search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lionel Messi"

    • பிபாவின் சிறந்த வீரர் விருதை மெஸ்சி வென்றார்.
    • பிபாவின் சிறந்த வீராங்கனை விருதை புடெல்லாஸ் வென்றார்.

    பாரிஸ்:

    சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்சி, கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா அறிவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பிபா சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2022-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கும், சிறந்த வீராங்கனை விருது ஸ்பெயினின் அலெக்சியா புடெல்லாசுக்கும் வழங்கப்பட்டது.

    கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.

    அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    • கால்பந்தாட்ட கோல்கீப்பராக தனது விளையாட்டு கரியரை தொடங்கியவர் டோனி.
    • டோனி மற்றும் மெஸ்சி இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

    ராஞ்சி:

    கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்சி தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை டோனியின் செல்ல மகள் ஸிவாவுக்கு அனுப்பியுள்ளார். இதனை ஸிவா தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    கால்பந்தாட்ட கோல்கீப்பராக தனது விளையாட்டு கரியரை தொடங்கியவர் டோனி. பின்னர் கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் கீப்பராக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களையும் வென்ற ஒரே கேப்டனும் அவர்தான்.

    டோனி மற்றும் மெஸ்சி இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அதனை உலகக் கோப்பையை வைத்தே ஓர் உதாரணமாக சொல்லலாம். இருவரும் தங்கள் நாட்டை உலகக் கோப்பை தொடரில் வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்லச் செய்தவர்கள். இருவருமே இறுதிப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள். அவர்கள் விளையாடிய விளையாட்டு மட்டும்தான் இங்கு வேறுபடுகிறது.

    இந்தச் சூழலில் உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு டோனியின் ஏழு வயதான மகள் ஸிவாவுக்கு அர்ஜென்டினா அணியின் ஜெர்ஸியை தனது கையொப்பமிட்டு மெஸ்ஸி அனுப்பி உள்ளார்.

    "Para Ziva என அவர் ஸ்பானிய மொழியில் எழுதி தனது கையொப்பமிட்டு இந்த ஜெர்ஸியை மெஸ்ஸி, ஸிவாவுக்கு அனுப்பியுள்ளார். அதனை ஆசையுடன் ஸிவா அணிந்துகொண்டு 'அப்பாவை போலவே மகளும்' என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

    • அடுத்தடுத்து நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்தும் அசத்தியுள்ளார். இதனால் மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்துள்ளார்.

    கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெரிய கோஷங்களுடன் மகுடத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா அணி. நொடிக்கு நொடி பரபரப்பாக இருந்த இப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா.

    இந்த போட்டியில் அர்ஜெண்டினா கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்ததை விட, எப்படியாவது லியோனல் மெஸ்சி வென்றுவிட வேண்டும் என்று தான் கடும் பிரார்த்தனையில் இருந்தனர். இதற்கு காரணம் மெஸ்சி விளையாடும் கடைசி உலகக்கோப்பை தொடராக இது இருந்திருப்பது தான். இதனை அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

    சுமார் 18 ஆண்டுகளாக கால்பந்து உலகில் கொடிகட்டி பறக்கும் மெஸ்சிக்கு இந்த உலகக்கோப்பையில் சாதனைகளும் குவிந்தன. இதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்துள்ளார். மேலும் அடுத்தடுத்து நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்தும் அசத்தியுள்ளார். இதனால் மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில் மெஸ்சியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட்டின் கடவுளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கு உலகக்கோப்பை என்பது மிகப்பெரிய கனவாகவே இருந்தது. எனினும் அவர் விளையாடும் கடைசி உலகக்கோப்பையின் போது லட்சியம் நிறைவேறியிருந்தது. இதே போன்ற சூழல் தான் இன்று மெஸ்சிக்கும் நிறைவேறியுள்ளது.

    இந்தியாவின் 28 வருட உலகக்கோப்பை கனவு சச்சினுக்காகவே நிறைவேறியது போல, இன்று அர்ஜெண்டினாவின் 36 ஆண்டு கால கனவு லியோனல் மெஸ்சிக்காக நிறைவேறியுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் ஒப்பிட்டு, மீம்ஸ் மற்றும் கருத்துகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    • உலக கோப்பையை வெல்வது எனது வாழ்நாள் லட்சியமாக கருதினேன்.
    • கால்பந்தை நேசிப்பதால் மேலும் சில போட்டியில் ஆடுவேன்.

    தோகா:

    உலக கோப்பை இறுதி போட்டி தனது கடைசி ஆட்டம், அதோடு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று மெஸ்சி அறிவித்து இருந்தார்.

    குரோஷியாவுக்கு எதிரான அரை இறுதியில் பெற்ற வெற்றிக்கு பிறகு அர்ஜென்டினா கேப்டனான அவர் இதை தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் உலக கோப்பையை வென்று கனவு நனவானதால் மெஸ்சி தனது ஓய்வு முடிவை மாற்றியுள்ளார். அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் ஆடுவேன் என்று அவர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலக கோப்பையை வெல்வது எனது வாழ்நாள் லட்சியமாக கருதினேன். உலக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன். உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளை அனுபவிக்க விரும்புகிறேன். கால்பந்தை நேசிப்பதால் மேலும் சில போட்டியில் ஆடுவேன்.

    உலக கோப்பைக்காக நான் மிகவும் ஏங்கினேன். கடவுள் இந்த பரிசை அளிப்பார் என்று முன்பே சொன்னேன். இந்த நேரத்தில் அது நடக்கும் என்பதை உணர்ந்தேன். இதற்காக நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். இறுதியில் எங்களால் அதை வெல்ல முடிந்தது. உலக கோப்பை அழகானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    35 வயதான லியோனல் மெஸ்சி 2005-ல் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அர்ஜென்டினா அணிக்காக 172 போட்டியில் விளையாடி 98 கோல்கள் அடித்துள்ளார்.

    • உலகக் கோப்பைப் பயணத்தை இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடிவுக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,
    • 35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியோடு அதாவது டிசம்பர் 18 ஆம் தேதி ஓய்வு பெறப்போவதாக லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தினார். அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இன்றைய போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-

    உலகக் கோப்பைப் பயணத்தை இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடிவுக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அடுத்த தொடர் வருவதற்கு பல வருடங்கள் ஆகும், என்னால் அதை செய்ய முடியாது என்று நினைக்கிறேன். இப்படி முடித்து கொள்வதே சிறந்தது என அவர் கூறினார்.

    35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார்.
    • அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி உள்ளார்.

    தோகா:

    கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார்.

    இந்நிலையில், மரடோனாவின் இந்த சாதனையை லியோனஸ் மெஸ்சி நேற்று முறியடித்தார்.

    கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் உலகின் முன்னணி வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்சி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் உலக கோப்பையில் 9 கோல்களை (22 ஆட்டம்) அவர் தொட்டார்.

    உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி உள்ளார்.

    • உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார்.
    • அவருக்கு அடுத்தபடியாக மரடோனா, மெஸ்சி உள்ளனர்.

    கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார். மரடோனாவின் இந்த சாதனையை லியோனஸ் மெஸ்சி சமன் செய்தார்.

    கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் உலகின் முன்னணி வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்சி மெக்சிகோவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். ஏற்கனவே சவுதி அரேபியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பையில் 8 கோல்களை (21 ஆட்டம்) அவர் தொட்டார்.

    மரடோனா கடந்த 2020 ஆண்டு நவம்பர் 25-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது 2-வது ஆண்டு நினைவு தினத்துக்கு மறுநாளில் மெஸ்சி இந்த சாதனையை சமன் செய்தார். உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மரடோனா, மெஸ்சி உள்ளனர்.

    • ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மெஸ்சியின் கட்-அவுட் அந்த வழியாக சென்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
    • பொதுமக்கள் மெஸ்சியின் கட்-அவுட்டை செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னணி வீரர்கள் பலருக்கும் கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    அவர்கள் கால்பந்து வீரர்களின் ஜெர்சி அணிந்தும், அவர்களை போலவே விளையாடியும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம் செருபுழா பகுதியை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சியின் 30 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட ராட்சத கட்-அவுட்டை உருவாக்கினர்.

    இந்த கட்-அவுட்டை அவர்கள் செருபுழா ஆற்றின் நடுவே வைத்தனர்.

    ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மெஸ்சியின் கட்-அவுட் அந்த வழியாக சென்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்கள் அதனை செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

    • உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களுள் மெஸ்ஸியும் ஒருவர்.
    • இவர் 2006-ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்காக முதல் முறையாக உலக கோப்பையில் களமிறங்கினார்.

    பியூனஸ் அயர்ஸ்:

    உலக கோப்பை கால்பந்து திருவிழா அடுத்த மாதம் கத்தாரில் தொடங்குகிறது. உலக கோப்பை கால்பந்தில் ஆதிக்கம் செலுத்திவரும் அணிகளில் ஒன்றான அர்ஜென்டினாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் லியோனல் மெஸ்ஸி.

    உலகின் 'ஆல் டைம்' தலை சிறந்த கால்பந்து வீரர்களுள் மெஸ்ஸிக்கு எப்போதும் தனி இடமுண்டு. 2006-ம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக முதல் முறையாக உலகக்கோப்பையில் களமிறங்கினார்.

    இந்நிலையில், இந்தாண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து தொடரே தனது கடைசி கால்பந்து உலக கோப்பை என மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஒரு நேர்காணலில் பேசிய மெஸ்ஸி, நிச்சயமாக இது என்னுடைய கடைசி உலக கோப்பை. இந்த முடிவை எடுத்துவிட்டேன். உலக கோப்பைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். என்ன நடக்கப் போகிறது, இந்த உலக கோப்பை தொடர் எப்படிப் போகப்போகிறது என்ற பதற்றம் உள்ளது. இந்த தொடர் எங்களுக்கு சிறப்பாக செல்ல நான் ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். மெஸ்ஸியின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, லெவன்டியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி லா லிகா கோப்பையை கைப்பற்றியது. #LaLigaTitle #LionelMessi
    பார்சிலோனா:

    லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனில் வழக்கம் போல் 20 கிளப் அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் லெவன்டியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி 62-வது நிமிடத்தில் அடித்தார்.



    இன்னும் 3 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் பார்சிலோனா அணி பட்டத்தை உறுதி செய்தது. பார்சிலோனா அணி இதுவரை 35 ஆட்டங்களில் விளையாடி 25 வெற்றி, 8 டிரா, 2 தோல்வி என்று 83 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அட்லெடிகோ மாட்ரிட் 74 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரியல் மாட்ரிட் அணி 65 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.



    லா லிகா பட்டத்தை பார்சிலோனா அணி வெல்வது இது 26-வது முறையாகும். இவற்றில் பார்சிலோனா கோப்பையை வென்ற 10 தொடரில் மெஸ்சி அங்கம் வகித்துள்ளார். இதன் மூலம் பார்சிலோனாவுக்காக அதிக முறை லா லிகா கோப்பையை வென்றுத் தந்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
    பார்சிலோனா அணிக்காக கடந்த சீசனில் 68 போட்டியில் 34 கோல்கள் அடித்த மெஸ்சி, ஐந்தாவது முறையாக தங்க ஷூவை தட்டிச் சென்றார். #Messi
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளில் விளையாடும் வீரர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக கோல்கள் அடிக்கும் வீரர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் தங்க ஷூ வழங்கப்படும். 2017-18 சீசனில் பார்சிலோனாவின் மெஸ்சி, லிவர்பூல் அணியின் முகமது சாலா, டோட்டன்ஹாம் அணியின் ஹாரி கேன் ஆகியோருக்கிடையே தங்க ஷூவை பெற கடும் போட்டி நிலவியது.

    இறுதியில் 68 போட்டிகளில் 34 கோல்கள் அடித்த மெஸ்சி தங்க ஷூவை தட்டிச் சென்றார். மெஸ்சி இந்த விருதை ஐந்தாவது முறையாக வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்கு முறை வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 52 போட்டிகளில் 26 கோல்கள் அடித்திருந்தார்.

    தங்க ஷூவை வென்ற மெஸ்சி இதுபற்றி கூறுகையில் ‘‘உண்மையிலேயே நான் கால்பந்து போட்டியை தொடங்கும்போது இது நடக்கும் என்று நினைக்கவே இல்லை. நான் இந்த போட்டியை மிகவும் விரும்புகிறேன். இந்த விருதை மீண்டும் பெறுவேன் என்று நினைத்தது கிடையாது’’ என்றார்.
    பலோன் டிஆர் விருது இந்த வருடம் ஐந்து பேரில் ஒருவருக்குத்தான் கிடைக்க வாய்ப்பு உள்ளது கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். #BallorDor #Ronaldo
    கால்பந்து உலகில் மிகவும் உயரிய விருதாக பலோன் டி'ஆர் விளங்குகிறது. இந்த ஆண்டுக்கான விருது இன்னும் வழங்கப்படவில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி ஆகியோர்தான் இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். ஆனால் இந்த முறை முகமது சாலா, கிரிஸ்மான், வரானே, கலியான் மப்போ ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஐந்து பேரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என ரொனால்டோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து  கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில் ‘‘இந்த வருடம் மெஸ்சி விருதை வாங்குவாரா? என்பது தெரியவில்லை. ஆகவே, சாலா, மோட்ரிச், கி்ரிஸ்மான், வரானே அல்லது மப்பே ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புள்ளது’’ என்றார்.
    ×