால் கணவரை பட்டினி போடுங்கள்- பெண்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்

    • டெல்லி மக்களுக்கு ஆம்ஆத்மி நிறைய நலத்திட்டங்களை செய்து வருகிறது.
    • சில கட்சிகள் பெண்களுக்கு பதவி கொடுத்து விட்டு அதிகாரம் கொடுத்து விட்டதாக சொல்கின்றன.

    புதுடெல்லி:

    டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று சமீபத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

    இது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் டெல்லியில் நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்ற அந்த கூட்டத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேசும்போது கூறியதாவது:-

    டெல்லி மக்களுக்கு ஆம்ஆத்மி நிறைய நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதுபற்றி பெண்கள் தங்கள் குடும்பத்தாரிடம் எடுத்து சொல்லி ஆம்ஆத்மிக்கு ஆதரவு தர வேண்டும்.

    பெண்களுக்கு அதிகாரம் தருவதாக நிறைய பேர் ஏமாற்றுகிறார்கள். ஆனால் நாங்கள் இலவச மின்சாரம் கொடுத்துள்ளோம். இலவச பஸ் பயணம் கொடுத்துள்ளோம். இப்போது மாதம் ரூ.1000 கொடுக்க இருக்கிறோம்.


    உங்கள் வீட்டு ஆண்கள் மோடி பெயரை உச்சரித்தால் அதை கண்டியுங்கள். மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று உங்கள் கணவர் தெரிவித்தால் அவருக்கு இரவு சாப்பாடு கொடுக்காதீர்கள். பட்டினி போடுங்கள்.

    அவரிடம் ஆம்ஆத்மி கொண்டுவந்துள்ள பெண்கள் நலத்திட்டங்களை விளக்கமாக எடுத்து சொல்லுங்கள். சில கட்சிகள் பெண்களுக்கு பதவி கொடுத்து விட்டு அதிகாரம் கொடுத்து விட்டதாக சொல்கின்றன.

    ஆனால் உண்மையான அதிகாரம் ஆம்ஆத்மியிடம் கிடைக்கிறது என்பதை சொல்லுங்கள். மாதம் ரூ.1000 கிடைப்பதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் உயருவதையும் நீங்கள் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

    டெல்லி அரசு அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 கொடுக்கும் இந்த திட்டம் உலகில் பெண்களை அதிகாரமாக மாற்றும் மிகப்பெரிய திட்டமாக அமையும்.

    இவ்வாறு முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறினார்.

    Next Story
    ×