search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lokesh Kanagaraj"

    • இயக்குநராக இருந்து நடிகராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
    • இப்பாடல் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    ஆக்ஷன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். ஆக்ஷன் திரைப்படத்தை தனக்கு என ஒரு பாணி வைத்து இயக்குவதில் லோகேஷ் கனகராஜ் திறமை பெற்றவர்.

    லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவை அவரின் LCU யூனிவர்ஸ் என்ற கான்சப்டில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். அவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் பெரும் அளவுக்கு மக்களால் கொண்டாடப்பட்டது. 500 கோடி ரூபாய் வசூலையும் குவித்தது.

    இதனால் பல முன்னணி நாயகர்கள் தனக்கு படம் இயக்கி தருமாறு லைனில் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் புதிய அவதாரம் எடுத்து இருக்கிறார். இயக்குநராக இருந்து நடிகராக மாறியுள்ளார்.

    கமல்ஹாசன் தயாரித்து ஸ்ருதிஹாசன் இசையில் ஒரு இண்டிபெண்டன்ட் ஆல்பம் பாடலை உருவாக்கி இருக்கின்றனர். அதில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்க, பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.இப்பாடலுக்கு "இனிமேல்" என தலைப்பு வைத்துள்ளனர்.

    இப்பாடலின் டீசர் வெளியிடப்பட்டது. லோகேஷ் கனகராஜ் நடிகராக பார்ப்பத்தில் புதிதாக இருக்கிறது. டீசரில் பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசனின் காதல் காட்சிகளே இடம்பெற்று இருக்கிறது. காதலில் இருந்து அவர்கள் கல்யாணம் செய்துக் கொள்ளும் வரை காட்சிகள் அமைந்துள்ளன.

    இப்பாடல் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் இப்பாடலின் டீசரின் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
    • கிளைமேக்ஸ் காட்சியில் இயக்குநர் லோகேஷ் நடித்திருந்தார்.

    'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' மற்றும் லியோ போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார். இந்த பாடலுக்கான போஸ்டர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், இந்த பாடலின் டீசர் நாளை (மார்ச் 21) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

     


    முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது கமல்ஹாசன் நிறுவனம் சார்பில் உருவாகும் பாடலில் லோகேஷ் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடலுக்கான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது
    • எக்ஸ் பக்கத்தில் ’ரோல் ரிவர்ஸ் இஸ் தி நியூ வெர்ஸ்’என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

    சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தன் நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினார். அர்ஜூன் தாஸ், இயக்குனர் ரத்ன குமார், நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ருதி ஹாசன் போன்ற பலர் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அன்று அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடலுக்கான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது.

    ஸ்ருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எக்ஸ் பக்கத்தில் 'ரோல் ரிவர்ஸ் இஸ் தி நியூ வெர்ஸ்'என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். மாஸ்டர் படத்தில் கவுரவ வேடத்தில் படத்தின் கடைசியாக லோகேஷ் கனகராஜ் நடித்திருப்பார்.

    அதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் நடிகராக நடிக்கப்போகும் முதல் ஆல்பம் பாடல் இதுவே. இந்த வெற்றி கூட்டணியில் அமையும் இப்பாடல் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

    • நடிகை ஷ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் இணைந்து ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளனர்.
    • அதன் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டனர்

    தமிழ் சினிமாவின் ஆக்ஷன் படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் எடுக்கும் படங்களில் அவருக்கென ஒரு ஸ்டைல் இருக்கும். கடைசியாக 2023 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' ரசிகர்களின் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் முதன் முறையாக தனக்கு என LCU யூனிவர்ஸ் என்ற ஒரு கான்சப்டை உருவாக்கினார்.

    இதற்கு முன் கமலஹாசன் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கினார். அப்படமும் கமல் ரசிகர்களின் மத்தியில் மிகவும் கொண்டாட பெற்றது. கமல்ஹாசன் திரையுலக பயணத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் மிகவும் முக்கியமான படம். ரஜினி காந்தின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

    மார்ச் 14 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகெராஜ் நேற்று இரவு தன் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் நடிகை ஷ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் இணைந்து ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளனர். அதன் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டனர். இப்பாடலை ஷ்ருதிஹாசன் எழுதி, பாடி அதை இயக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    • லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கி வருகிறார்.
    • குறும்படத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    இளம் இயக்குனர் பட்டியலில் மறுக்க முடியாத இடத்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்யை வைத்து அவர் இயக்கிய "லியோ" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    ஹோலிவுட் படத்தில் வரும் மார்வல் யூனிவர்ஸ், டி.சி. காமிக்கலில் வரும் யூனிவர்ஸ் கான்சப்ட்டுகளைப் போல, தனக்கென்று ஒரு தனி ஸ்டைலாக லோகேஷ் சினிமேடிக் யூனிவர்ஸ் ( LCU) என்று ஒன்றை உருவாக்கினார்.

    அதில் விக்ரம், லியோ, கைதி போன்ற படங்கள் உள்ளடக்கம். லியோ திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கி வருகிறார். 

    அதை தொடர்ந்து கைதி- 2 எடுக்க திட்டமிட்டுள்ளார். தற்போது வந்த அண்மை தகவல்கள்படி லோகேஷ் கனகராஜ் LCU வை மையமாக வைத்து 15- 20 நிமிட நேரத்திற்கு ஒரு குறும்படம் இயக்க இருக்கிறார்.

    அதற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க உள்ளார்.

    குறும்படத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன், கமல் மற்றும் சூர்யா நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    வெளியான செய்திகள் உண்மையாக இருந்தால் இந்த குறும்படம் கைதி - 2 படத்திற்கு முன்னே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மதன் கார்க்கியின் மொழி நடை எண்ட்வார்ஸ் தொடருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
    • புத்தக வெளியீட்டு விழாவின்போது தமிழ் விளம்பர பாடல் வெளியிடப்பட்டது.

    சென்னையில் முதல் முறையாக நடைபெற்ற காமிக் கான் இந்தியா விழாவில் பிரபல திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.

    "எண்ட்வார்ஸ்: வால்யூம் 2 – டார்க் கான்குவெஸ்ட்" (Endwars: Volume 2 – Dark Conquest) என்ற ஆங்கிலப் புத்தகம், "எண்ட்வார்ஸ்: தி சூசன் ஒன்" (Endwars: The Chosen One - Volume 1) என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம் "இறுதிப்போர்- மண்ணவன் ஒருவன்" ஆகும். இதில் "இறுதிப்போர் – மண்ணவன் ஒருவன்" புத்தகத்தை மதன் கார்கி மொழிமாற்றம் செய்துள்ளார்.

     


    சென்னை காமிக் கண்காட்சியில் புத்தக வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் ஏராளமான காமிக் வாசகர்கள் கலந்து கொண்டனர். கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் என நிரம்பியிருந்த அந்த இடம் காமிக் புத்தக ஆர்வலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    சித்திரக்கதைகளின் வசீகரிக்கும் உலகத்தைக் கொண்டாடும் படைப்பாளிகள் மற்றும் ஆர்வமுள்ள வாசகர்களின் சந்திப்பாக இது அமைந்தது. இந்த விழாவில் பங்கேற்று இந்த 2 புத்தகங்களையும் வாங்கிய வாசகர்களுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது கையெழுத்திட்ட பிரதிகளை வழங்கினார். 

    • விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இரண்டாம் பாகம் குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டன.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் லியோ. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியானதில் இருந்தே, இதன் இரண்டாம் பாகம் குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அங்கிருந்து கிளம்பும் போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், லியோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார்.

    "லியோ 2 படத்தின் கதை இருக்கு, விஜய் OK சொன்னால் எப்ப வேண்டுமானாலும் பண்ணிடலாம்," என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு மூன்று மாதங்களில் துவங்கும் என்றும் தெரிவித்தார். 

    • ரஜினி ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    'ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து ரஜினி நடிக்கும் 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினியை இளமையாகக் காட்ட டீ- ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது.


    இந்நிலையில், ரஜினியின் 171-வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, 'வேட்டையன்' படப்பிடிப்பிற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லோகேஷ் கனகராஜ் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

    'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ்கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார்.


    இயக்குனர் லோகேஷ் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். 'ஜி ஸ்குவாட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர் 'பைட் கிளப்' என்ற படத்தையும் சமீபத்தில் வெளியிட்டார். அறிமுக இயக்குனர் அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது.

    இந்நிலையில் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குழப்பியுள்ளனர். அதாவது, ஸ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் நேருக்கு நேர் பார்த்து கொண்டிருக்கும் காட்சி இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. மேலும், 'இனிமேல் மாயையே தீர்வாகும்... இதுவே உறவு.. இதுவே சூழ்நிலை... இதுவே மாயை' என பதிவிடப்பட்டுள்ளது.


    இந்த போஸ்டரை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் இசை ஆல்பத்தை லோகேஷ் இயக்குகிறாரா? என சமூக வலைதளத்தில் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    • வில்லேஜ் குக்கிங் சேனல் 22 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது.
    • இந்த யூடியூப் சேனல் மிகவும் பிரபலமாக உள்ளது.

    யூ டியூபில் பலரும் சமையல் சேனல்கள் வைத்திருந்தாலும் வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனல் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. 22 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள இந்த யூடியூப் சேனலை கடந்த 2018-ஆம் ஆண்டு சுப்பிரமணியன், முருகேசன், அய்யனார், தமிழ்செல்வன், முத்து மாணிக்கம், பெரியதம்பி ஆகியோர் தொடங்கினர்.

    இந்த குழுவை முன்னாள் சமையல் கலைஞரான பெரியதம்பி வழி நடத்துகிறார். இந்த சேனல் வெறும் உணவு சமைப்பதால் மட்டும் பிரபலமாகவில்லை. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் கிராமத்து பின்னணியில் உணவு தயாரிக்கப்படுவதால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது முன்னிலையில் இருக்கிறது.


    அதுமட்டுமல்லாமல் தமிழகத்திற்கு வந்த ராகுல் காந்தி இவர்களின் சமயலை சுவைத்து பாராட்டினார். மேலும், இந்த குக்கிங் சேனல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி என திரைப்பிரபலங்கள் பலர் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தனர். இதன் மூலம் இவர்கள் மேலும் பிரபலமானார்கள்.

    இந்நிலையில், 'விக்ரம்' படத்திற்காக ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்று வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழு தெரிவித்துள்ளது. நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இந்த குழு, "இந்த சேனல் ஆரம்பிக்கும் முன்பே கன்டன்-யை தாண்டி எதுவும் செய்ய கூடாது என்று முடிவு செய்துவிட்டோம். விக்ரம் படத்தில் நடித்ததற்கு கூட ஒரு பைசா வாங்கவில்லை. எவ்வளவு ஆஃபர் வந்தாலும் வேண்டாம் என்று கூறியுள்ளோம்.


    ஏன் ஸ்பான்சர்சிப் கன்டன் செய்யவில்லை என்றால் ஒருவரிடம் நாம் பணம் வாங்கிக் கொண்டோம் என்றால் அவர்களுக்காக வேலை பார்க்க வேண்டும். அவங்களுக்கு என்று நம் வீடியோவில் நேரம் ஒதுக்க வேண்டும். அது எங்களுக்கு சரியாகப்படவில்லை என்றதால் இவ்வாறு செய்கிறோம். அதுமட்டுமல்லாமல் பணத்தின் மேல் ஆசை வரக்கூடாது. யூடியூபில் இருந்து வரும் வருமானம் போதும் என்பதற்காகவும் இவ்வாறு செய்கிறோம்" என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'வேட்டையன்' திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    'ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வேட்டையன்' படத்தின் தலைப்பு மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை லோகேஷ் வெளியிட்டிருந்தார்.


    இந்நிலையில், ரஜினியின் 172-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினியின் 172-வது படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தனது படங்களில் சமூகம் சார்ந்த கருத்துகளை வைத்து படம் இயக்கும் மாரி செல்வராஜ், ரஜினியின் படத்தை எப்படி இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    • லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்படி வழக்குப்பதிவு செய்து 'லியோ' படத்தை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதையடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


    அந்த மனுவில், 'லியோ' திரைப்படத்தில் ஆயுத கலாச்சாரமும், மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி முரண்பாடான கருத்துகளையும், போதை பொருள் பயன்பாடு, பெண்கள் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற கருத்தை விதித்தல் உள்ளிட்ட காட்சிகளை லோகேஷ் கனகராஜ் காட்சிப்படுத்தி உள்ளார்.


    இதுமட்டுமின்றி கலவரம், சட்டவிரோத செயல்கள், போதை பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், காவல்துறை உதவி உடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என்ற சமூகவிரோத கருத்துகளை 'லியோ' படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார். இது போன்ற படங்களை தணிக்கை குழு முறையாக அய்வு செய்ய வேண்டும். லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்படி வழக்குப்பதிவு செய்து 'லியோ'படத்தை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என கோரி இருந்தார்.


    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளன? இது தொடர்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரிவான பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

    ×