search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cruz Fernandez"

    • ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
    • எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர். பூங்காவில் ரூ. 77.87 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டப கட்டுமானப் பணிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:-

    குரூஸ் பர்னாந்து மணிமண்டபம்

    மக்களுக்காக அரும்பணியாற்றிய ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சுமார் ரூ. 77.87 லட்சம் மதிப்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13-ந் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, செய்தித்துறை இணை இயக்குநர் தமிழ்செல்வராஜன், பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் தம்பிரான், கோவில்பட்டி ஆர்.டி.ஓ. ஜேன் கிறிஸ்டி பாய், தாசில்தார்கள் பிரபாகரன், மல்லிகா, எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலெட்சுமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், கந்தசாமி, கனகராஜ், பொன்னப்பன், ரெங்கசாமி, இசக்கிராஜா, பவானி, ரெக்ஸின், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், அரசு வக்கீல் ஆனந்த கபரியேல்ராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கருணா, மணி, வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், பிரபாகர், ஜோஸ்பர், அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாரதியார் மணிமண்டபம்

    அதனைத் தொடர்ந்து எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு என்ற தலைப்பில் ரூ. 5.06 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒளி-ஒலி காட்சியின் செயல்பாட்டினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாரதியார் வாழ்க்கை வரலாற்று படத்தினை பார்வையிட்டார்.

    ×