நடிகராக லோகேஷ் - 'ரோல் ரிவர்ஸ் இஸ் தி நியூ வெர்ஸ்'

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடலுக்கான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதுஎக்ஸ் பக்கத்தில் ’ரோல் ரிவர்ஸ் இஸ் தி நியூ வெர்ஸ்’என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
நடிகராக லோகேஷ் - 'ரோல் ரிவர்ஸ் இஸ் தி நியூ வெர்ஸ்'
Published on

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தன் நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினார். அர்ஜூன் தாஸ், இயக்குனர் ரத்ன குமார், நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ருதி ஹாசன் போன்ற பலர் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அன்று அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடலுக்கான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது.

ஸ்ருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எக்ஸ் பக்கத்தில் 'ரோல் ரிவர்ஸ் இஸ் தி நியூ வெர்ஸ்'என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். மாஸ்டர் படத்தில் கவுரவ வேடத்தில் படத்தின் கடைசியாக லோகேஷ் கனகராஜ் நடித்திருப்பார்.

அதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் நடிகராக நடிக்கப்போகும் முதல் ஆல்பம் பாடல் இதுவே. இந்த வெற்றி கூட்டணியில் அமையும் இப்பாடல் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com