search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MKStalin"

    • முதலமைச்சர் உத்தரவின் பேரில் அந்த வழிதடத்தில் புதிய பஸ் சேவை தொடங்கப்பட்டது.
    • வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் சாரநாத் நகர், தைக்கால் தளவாபாளையம், மருங்கை, கத்திரிநத்தம், குளிச்சப்பட்டு பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் அந்த வழிதடத்தில் புதிய பஸ் சேவை தொடங்கப்பட்டது.

    இந்த புதிய பஸ் சேவையை தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் உடன் அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக.சுரேஷ், கும்பகோணம் போக்குவரத்து கோட்ட மேளாலர் பாலமுருகன், உதவி பொறியாளர் கருப்புசாமி, கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் நவம்பர் 1-ஐ உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • ஊராட்சி செயலர் சுபாஷ் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை வாசித்தார்.

    நெல்லை:

    நவம்பர் 1-ந்தேதி உள்ளா ட்சி தினத்தை முன்னிட்டு பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் வடக்கூரில் ஊராட்சி மன்ற தலைவர் அனுராதா ரவி முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில் நவம்பர் 1-ஐ உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    மேலும் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது, இணையவழி வரி செலுத்து தல், கிராம தன்னிறைவு திட்டம் 2023-24 மற்றும் 2024-25-க்கு எடுக்கப்பட வேண்டிய பணிகள், பொது இடங்களில் வைக்கப் பட்டுள்ள ஜாதிய சின்னங்களை அகற்றுதல், ஊராட்சி அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றுதல் மற்றும் ஊராட்சியின் நீடித்த வளர்ச்சி பற்றி விவாதிக் கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஊராட்சி செயலர் சுபாஷ் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, மக்கள் நலப் பணியாளர் மாரி யம்மாள், பணித்தள பொறுப்பாளர் சோபனா, சுகாதார ஆய்வாளர் புகாரி, காச நோய் ஆய்வாளர் காஞ்சனா, கிராம சுகாதார செவிலியர் பூமணி, கிராம நிர்வாக அலுவலர் மைதீன், தலையாரி வேல்பாண்டி, வார்டு உறுப்பினர்கள் பல வேசம் இசக்கி பாண்டி, ஸ்ரீலதா, பாளை மத்திய ஒன்றிய தி.மு.க. ஆதி திரா விடர் நல அணி அமை ப்பாளர் செல்லப்பா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ராமச்சந்திரன், தண்டபாணி, குமரன், வடக்கூர் ஆதி திராவிடர் பள்ளி நிர்வாகி சுந்தரராஜ், பிருந்தாவன் நகர் கார்த்திக், தோட்டக் கலைத்துறை கமலேசன், துணை கமிஷனர் (ஜி.எஸ்.டி.) கதிர்வேல், விஜிலென்ஸ் ஸ்டீபன் கனகராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை காவ லர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கவுரவிக்கப் பட்டனர்.

    • முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.

    காளையார் கோவில்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையில் பங்கேற்பதற்காக இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் வழியாக சென்றார்.

    இந்த நிலையில் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான பெரிய கருப்பன் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மாவட்ட எல்லையான திருப்பு வனத்தில் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். காலை 8.35 மணி அளவில் திருப்புவனம் பகுதிக்கு முதல்-அமைச்சர் வந்தார். அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சருக்கு பட்டாடை கொடுத்து அமைச்சர் பெரியகருப்பன் வரவேற்றார்.

    தொடர்ந்து நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், மாவட்ட தி.மு.க அவை தலைவர் கணேசன், மாவட்ட துணை செயலா ளர்கள் த.சேங்கை மாறன் ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில் குமார், துணை அமைப்பாளர் பொற்கோ, நகர செயலா ளர்கள் குணசேகரன், துரை ஆனந்த், பொன்னுச்சாமி, பெரி.பாலா, நகர் மன்ற தலைவர் முத்து துரை, முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, மதியரசன், ஒன்றிய செயலா ளர்கள் வசந்தி சேங்கை மாறன், கடம்பசாமி, நிர்வாகிகள் மோகன்ராஜ், பழனி, அண்ணாமலை, சேகர் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்-அமைச்சரை வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.

    • ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
    • எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர். பூங்காவில் ரூ. 77.87 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டப கட்டுமானப் பணிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:-

    குரூஸ் பர்னாந்து மணிமண்டபம்

    மக்களுக்காக அரும்பணியாற்றிய ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சுமார் ரூ. 77.87 லட்சம் மதிப்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13-ந் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, செய்தித்துறை இணை இயக்குநர் தமிழ்செல்வராஜன், பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் தம்பிரான், கோவில்பட்டி ஆர்.டி.ஓ. ஜேன் கிறிஸ்டி பாய், தாசில்தார்கள் பிரபாகரன், மல்லிகா, எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலெட்சுமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், கந்தசாமி, கனகராஜ், பொன்னப்பன், ரெங்கசாமி, இசக்கிராஜா, பவானி, ரெக்ஸின், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், அரசு வக்கீல் ஆனந்த கபரியேல்ராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கருணா, மணி, வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், பிரபாகர், ஜோஸ்பர், அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாரதியார் மணிமண்டபம்

    அதனைத் தொடர்ந்து எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு என்ற தலைப்பில் ரூ. 5.06 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒளி-ஒலி காட்சியின் செயல்பாட்டினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாரதியார் வாழ்க்கை வரலாற்று படத்தினை பார்வையிட்டார்.

    • அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் 2-வது தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது.
    • அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூகநீதி பேசும் இடத்தில் நிச்சயமாக நான் இருப்பேன் என்றார்.

    சென்னை:

    அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று தலைமையுரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது மாநாட்டில் கலந்துகொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஏப்ரல் 3-ம் நாள் நடைபெற்ற முதல் மாநாட்டைத் தொடர்ந்து, இப்போது இரண்டாவது மாநாட்டிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

    சமூகநீதி பேசும் இடத்தில் நிச்சயமாக நான் இருப்பேன் என்ற அடிப்படையில் நான் பங்கெடுத்து உரையாற்றுகிறேன்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் சமூகநீதியைத்தான் இயக்கத்தின் இலக்கணமாக வைத்துள்ளது. இந்த இயக்கம் உருவாகக் காரணமே சமூகநீதிதான். சமூகநீதி – சமதர்ம சமுதாயத்தை அமைப்பதற்காகவே திராவிட இயக்கம் தோன்றியது.

    தமிழ்நாட்டைப் பார்த்து பல்வேறு மாநிலங்கள் சமூகநீதியை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி வழங்கியது மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற மாநில ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அத்தகைய உரிமை கிடைக்க வழிகாட்டியதும் திராவிட இயக்கம்தான்.

    தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களின் காரணமாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமே முதன்முறையாக திருத்தப்பட்டது.

    சமூகநீதியை நிலைநாட்ட நாம் போராடி வந்தாலும் – சமூகநீதிக்கான தடைகளும் விழவே செய்கின்றன. இதில் பா.ஜ.க. பெரிய அளவிலான தடுப்புச் செயல்களை செய்து வருகிறது.

    சமூகநீதியை முறையாக பா.ஜ.க. அமல்படுத்துவது இல்லை. கடந்த 9 ஆண்டுகாலத்தில் ஒன்றிய அரசின் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை. ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடியின மக்கள் முன்னேறுவதை பா.ஜ.க. விரும்பவில்லை. எனவேதான் அவர்கள் சமூகநீதிக்கு எதிராக இருக்கிறார்கள்.

    இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநிலத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. சில மாநிலங்களில் 50 விழுக்காடு உள்ளது. அந்தந்த மாநிலங்களின் மக்கள் விகிதாச்சாரம் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். எனவே, 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு அளவீடு போகக் கூடாது என்று சொல்வதும் சரியல்ல. "இடஒதுக்கீடு" மாநிலங்களின் உரிமை என்று அதிகாரத்தை மாற்றி வழங்கினால்தான், அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டினை வழங்க முடியும்.

    இந்தியாவில் உண்மையான கூட்டாட்சிக் கருத்தியல் மலர்ந்தாக வேண்டும். நாம் மேற்கண்ட "சமூகநீதி" தீர்மானங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க உழைப்போம். இந்திய நாட்டு மக்கள் அனைவரும் சமூகநீதிப் பெருவாழ்வு வாழப் பாடுபடுவோம் என தெரிவித்தார்.

    • சென்னையில் இருந்து இன்று ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடி விரைந்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றுகிறார்.

    வேலூரில் நாளை தி.மு.க பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக வேலூர் அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட கோட்டை வடிவிலான மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடி விரைந்தார். ரெயில் நிலையத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முதலமைச்சர் இன்று இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றுகிறார்.

    இந்நிலையில், நாளை வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

    முதலமைச்சரின் கள செயல்பாடுகளை அறிந்துகொள்ளும் வகையிலும், எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற நோக்கிலும் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • கடலூர் மாவட்டம் மருதத்தூரில், கட்டடத்தின் மேற்கூரை இடிந்து சிறுமி சுதந்திரதேவி உயிரிழந்தார்.
    • உயிரிழந்த சுதந்திர தேவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்.

    கடலூர் மாவட்டம் மருதத்தூரில், கட்டடத்தின் மேற்கூரை இடிந்து உயிரிழந்த சிறுமி சுதந்திரதேவி என்பவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    மேலும், உயிரிழந்த சுதந்திர தேவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    "கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மருதத்தூர் கிராமத்தில் உள்ள கோவிலில் இன்று (10-9-2023) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள கட்டிடத்தின் வெளிப்புற மேற்கூரை எதிர்பாராதவிதமாக ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காவனூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் சுதந்திரதேவி(15) என்பவர் மீது இடிந்து விழுந்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

    உயிரிழந்த செல்வி.சுதந்திரதேவியின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு 2 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்."

    இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • காலை சத்துணவு திட்டத்தை நடைமுறைபபடுத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லையில் விவசாயம் நடை பெறவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட பஞ்சாயத்து தலை வர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.

    முதல்-அமைச்சருக்கு நன்றி

    இதில் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வ லட்சுமி, பஞ்சாயத்து செயலாளர் இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு காலை சத்துணவு திட்டத்தை நடைமுறைப் படுத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

    பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லையில் விவசாயம் நடை பெறவில்லை. இதனால் நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அரசை வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் மாநில நிதி குழு மானியத்தில் மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.2 ½ கோடி வழங்கப்பட்டுள்ளது.அதனை ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் கூடுதலாக அதே திட்டத்தில் ரூ.10 கோடி கேட்டு தமிழக அரசை வலியுறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் சாலமன் டேவிட், அருந்த வசு, தனித்தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.
    • ஆர்.பி.உதயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தி.மு.க. பூத் கமிட்டி கூட்டத்தில் முதல்- அமைச்சர் என்ற மன நிலையை மறந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியாரை வாய்க்கு வந்த வார்த்தை களால் விமர்சித்துள்ளார்.

    மணிப்பூர் சம்பவம் மிக வும் வேதனை தரத்தக்கது தான். இதற்கு அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 21-ந் தேதி எடப்பாடி யார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையாக தனது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளார்.

    ஆனால் எடப்பாடியாரின் அறிக்கை வரவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை யாக, முதல்-அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசக் கூடாது.

    எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வரு கிறது என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பேசி உள்ளார். இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக, 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் தலைவராக எடப்பாடியார் உள்ளார்

    எடப்பாடியாரை பழிப்ப தாக பேசிய பேச்சு 2 கோடி தொண்டர்களையும், 8 கோடி மக்களையும் பழிப்ப தாக உள்ளது. திருச்சி கூட்டத்தில் எடப்பாடியாரை கொத்தடிமை என்று விமர் சித்துள்ளார் மு.க.ஸ்டாலின். இந்த பேச்சால் 2 கோடி தொண்டர்களின் மனம் புண்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கோர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாவட்ட பூமாலை வணிக வளாகம் ரூ.6.95 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டது.
    • இந்த வளாகத்தில் சுய உதவிக் குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட உள்ளனர்.

    நெல்லை:

    ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ள மகளிர் பல்வேறு விதமான உற்பத்தி சார்ந்த பொரு ளாதார செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் விதமாகவும், இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதன் மூலம் மகளிரின் வாழ்வாதா ரத்தினை முன்னேற்றம் அடைய செய்திடும் விதமா கவும், மாவட்ட அளவில் பூமாலை வணிக வளா கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதற்காக மாவட்ட ங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்கள் ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும் என அரசு அறிவித்தது. தொடர்ந்து நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் அமையப் பெற்றுள்ள மாவட்ட பூமாலை வணிக வளாகம் ரூ.6.95 லட்சம் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து மேம்படுத்தப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அதனை இன்று தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட பூமாலை வளாகத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    இந்த வளாகத்தில் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு சுய உதவிக் குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சி மற்றும் சந்தைப்படுத்திட உள்ளனர்.

    12 கடைகள்

    புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தில் பனை ஓலை பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகள், பனங்கருப்பட்டி, கருவாடு வகைகள், பாக்கு மட்டைகள், ஆயத்த ஆடைகள், பத்தமடை பாய் பொருள்கள் மற்றும் பேன்சி பொருட்கள் என மொத்தம் 12 கடைகள் அமைக்கப்பட்டு விற்ப னைக்காக பொரு ட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடை யப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மகளிர் திட்ட அலுவலர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
    • மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எதிர்க்கட்சிகள் இடையே சுமூகமான ஒருமித்த கருத்து உருவாகவில்லை.

    இந்த நிலையில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.

    இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    எதிர்க்கட்சி தலைவர்களில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விமானம் மூலம் பீகார் புறப்பட்டார்.

    இந்நிலையில், பீகார் சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாட்னாவில் ராஷ்ட்ர ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாவை சந்தித்தார்.

    மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

    மேலும், இரு தலைவர்களின் சந்திப்பின் அடையாளமாக கருணாநிதி பற்றிய நூல் ஒன்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.

    பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் இன்று காலை நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • சென்னை கிண்டியில் மரக்கன்றை நட்டு, இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் மைதானத்தில் இன்று மாலை தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை கிண்டியில் மரக்கன்றை நட்டு, இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    ×