search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lionel Messi"

    பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் ஆன பீலே, தனது அணியில் மெஸ்சிக்குதான் இடம், ரொனால்டோவிற்கு இல்லை என தெரிவித்துள்ளார். #Messi #Ronaldo #Pele
    கால்பந்து உலகில் ஜாம்பவனாக திகழ்பவர் பிரேசில் நாட்டின் பீலே. தற்போது மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர் சிறந்த வீரர்களாக திகழ்ந்து வருகிறார். நான் அணியை தேர்வு செய்தால் மெஸ்சிக்குதான் இடம் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பீலே கூறுகையில் ‘‘மெஸ்சியையும், ரொனால்டோவையும் ஒப்பிடுவது கடினமானது. ரொனால்டோவை விட மெஸ்சி முற்றிலும் வித்தியாசமான ஸ்டைலை கொண்டவர். ஏராளமானோர் என்னை ஜார்ஜ் பெஸ்ட் உடன் ஒப்பிடவது உண்டு. ஆனால், நாங்கள் வித்தியாசமான விளையாட்டு ஸ்டைலை உடையவர்கள். மெஸ்சி (more organised), ரொனால்டோ (more of a center-forward).



    நான் எனது அணியை தேர்வு செய்தார் ரொனால்டோவை விட மெஸ்சியைத்தான் தேர்வு செய்வேன். என்னுடைய அப்பா சிறந்த (center-forward) வீரர். அவர் எனக்கு எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார். என்னைவிட மூன்று முறை கூடுதலாக கோல் அடிக்க வேண்டும் என்று கூறினார். அவர்தான் என்னை கால்பந்து விளையாட ஊக்குவித்தார். அவர்தான் எனக்கு உத்வேகம் அளித்தவர்’’ என்றார்.
    சர்வதேச அணியில் விளையாடுவது குறித்து முடிவு எடுக்க மெஸ்சிக்கு நேரம் கொடுக்க வேண்டும் என அர்ஜென்டினா முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார். #Messi
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்றது. உலகக்கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா காலிறுக்கு முந்தைய சுற்றோடு வெளியேறியது. இதனால் அந்த அணியின் கேப்டனாக மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் மெஸ்சி தனது சர்வதேச கால்பந்து விளையாட்டு குறித்து ஏதும் பேசாமல் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் சர்வதேச போட்டி குறித்து முடிவு எடுக்க மெஸ்சிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் அர்ஜென்டினா வீரர் சேவியர் சவியோலா தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சேவியர் சவியோலா கூறுகையில் ‘‘ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் நாம் எதிர்பார்த்தபடி அர்ஜென்டினா அணி விளையாடவில்லை என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். மெஸ்சிக்கு சற்று ஓய்வு தேவை. அர்ஜென்டினா அணிக்காக விளையாட விரும்புகிறாரா? என்பதை முடிவு செய்ய அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், அணிக்கு திரும்புவது அவரது சொந்த விஷயம்’’ என்றார்.
    கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி வீக்கானது என்று பார்சிலோனா புகழ் மெஸ்சி குறிப்பிட்டுள்ளார். #Messi #Barcelona
    கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ - மெஸ்சி இடையே கடும் போட்டி நிலவும். இருவரும் பரம எதிரிகளாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறது.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும், மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும் விளையாடிய போது இருவரும் எதிரெதிராக விளையாடும்போது அனல் பறக்கும். தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் யுவான்டஸ் அணிக்கு மாறியுள்ளார்.



    இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி வீக்கானது என்று பார்சிலோனா புகழ் மெஸ்சி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘சிறந்த வீரர்களை கொண்ட ரியல் மாட்ரிட் அணி உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் சற்று தரம் குறைந்த அணியாக இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.



    யுவான்டஸ் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது’’ என்றார்.
    2017-18-ம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் யூனியன் சார்பில் வழங்கப்படும் விருதிற்கான பட்டியலில் மெஸ்சி பெயர் இல்லை. #Messi #Ronaldo
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து சங்கங்களின் யூனியன் சார்பில் 2017-18 சீசனின் சிறந்த வீரரை தேர்வு செய்து விருது வழங்கும். பல வீரர்களை தேர்வு செய்து அதில் இருந்து மூன்று பேரை இறுதியாக தேர்வு செய்வார்கள். இதில் ஒருவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவார்.



    கடைசி மூன்று பேரை தேர்வு செய்து இன்று முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி பெயர் இடம்பெறவில்லை.



    யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.



    இறுதிப் போட்டிக்கு முன்னேறிய லிவர்பூல் அணியின் முகமது சாலாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதன்முறையாக மூன்று பேர் கொண்ட பட்டியலில் சாலா இடம்பிடித்துள்ளார்.
    பார்சிலோனா மெஸ்சி அறிமுகம் ஆன பிறகு ரியல் மாட்ரிட் அணியை விட அதிக கோப்பைகளை வென்று சாதனைப் படைத்துள்ளது. #Messi
    அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி. 31 வயதாகும் இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணிகளில் ஒன்றான பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். சிறுவயதில் இருந்தே பார்சிலோனா கிளப்பில் வளர்ந்த மெஸ்சி 2003 முதல் 2004 வரை சி அணிக்காகவும், 2004 முதல் 2005 வரை பார்சிலோனா பி அணிக்காகவும் விளையாடினார்.

    2004-ல் இருந்து பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 418 போட்டிகளில் விளையாடி 383 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா அணிக்கு பரம எதிரி ரியல் மாட்ரிட் கிளப்பாகும். யார் அதிக கோப்பைகள் வெல்வது என்பதில் இரு அணிகளுக்கும் பனிப்போர் நடக்கும்.



    மெஸ்சி பார்சிலோனா அணிக்கு விளையாட வருவதற்கு முன்பு ரியல் மாட்ரிட் 72 பதக்கங்களை வென்றிருந்தது. பார்சிலோனா 62 பதக்கங்களுடன் பின்தங்கியிருந்தது.

    மெஸ்சி பார்சிலோனா அணிக்கு வந்த பிறகு பல கோப்பைகளை வாங்கிக் கொடுத்தது. இதன்காரணமாக தற்போது பார்சிலோனா 95 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ரியல் மாட்ரிட் 92 பதக்கத்துடன் பின்தங்கியுள்ளது.
    பார்சிலோனா அணிக்கு அதிக கோப்பையை வாங்கிக் கொடுத்தவர் பட்டியலில் 33 கோப்பையுடன் மெஸ்சி முதல் இடத்தை பிடித்துள்ளார். #Messi #Barcelona
    அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்சி. இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனாவிற்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற ஸ்பெயின் நாட்டின் சூப்பர் கோபா இறுதிப் போட்டியில் பார்சிலோனா 2-1 என செவியாவை வீழ்த்தி கோப்பை கைப்பற்றியது.



    மெஸ்சி பார்சிலோனாவிற்காக வாங்கிக் கொடுத்த 33-வது சாம்பியன் டிராபி இதுவாகும். இதன்மூலம் பார்சிலோனா அணிக்கு அதிக சாம்பியன் பட்டம் வாங்கிக் கொடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் கேப்டனாக இருந்த இனியஸ்டா 32 கோப்பைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். பின்கள வீரர் ஜெர்ராடு பிக்காய் 28, பஸ்குயட்ஸ் 28, சேவி 25 ஆகியோர் அடுத்தடுத்து இடத்தை பிடித்துள்ளனர்.
    நிதி கண்னோட்டத்தில் மெஸ்சி எங்களுக்கு முக்கியமானவர் என்று அர்ஜென்டினா கால்பந்து அசோசியேன்ஸ் தலைவர் கிளாடியோ தபியா தெரிவித்துள்ளார். #Messi
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லீக் சுற்றில் குரோஷியாவிற்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததால், நாக்அவுட் சுற்றில் பிரான்ஸை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதில் 2-4 எனத் தோல்வியடைந்து காலிறுதிக்குக் கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. இதனால் நட்சத்திர வீரர் மெஸ்சி மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதனால் அவர் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், உலகக்கோப்பை தோல்விக்குப் பின் மெஸ்சி ஏதும் பேசாமல் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் நிதி கண்ணோட்டத்தில் மெஸ்சி எங்களுக்கு முக்கியமானவர் என்று அர்ஜென்டினா கால்பந்து அசோசியேசன்ஸ் தலைவர் கிளாடியோ தபியா தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கிளாடியோ தபியா கூறுகையில் ‘‘உணர்ச்சி ரீதியாக இந்த தோல்வி அவருக்கு மிகப்பெரிய அடியாகும். ஆனால், அர்ஜென்டினாவிற்கு அவர் தேவை. நிதி கண்ணோட்டத்தில் மெஸ்சி அர்ஜென்டினாவிற்கு முக்கியமானவர்.

    மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என்று நினைக்கிறேன். அவர் அர்ஜென்டினா தேசிய அணியை மிகவும் நேசிக்கிறார். நாங்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஜாம்பவான்களான மெஸ்சி, ரொனால்டோ 1270 நிமிங்கள் கோல் போட முடியாமல் தவித்துள்ளனர். #messi #Ronaldo #WorldCup2018
    கால்பந்து விளையாட்டில் இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களாக மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் கருதப்படுகிறார்கள். மெஸ்சி லா லிகா புகழ் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறது. ரொனால்டோ முதலில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும், தற்போது ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள்.

    இருவரும் கால்பந்து விளையாட்டின் உயரிய விருதான பலோன் டி’ஆர் விருதை தலா ஐந்து முறை கைப்பற்றியுள்ளார்கள். கிளப் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இருவரும் சொந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது. குறிப்பாக நாக்அவுட் சுற்றில் படுமோஷம்.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-4 எனவும், போர்ச்சுக்கல் 1-2 எனவும் தோல்வியடைந்தது. ரொனால்டோ லீக் ஆட்டத்தில் நான்கு கோல்களும், மெஸ்சி ஒரு கோலும் அடித்தனர். நேற்றைய ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை.



    இதன்மூலம் உலகக்கோப்பை கால்பந்து நாக்அவுட் போட்டியில் இருவரும் 1270 நிமிடங்கள் விளையாடி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதில் மெஸ்சி முன்னணியில் உள்ளார். அவர் 756 நிமிடங்கள் விளையாடியுள்ளார். ரொனால்டோ 514 நிமிடங்கள் விளையாடியுள்ளார். ஜாம்பவான்கள் இந்த மோசமான சாதனைக்குள் சிக்கியுள்ளனர்.

    அடுத்த உலகக்கோப்பையில் இவர்கள் விளையாடுவார்களா? என்பது தெரியவில்லை. இதனால் மோசமான சாதனை அப்படி வைத்திவிட்டு செல்வார்கள் என்றுதான் தோன்றுகிறது.
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து பிரபல வீரர்களான மெஸ்சி மற்றும் ரொனால்டோவின் அணிகள் ஒரே நாளில் வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #FIFA2018 #WorldCup2018 #LionelMessi #CristianoRonaldo

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் கலந்துகொண்ட இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன. 

    நேற்று நடைபெற்ற முதல் நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ், லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா அணியை வீழ்த்தியது. இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் உருகுவே, கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையினான போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது.



    உலக அளவில் அதிக ரசிகர்கள் கொண்ட வீரர்கள் என்றால் அது மெஸ்சி மற்றும் ரொனால்டோவாக தான் இருக்க முடியும். இவர்கள் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்ற பட்டத்தை மாறி மாறி கைப்பற்றி வருகின்றனர். 

    அவர்கள் அணிகள் நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெற்றால் நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மெஸ்சி மற்றும் ரொனால்டோவின் அணிகள் ஒரே நாளில் தோல்வியடைந்து உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. இதனால் இரு வீரர்களின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. 



    இது அவர்கள் இருவரின் ரசிகர்கள் மற்றும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகக்கோப்பை தான் இருவர் விளையாடும் கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என கூறப்படுகிறது. #FIFA2018 #WorldCup2018 #LionelMessi #CristianoRonaldo
    நாக்அவுட் சுற்றில் விளையாடுவதற்காக ஹோட்டலில் தங்கியுள்ள மெஸ்சி, தினமும் கிறிஸ்டியானா ரொனால்டோவின் முகத்தில்தான் விழிக்கிறார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் நேற்றோடு முடிவடைந்தது. நாளை முதல் நாக்அவுட் சுற்றுகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் கசன் மைதானத்தில் நடைபெறுகிறது. அர்ஜென்டினா கடைசி லீக் ஆட்டத்தில் கடந்த 26-ந்தேதி நைஜீரியாவை எதிர்கொண்டது.

    அதன்பின் நாளைய போட்டிக்காக கசனில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அர்ஜென்டினா வீரர்கள் தங்கியுள்ளனர். அங்கிருந்து மைதானத்திற்குச் சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    மெஸ்சி தங்கியுள்ள ஓட்டல் அருகில் உள்ள நான்கு ஸ்டார் நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் கடந்த ஆண்டு நடைபெற்ற கான்பெடரேசன் கோப்பைக்காக போர்ச்சுக்கல் அணி தங்கியிருந்தது. அப்போது அந்த ஹோட்டல் சுவற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ராட்சத படம் வரையப்பட்டிருந்தது.



    தற்போது மெஸ்சி காலையில் எழுந்ததுடன் இந்த படத்தில்தான் விழிக்க வேண்டிய நிலை உள்ளது. இருவரும் கால்பந்து போட்டியில் எப்போதும் எதிராயாகத்தான் திகழ்கிறார்கள்.

    ஒருவேளை நாக்அவுட் சுற்றில் அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் காலிறுதியில், போஸ்டரில் பார்த்த முகத்தை மெஸ்சி நேரில் சந்திக்க வேண்டியிருக்கும்.
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்சியின் அணி தோற்ற விரக்தியில் வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலை செய்துகொண்ட கேரள வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. #FIFA2018 #LionelMessi #Argentina #KeralaFanSuicide

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தின் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த தினு அலெக்ஸ் என்ற வாலிபர் அர்ஜெண்டினா அணியின் ஆதரவாளராக இருந்தார். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் மெஸ்சியின் தீவிர ரசிகராக இருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்தது. 

    இதனால் மனமுடைந்த அலெக்ஸ் தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். அந்த தற்கொலை கடிதத்தில் மெஸ்சி தோற்தை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 


    தற்கொலை செய்துகொண்ட தினு அலெக்ஸ்

    இது குறித்து பேசிய அலெக்சின் தந்தை, அலெக்ஸ் மெஸ்சியின் தீவிர ரசிகன். அவன் அணி தோல்வியடைந்ததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டான் என கூறினார். இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுனர். அதற்காக மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது. அந்த நாய் அலெக்ஸ் வீட்டின் அருகே உள்ள ஆறுவரை சென்று நின்றுவிட்டது. இதனால் அவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என கூறப்பட்டது.

    இந்நிலையில், அவரது வீட்டின் அருகே உள்ள ஆற்றில் இருந்து அலெக்சின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. அவர் குதித்ததாக கூறப்படும் இடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அவரது உடலை மீட்புப்படையினர் கண்டெடுத்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    கால்பந்து போட்டியில் மெஸ்சி அணி தோற்ற விரக்தியில் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்திகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #FIFA2018 #LionelMessi #Argentina #KeralaFanSuicide
    உலக கால்பந்து போட்டியில் மெஸ்சியின் அர்ஜெண்டினா அணி தோற்ற விரக்தியில் ரசிகர் ஒருவர் தற்கொலை கடிதம் எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தின் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த தினு அலெக்ஸ் என்ற வாலிபர் அர்ஜெண்டினா அணியின் ஆதரவாளராக இருந்தார். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் மெஸ்சியின் தீவிர ரசிகராக இருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்தது.


    இதனால் மனமுடைந்த அலெக்ஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வீட்டில் இருந்த தற்கொலை கடிதத்தில் மெஸ்சி தோற்தை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேசிய அலெக்சின் தந்தை, அலெக்ஸ் மெஸ்சியின் தீவிர ரசிகன். அவன் அணி தோல்வியடைந்ததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டான் என கூறினார். கால்பந்து அணி தோல்வியடைந்தற்கு வாலிபர் வீடை விட்டு வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×