ஸ்ருதிஹாசனுடன் இணையும் லோகேஷ்..? குழப்பத்தில் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் பல படங்களை இயக்கியுள்ளார்.இவர் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
ஸ்ருதிஹாசனுடன் இணையும் லோகேஷ்..? குழப்பத்தில் ரசிகர்கள்
Published on

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ்கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். 'ஜி ஸ்குவாட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர் 'பைட் கிளப்' என்ற படத்தையும் சமீபத்தில் வெளியிட்டார். அறிமுக இயக்குனர் அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குழப்பியுள்ளனர். அதாவது, ஸ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் நேருக்கு நேர் பார்த்து கொண்டிருக்கும் காட்சி இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. மேலும், 'இனிமேல் மாயையே தீர்வாகும்... இதுவே உறவு.. இதுவே சூழ்நிலை... இதுவே மாயை' என பதிவிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் இசை ஆல்பத்தை லோகேஷ் இயக்குகிறாரா? என சமூக வலைதளத்தில் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com