என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய பஸ் சேவையை கல்யாணசுந்தரம் எம்.பி. தொடங்கி வைத்தார்.
தளவாபாளையம், மருங்கை பகுதியில் புதிய பஸ் சேவை
- முதலமைச்சர் உத்தரவின் பேரில் அந்த வழிதடத்தில் புதிய பஸ் சேவை தொடங்கப்பட்டது.
- வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் சாரநாத் நகர், தைக்கால் தளவாபாளையம், மருங்கை, கத்திரிநத்தம், குளிச்சப்பட்டு பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் அந்த வழிதடத்தில் புதிய பஸ் சேவை தொடங்கப்பட்டது.
இந்த புதிய பஸ் சேவையை தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உடன் அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக.சுரேஷ், கும்பகோணம் போக்குவரத்து கோட்ட மேளாலர் பாலமுருகன், உதவி பொறியாளர் கருப்புசாமி, கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Next Story






