search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கெஜ்ரிவாலை தலைகுனிய வைக்க பாஜக எந்த கீழ் நிலைக்கும் செல்லும்- ஆம் ஆத்மி காட்டம்
    X

    கெஜ்ரிவாலை தலைகுனிய வைக்க பாஜக எந்த கீழ் நிலைக்கும் செல்லும்- ஆம் ஆத்மி காட்டம்

    • நாட்டு மக்கள் கெஜ்ரிவால் பக்கம் இருக்கிறார்கள் என்று ஆம் ஆத்மி கருத்து.
    • ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சவுரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோர் கெஜ்ரிவால் இல்லத்திற்குச் சென்றுள்ளனர்.

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தலைகுனிய வைக்க பாஜக எந்த நிலைக்கும் போகும், ஆனால் நாட்டு மக்கள் கெஜ்ரிவால் பக்கம் இருக்கிறார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சவுரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோர் கெஜ்ரிவால் இல்லத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    எக்ஸ் பக்கத்தில் ஆம் ஆத்மி தொடர் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இதில்," அமலாக்கத்துறை டெல்லியின் மகன் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை அடைந்தது. டெல்லி உள்பட இன்று முழு நாடும் யாருடைய ஆதரவில் நிற்கிறதோ அந்த மலையை பாஜக நகர்த்த முயற்சிக்கிறது. டெல்லி மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று யாரும் அமைதியாக இருக்க மாட்டார்கள்"

    #IstandWithKejriwal என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, "அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்த பாஜக எந்த மட்டத்திற்கும் கீழே இறங்கும். டெல்லி உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்கிறார்கள். உங்களின் இந்த சர்வாதிகாரம் நீடிக்காது. ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒரு கெஜ்ரிவால் வெளிப்படுவார்" என பதிவிடப்பட்டிருந்தது.

    ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான், "கெஜ்ரிவாலின் சித்தாந்தத்தை பாஜகவின் அரசியல் அணியால் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் ஆம் ஆத்மியால் மட்டுமே பாஜகவைத் தடுக்க முடியும். சித்தாந்தத்தை ஒருபோதும் அடக்க முடியாது" என்று பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×