search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிரியான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முகத்தில் விழிக்கும் மெஸ்சி
    X

    எதிரியான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முகத்தில் விழிக்கும் மெஸ்சி

    நாக்அவுட் சுற்றில் விளையாடுவதற்காக ஹோட்டலில் தங்கியுள்ள மெஸ்சி, தினமும் கிறிஸ்டியானா ரொனால்டோவின் முகத்தில்தான் விழிக்கிறார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் நேற்றோடு முடிவடைந்தது. நாளை முதல் நாக்அவுட் சுற்றுகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் கசன் மைதானத்தில் நடைபெறுகிறது. அர்ஜென்டினா கடைசி லீக் ஆட்டத்தில் கடந்த 26-ந்தேதி நைஜீரியாவை எதிர்கொண்டது.

    அதன்பின் நாளைய போட்டிக்காக கசனில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அர்ஜென்டினா வீரர்கள் தங்கியுள்ளனர். அங்கிருந்து மைதானத்திற்குச் சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    மெஸ்சி தங்கியுள்ள ஓட்டல் அருகில் உள்ள நான்கு ஸ்டார் நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் கடந்த ஆண்டு நடைபெற்ற கான்பெடரேசன் கோப்பைக்காக போர்ச்சுக்கல் அணி தங்கியிருந்தது. அப்போது அந்த ஹோட்டல் சுவற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ராட்சத படம் வரையப்பட்டிருந்தது.



    தற்போது மெஸ்சி காலையில் எழுந்ததுடன் இந்த படத்தில்தான் விழிக்க வேண்டிய நிலை உள்ளது. இருவரும் கால்பந்து போட்டியில் எப்போதும் எதிராயாகத்தான் திகழ்கிறார்கள்.

    ஒருவேளை நாக்அவுட் சுற்றில் அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் காலிறுதியில், போஸ்டரில் பார்த்த முகத்தை மெஸ்சி நேரில் சந்திக்க வேண்டியிருக்கும்.
    Next Story
    ×